Monday, February 17, 2014

தேவர் போன்றவர் யார்?!



புராணங்களில் படித்திருக்கிறோம்,தேவர்கள் ,அசுரர்கள் என்பவர் பற்றியெல்லாம்.... இருவருக்கும் இடையே எப்போதும் போர் நடந்து கொண்டேதானிருக்கும்.தேவர்கள் தோற்றுக் கொண்டே தானிருப்பர்.அவர்களைக்காப்பாற்ற ஏதாவது ஒரு கடவுள் அவதாரம் எடுத்து வரவேண்டும்.

தேவர்கள் மேலுலக வாசிகள்.அமிர்தம் அருந்தியதால் சாகா வரம் பெற்றவர்கள்.ஆயினும் ஏன் தோற்கிறார்கள்?

அவர்கள் சுக வாசிகள்.மது,மாது என்று காலத்தைக் கழிப்பவர்கள்.தேவகுமாரர்கள் ஏதாவது தவறு செய்து ஏதாவது முனிவரிடம் சாபம் வாங்கியவாறு இருப்பர் .அவர்கள் தலைவனான தேவேந்திரனே அப்படித்தான்!கௌதமர் என்ற முனிவரின் மனைவியாகிய அகலிகை மீது காம வசப்பட்டு கௌதமர் உருவந்தாங்கிச் சென்று அகலிகையைக் கூடி அதன் பயனாய் முனிவரால் உடலெல்லாம்  கண்ணாகச் சபிக்கப்பட்டவன்!(இங்கு கண் என்பது இடக்கரடக்கல்!).

ஆகவே நாம்தெரிந்து கொள்வது அவர்கள் மனம் போன போக்கில் நடப்பவர்கள் என்பதே.

வள்ளுவர் சொல்கிறார்,இந்தத்தேவர்களைப் போன்றவர் யார் என்று…….

 “தேவர் அனையர் கயவர் அவருந்தாம்
  மேவன செய்தொழுக லான்”…..( குறள்-1073)

அதாவது  தாம்  விரும்புகின்றவற்றைச் செய்து மனம்போன போக்கில் நடப்பதால்,கயவர் தேவர்களைப் போன்றவர்.

வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல் எவ்வளவு அழகாகச் சொல்லிவிட்டார் அய்யன் வள்ளுவர்!

எப்படி அங்கதம் ?!


15 comments:

  1. //இங்கு கண் என்பது இடக்கரடக்கல்!//

    தமிழ் இலக்கணம் தெரியாதவர்களுக்கு இது புரியாமல் போகலாம். ஆனாலும் நீங்கள் சொல்ல வந்ததை அந்த கதையைப் படித்தவர்கள் புரிந்துகொண்டிருப்பார்கள்.

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் சொல்வது சரிதான் ஐயா!
      வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

      Delete
  2. எங்கு சுகம் அதிகமாகிறதோ அங்கு கஷ்டமும் அதிகம் இருக்கும்! நடைமுறையிலேயே இதை தெரிந்து கொள்ளலாம்! நல்ல பகிர்வு! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சுரேஷ்

      Delete
  3. அப்படிச் சொல்லுங்க ஐயா...!

    வள்ளுவர் எப்பேர்ப்பட்டவர்...!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி தனபாலன்!

      Delete
  4. வள்ளுவர் தீர்க்கதரிசிதான்

    ReplyDelete
  5. வருகைக்கு நன்றி ராஜி அவர்களே(வலைச்சர மும்முரத்திலும்!)

    ReplyDelete
  6. நானும்கூட ஏதோ புதுவகை டிபன் பத்தி சொல்லிருக்கீங்களோன்னுல்ல நெனச்சேன்... இடக்கரடக்கல்ன்ற வார்த்தையப் பார்த்ததும்! ஹி... ஹி... ஹி...! அதிகமா சுகபோகத்துல திளைச்சா, மூளை மழுங்கிப் போய் திமிர் கூடிடறது இயற்கை. அதனோட ‘ஊசி’(பின்) விளைவுதான் தேவர்கள் அனுபவிக்கிற துன்பங்களும். வள்ளுவருக்கு இணைசொல்ல எவரும் உண்டோ?

    ReplyDelete
    Replies
    1. சரிதான்.
      நன்றி பாலகனேஷ்

      Delete
  7. வள்ளுவர் இந்த கோணத்தில் யோசித்து பார்த்து இருப்பாரான்னு தெரியலே ,உங்கள் ஆராய்ச்சி அருமை !
    த ம 8

    ReplyDelete
  8. விளக்கம் அருமை!

    ReplyDelete