Friday, March 1, 2013

வங்கிக் கணக்கில் தினமும் வரவு!



உங்கள் கணக்கில் உங்கள் வங்கி தினமும் 86400 ரூபாய் வரவு வைக்கிறது.

ஆனால் சில சட்ட திட்டங்கள் இருக்கின்றன.

எல்லாப் பணத்தையும் செலவழிக்க வேண்டும்.

கொஞ்சம் பணத்தை சேமித்து வைப்பதோ வேறு யாருக்கும் கொடுப்பதோ முடியாது .

செலவழிக்காமல் மிச்சம் இருக்கும் பணம்,மறுநாள் கிடைக்காது.

ஆனால்,மறுநாள் புதிதாக 86400 ரூபாய்கள் உங்கள் கணக்கில் வரவு வைக்கப் பட்டிருக்கும்!

இது தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கும்.ஆனால் திடீரென்று ஒரு நாள் இந்த ஆட்டம் நிறுத்தப்படும். உங்கள் கணக்கு முடிக்கப்படும்!

புதிய வரவுகள் கிடைக்காது.

இந்த மாதிரி நிகழ்வில் என்ன செய்வீர்கள்?

எவ்வளவு முடியுமோ அவ்வளவு செலவழிப்பீர்கள் அல்லவா?

ஒவ்வொரு பைசாவையும் ஏதாவது ஒரு வழியில் ,உங்களுக்காகவோ,மற்றவர்க்காகவோ செலவழிப்பீர்கள் அல்லவா?

இதுதானே நடந்து கொண்டே இருக்கிறது!

காலம் என்னும் வங்கி தினம் உங்கள் கணக்கில் 86400 விநாடிகள் வரவில் வைக்கிறது.

அதை நல்ல முறையில் செலவழிக்கிறீர்களா,எதுவும் செய்யாமல் வீணாக்குகிறிர்களா என்பது
உங்கள் கையில்!

நேற்றென்பது இன்று இல்லை.

நேற்றுக் கிடைத்த 86400 நேற்றோடு போயிற்று/

இன்று மீண்டும் 86400 கிடைக்கிறது.

திடீரென் ஒரு நாள் உங்கள் கணக்கு முன்னறிவுப்பு ஏதுமின்றி முடிக்கப்படலாம்.

எப்போதென்பது உங்களுக்குத் தெரியாது!

எனவே தினம் கிடைக்கும்,மதிப்பில் உயர்ந்த அந்த 86400 ஐச் சரியாகச் செலவழியுங்கள்.

வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழுங்கள்.

வாழ்த்துகள்!

29 comments:

  1. அடடா எந்த வங்கி இப்படி பணம் போடும் என நினைத்து வந்தேன் இப்படி ஒரு கருத்தா ஆனால் சிறப்பு

    ReplyDelete
    Replies
    1. காலம் என்னும் வங்கிதான்!
      நன்றி பிரேம்

      Delete
  2. யோவ்! நான் எவ்ளோ ஆசையா வந்தேன், இப்படி பண்ணிட்டீங்களே! ஹா ஹா ஹா!

    அருமையான சிந்தனை சூப்பர். அனைவரையும் கவரும் வண்ணம் இருக்கிறது. வாழ்த்துகள் நண்பரே!

    ReplyDelete
  3. 86400 முறை யோசிக்கவேண்டிய விஷயம்... ஒரே பதிவில் யோசிக்கவைத்துவிட்டீர்கள்.....

    ReplyDelete
    Replies
    1. யோசிப்பது நல்லதே!
      நன்றி ஸ்கூல் பையன்

      Delete
  4. இப்படியும் ஒரு கணக்கு உள்ளதோ?

    ReplyDelete
    Replies
    1. வாழ்க்கைக் கணக்கு!
      நன்றி கண்ணதாசன் ஐயா

      Delete
  5. வங்கியாளவர் அல்லவா? அதனால் தான் நேரத்தின் அருமையை புதிய முறையில் வரவு செலவு பற்றி சொல்லி சிந்திக்க வைத்திருக்கிறீர்கள்.
    அருமையான சிந்தனை.

    ReplyDelete
    Replies
    1. வாழ்க்கையில் எத்தனை வரவு செலவு!
      நன்றி சார்

      Delete
  6. Replies
    1. வருகைக்கு நன்றி சுப்ரமணியன்

      Delete
  7. சபாஷ்! எதையும் வித்தியாச பார்வையில் பார்க்கும் குட்டன், நேரத்தின் மதிப்பையும் அப்படியே புதுக் கோணத்தில் மனதில் நிற்கிற மாதிரி உணர வைத்திருக்கிறீர்கள். அருமை!

    ReplyDelete
  8. இதுதான் தலையை சுற்றி மூக்கை தொடுவதோ ஆனால் மூக்கை தொட்டு மூளையையும் தொட்டுவிட்டது விளக்கம்

    ReplyDelete
  9. காலத்தின் அருமையை தங்கமாக விளக்கிய பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

    ReplyDelete
    Replies
    1. நன்றி இராஜராஜேஸ்வரிம்மா!

      Delete
  10. நிறைய வாசகர்கள் உங்கள் பதிவுகளைப் படிக்க வைக்க இப்படி ஒரு தலைப்பா? ஆனாலும் மிக நன்றாக justify பண்ணிவிட்டீர்கள், குட்டன். வாழ்த்துகள்!

    ReplyDelete
    Replies
    1. எப்பொது தலைப்புக்கும் பதிவின் செய்திக்கும் சம்பந்தம் இருக்க வேண்டும்!
      நன்றி ரஞ்சனி நாராயணன் அம்மா!

      Delete
  11. 86400 என்ற போதே ஊகித்தேன்! நல்ல தலைப்பில் நல்லதொரு அறிவுரை! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  12. காலத்தின் கணக்கு அருமை.

    ReplyDelete
  13. வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழுங்கள்.. ஆஹா..

    ReplyDelete
  14. எப்படி தான் இதுலாம் யோசிச்சு கண்டுபுடிக்கரிங்களோ போங்க..நல்லா இருக்கு.

    ReplyDelete
  15. காலத்தின் அருமையை அழகாய் சொல்லி விட்டீர்கள் குட்டன்.

    ReplyDelete