Wednesday, August 19, 2015

ராமு,சோமு மற்றும் பதிவர் திருவிழா!என்னப்பா,சோமு எஎப்படியிருக்கே?

அடடே! ராமு அண்ணனா?நல்லா இருக்கேண்ணே.உங்களைப் பாத்து நாளாச்சு?

ஆமாம்பா.வெளியூர் போயிருந்தேன்.வேற என்ன முக்கிய விசயம்.?

எங்க முதலாளி அக்டோபர் மாசம் புதுக்கோட்டை போறாராம்.இன்னைக்கு டிக்கெட் எல்லாம் பதிவு செஞ்சிட்டாரு. 

ஏதாவது ஆபிஸ் விசயமா இருக்கும்.

இல்லண்ணே.அங்கே எதோ மாநாடு நடக்கப் போவுதாம்!

என்னது மாலாடா?

போங்கண்ணே! மாலாடும் இல்ல;பூந்தி லட்டும் இல்ல,பதிவர் மாநாடு;சந்திப்பு;திருவிழா   இப்படி என்னல்லாமோ சொன்னாரு.

அதென்னப்பா?

அதாண்ணே.நான் முன்னாலயே சொல்லியிருக்கேன் இல்ல.எங்க ஐயா ஆபிஸ் நேரம் போக வீட்டில் இருக்கும்போதெல்லாம் அந்தக் கம்பியூட்டர் முன்னால உக்காந்து ஏதோ தட்டிக் கிட்டே இருக்காருன்னு.வலைப்பதிவு எழுதறாராம்

என்னப்பா எழுதுவாங்க?கதையா?

கதை,கவிதை,செய்தி,சினிமா,சின்னப்புள்ளயா இருக்கச்சே கிட்டிப்புள் வெளையாண்டது, வாழ்க்கையில நடந்தது,நடக்காதது,சாப்பிட்டது எங்க என்ன சாப்பாடு நல்லாருக்கும்,எப்புடிச் சமைக்கறது அப்படின்னு,ஜோக்,இப்புடி எது வேணா எழுதுவாங்களாம்.எங்க ஐயா சொல்லிட்டிருந்தாரு, குட்டன்னு ஒருத்தர் மொக்கையா எழுதுவாருன்னு!

அப்படியா?

ஆமாண்ணே! அம்மாவுக்கு இதனால கோபம்.வீட்டுக்கு வந்தா கம்பியூட்டர்ல போய் முகத் தைப் புதைச்சுக்கிறீங்க.ஆபிஸ்லயும் எங்க வேலை பாக்குறீங்கன்னு  சத்தம் போடுவாங்க.

ஆபிஸ்லயுமா?

ஆமாங்கண்ணே பிளஸ்ஸோ மைனஸ்ஸோ என்னவோ சொன்னாங்க. அதுல,மத்தியானச் சாப்பாட்டைப் படம் பிடுச்சுப் போடுறது,சாயங்காலம் சுண்டல் பஜ்ஜி ,டீன்னு படம்,போற வழில என்ன நடந்ததுன்னு எழுதறதுன்னு ஏதாவது செஞ்சுக்கிட்டே இருபாய்ங்க போல! அப்புறம் முகநூலாம் அதுல காலை வணக்கம்,மாலை வணக்கம்,சினிமா பாக்கிறேன், சாப்பிடறேன், தூங்கப் போறேன் இப்படியெல்லாம் எழுதுவாங்களாம்.

சுவாரஸ்யமா இருக்குதேப்பா?

வலைப்பதிவுல என்னவோ எலக்சன் மாதிரி ஓட்டெல்லாம் உண்டாம்.எவ்வளவு வந்திச்சு,யார் கருத்துச் சொன்னாங்கன்னெல்லாம் பாத்திட்டிருப்பாங்களாம்! மொய் வசா திருப்பி மொய் வக்கிற மாதிரிப் பழக்கம் அங்கயும் உண்டாம்.

இதுக்கு முன்னால இது மாதிரி மாநாடு நடந்திருக்குதாமா?

ஆமாண்ணே.2012,2013,ரெண்டு வருசமும் சென்னையிலே,போன வருசம் மதுரையில எல்லாம் பிரம்மாண்டமா நடந்துதாம்!அதுனால இந்த வருசம் புதுக்கோட்டைக் காரங்க எல்லாத்தையும் பீட் பண்ணிடனுன்னு முடிவோட வரிஞ்சு கட்டிக்கிட்டுக் களத்தில எறங்கிட் டாங்களாம்.கவிஞர் முத்துநிலவன்னு ஒருத்தர்தான் பொறுப்பேத்துக்கிட்டிருக்காராம்.

நல்லா நடக்கட்டும்,உன் எசமான் போயிட்டு வந்து வெவரம் சொன்னா எனக்கும் சொல்லு. தெரிஞ்சுக்கிறேன்.வர்ரேன்பா.

போயிட்டு வாங்கண்ணே!

19 comments:

 1. குட்டனும் வருவீர்கள் என்று நம்புகிறேன்....

  ReplyDelete
  Replies
  1. இன்ஷா அல்லா!

   நன்றி ஸ்கூல் பையன்

   Delete
 2. இந்த வலைப்பதிவர் சந்திப்பு நடக்கும் வரை ராமு,சோமு அவ்வப்போது வந்து தகவல்களை சொல்லிக்கொண்டிருப்பார்கள் என நம்புகிறேன்.

  ReplyDelete
  Replies
  1. நானும் நம்புகிறேன்
   நன்றி

   Delete
 3. பதிவு செய்துவிட்டேன்
  விழாவில் சந்திக்க முடிந்தால் மகிழ்வேன்
  வாழ்த்துக்களுடன்...

  ReplyDelete
 4. வணக்கம்
  விழாபற்றி சொல்லிய விதம் நன்று... சிறப்பாக நடைபெற எனது வாழ்த்துக்கள் த.ம 4

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. என் வாழ்த்துகளும்
   நன்றி:

   Delete
 5. விழா சிறக்க வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 6. மாநாடு பற்றி விதம் விதமாக தகவல் சொல்லி வருகின்றீர்கள் சுவாரஸ்யமாக....

  ReplyDelete
 7. நல்ல சுவாரஸ்யம் நண்பரே...
  மொய்ப்பணம் 8

  ReplyDelete
  Replies
  1. நன்றி.
   பதில் மொய் உண்டு!

   Delete
 8. மொய்யை மறன்னு பதிவர்களுக்கு சொல்ல முடியாதே :)

  ReplyDelete
  Replies
  1. மெய்யை மறந்தாலும் மொய்யை மறவாதே!
   நன்றி

   Delete
 9. விழா சிறக்க எனது வாழ்த்துகளும்!

  ReplyDelete