Monday, March 24, 2014

அடக்க முடியாத ஒன்று!



விரைவாகச் சென்று கொண்டிருந்த பேருந்து அந்தப் பரபரப்பான சாலையோரம் ஒதுங்கி நின்றது.

அதிலிருந்து ஒரு பெண்ணும் சிறுவனும் வேகமாக இறங்கினர்.

சாலையோரம் இருந்த மின் இணைப்புப் பெட்டியின் பின் பையனை அழைத்துச் சென்ற பெண் அவன் கால்சட்டையின் பற்பிணையைத் திறந்து விட்டாள்,

சிறுவன் விரைவாகத் தன் வேலையை முடித்துக் கொண்டு திரும்பினான்.

அவன் முகத்தில் ஒரு நிம்மதி.

அவனை அழைத்துக் கொண்டு அந்தப் பெண் பேருந்தில் ஏறினாள்.

ஓட்டுநரின் பின் இருந்த இருக்கையில் சென்று அமர்ந்தாள்.

ஓட்டுனர் முகத்தில் வாய் விரிந்த சிரிப்பு. மனிதாபிமானச் சிரிப்பு!

பேருந்து புறப்பட்டது!

இது சென்னை மாநகரில் நிகழ்ந்த சம்பவம்!

இப்போது இந்தக் காட்சியைக் கத்தரிப்போம்,

ஒரு மகிழ்வுந்து விரைவாகச் சென்று கொண்டிருக்கிறது,

ஒரு பெரியவர் ஓட்டிக் கொண்டிருக்கிறார்.

அருகில் ஒரு இளைஞன்.

தவித்துக் கொண்டிருக்கிறான்.

”அப்பா!இன்னும் எவ்வளவு தூரம்” என வினவுகிறான்.

கொஞ்ச தூரமே என அவர் சொல்கிறார்.

வண்டியில் இருக்கும் பெண்கள் கைபேசியில் ஏதோ பாட்டுப் போடுகின்றனர்;பையனைக் கிண்டல் செய்வது போல் உள்ளது.

அவனுக்குக் கோபம் வருகிறது.

வண்டி நிற்கிறது.

பையன் அவசரமாக இறங்கி  அங்கு இருக்கும் கழிப்பறைக்குச் செல்கிறான்.

கழிப்பறை பூட்டப்பட்டு இருக்கிறது!!

இது தொலைக்காட்சியில் ஒரு விளம்பரம்.

வாழ்க்கையைத்தானே பிரதிபலிக்கின்றன விளம்பரங்கள்!

பேருந்துச் சிறுவனைப் போல் இவனும் சாலை ஓரம் ஒதுங்கியிருந்தால் பிரச்சனையே இல்லையே!

ஆத்திரத்தை அடக்கலாம்!!
........................................!!!

6 comments:

  1. உண்மைதான்! கழிப்பறை வசதிகள் இல்லாத நாடு நமது நாடு!

    ReplyDelete
  2. நமது நாட்டில் அதிகம் தேவை இந்த வசதியும்... இருப்பவையும் சுத்தமில்லை! :(

    ReplyDelete
  3. உங்களுக்கென்று செய்திகள் கிடைப்பதுதான் ஆச்சரியம்!

    ReplyDelete
  4. கடைசி வரியில் கேள்விக் குறி மிஸ்ஸிங் ஏன் ? உங்களாலும் அடக்க முடியலையா ?
    த ம +1

    ReplyDelete
  5. பற்பிணை ... நல்ல வார்த்தை..

    பையனாவது பரவாயில்லை.. பெண்களுக்கு இந்த பிரச்சனை வரும்போது என்ன செய்வார்கள்! பள்ளியில் எந்த பராமரிப்பும் இல்லாத கழிப்பறைகளின் காரணமாக காலை முதல் மாலை வரை அடக்கிக்கொண்டு பின் அதனாலேயே ப்ளாடரில் கல் போன்ற பாதிப்படைபவர்கள் எத்தனை பேர்!

    இதையெல்லாம் விட்டார்கள்.. மார்ஸுக்கு ராக்கெட் விடக் கிளம்பிவிட்டார்கள்!

    எல்லா மக்களுக்கும் எளிதில் கழிப்பறை வசதி செய்து கொடுக்க வக்கில்லாத அரசுகள்!

    ReplyDelete