Friday, May 10, 2013

கதை கேளு கதை கேளு!



”என்ன படிக்கிறாய்?” அப்பா கேட்டார்

சொன்னேன் நான்”ஒரு புதினம்”

”என்ன பயன் அதனால்

நன்மை வேண்டுமெனில்

வென்றவர் கதைகளைப் படி”

தந்தார் ஒரு நூல்  படிக்க

வந்தான் என் அண்ணன்

“என்ன படிக்கிறாய் தம்பி?”

”வென்றவர் கதையொன்றண்ணா”

”என்ன பயன் அதனால்

அன்பான அறிவுரைகள்தாம்

நன்கு முன்னேற தோற்றவர்

சொன்ன கதை படி!

வெற்றி பெறுவதற்கான

வழிகள்  உடன் கிடைக்கும்!”

உண்மைதான்

தோற்காமல் இருப்பதற்குத்  

தெரிந்து கொண்டோமென்றால்

வெற்றி உடன் தேடி வாராதோ!






6 comments:

  1. வெற்றி பெற்றவர்கள் தோல்வியையும் குறிப்பிட்டு எழுதி இருந்தால், அதுவே அவர்கள் மற்றவர்களுக்கு செய்யும் வெற்றி..

    எப்படியோ முதலில் படித்தால் சரி...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. தோற்றவரோ வென்றவரோ, நாம் படிக்கும் பழக்கத்தை விடாமல் இருந்தால் போதும்..

    ReplyDelete
  3. //நன்கு முன்னேற தோற்றவர்
    சொன்ன கதை படி!
    வெற்றி பெறுவதற்கான
    வழிகள் உடன் கிடைக்கும்!”//

    தந்தையை மிஞ்சிவிட்டார் தனயன்!

    ReplyDelete
  4. வென்றவர் கதைகளை கற்றால் உத்வேகம் பிறக்கும் தோற்றவர் கதைகளை படிக்கும் போது நிறைய படிப்பினைகள் கிடைக்கும்

    ReplyDelete
  5. சில வரிகளில் பலமான பதிவு

    ReplyDelete
  6. வெற்றியின் முதல் படி ..பற்றி படிப்பினைப்பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்...

    ReplyDelete