Tuesday, November 20, 2012

சென்ஸார் தங்கமணி!!



இன்று காலை முகச் சவரம் செய்து கொண்டிருந்தேன்.

“என்னங்க....”தங்கமணியின் கூப்பாடு!

திடுக்கிட்டதில் கை நடுங்கி ரேசர் ,தாடியோடு சிறிது குருதியையும் சேர்த்து எடுத்து விட்டது.

”என்ன ஆச்சு?ஏன் இப்படி அலறுகிறாய்?”

”நான் அன்னைக்கே சொன்னேனே!இந்த வலைப்பூவெல்லாம் வேண்டாம்னு. இன்னைக்குப் பாருங்க.முகநூலில் எழுதிய கருத்துக்காக இரண்டு இளம் பெண்கள் கைது செய்யப்பட் டிருக்காங்க”.

”செல்லம்!அப்படியெல்லாம்  சர்ச்சைக்குரிய எதையும் நான் எழுத மாட்டேன்; உனக்குத் தெரியாதா?உன்னோட  அங்கீகாரம் இல்லாம எதுவும் வலையேற்ற  மாட்டேன்.டிராஃப்ட் எழுதி சேமித்து உன்னிடம் காட்டி விடுகிறேன். வேணுமின்னா ஒரு நாலைந்து எழுதிச் சேமித்து நீ படித்த பின் ஒவ்வொன்றாக வெளியிடுகிறேன்.உனக்கு ஒரு விஷயம் தெரியுமா ?”

”ஒரு பிரபல பதிவர் கிட்டத்தட்ட 60 பதிவுகள் டிராஃப்ட் ஆகச் சேமித்து வைத்திருக்கிறாராம்! பிரமிப்பா இல்ல!”

“இதோ பார்!இன்னைக்குப்பதிவு!பிரச்சினையே இல்லாத பதிவு!இப்படியே எழுத வேண்டிய துதான்!

படிக்கிறாள்.கண்களைத் துடைத்துக் கொள்கிறாள்.

”உம்,சரிதான் .வெளியிடுங்க!எனக்கும் இது மாதிரிதான் நடக்கணும்னு ஆசை!”

அணைத்துக் கொண்டேன்!

இதோ பதிவு!


நாடகத்திலும் காவியத்திலும் படித்ததுண்டு.

அவற்றில் எழுதப்பட்டது வெறும் கற்பனையல்ல;நிஜ வாழ்க்கையின் பிரதி பலிப்புதான் என்பது இன்று புரிகிறது.

கணவன் இறந்தும் அதைப் பார்த்து,அந்த செய்தி கேட்டுத் தானும் உயிர் துறக்கும் மனைவி காவியத்தில் மட்டுமில்லை,இதோ இங்கிருக்கும் புன்னப்பாக்கத்திலும்தான். 

எழுபது ஆண்டுகளுக்கு முன் திருமணத்தில் இணைந்தவர்கள்இவர்கள்.வயது –கணவனுக்கு 91,மனைவிக்கு 82.தீபாவளிக்காக மகன் வீட்டுக்குச் சென்றனர். கால்நடைப் பராமரிப்புக்காகக் கணவன் ஊருக்குத் தி ரும்பி விட மனைவி அங்கு தங்கினாள்.ஞாயிறுகாலை கணவன் உயிர் பிரிந்தது.அந்தச் செய்தி மனைவிக்குத் தெரிவிக்கப்பட்டது.செய்தி கேட்டு அவள் சுருண்டு விழுந்தாள். மருத்துவ மனைக்குக் கொண்டு சென்றனர்.அவள் உயிர் பிரிந்து விட்டதாகத் தெரிந்தது!

ஒருவரை ஒருவர் சார்ந்திருக்கும் தம்பதியில் ஒருவரின் பிரிவு மற்றவருக்கு ஏற்படுத்தும் அதிர்ச்சியின் விளைவே இது!

”உடம்பொடு உயிரிடை என்னமற் றன்ன
மடந்தையொடு எம்மிடை நட்ப”ு
 



7 comments:

  1. அவ்வளவு பாசப் பிணைப்பு...?!
    tm2

    ReplyDelete
  2. அவர்களது அன்னியோன்யம்
    பிரமிக்கச் செய்கிறது
    இரு விஷயங்களை இணைத்த விதம் அருமை
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. ஈருடல் ஓருயிராக இருபவர்காலின் மனோ நிலை இதுதான்.

    ReplyDelete
  4. நல்ல கதைக்களம்.சட்டென முடித்துவிட்டீர்கள்.

    ReplyDelete
  5. பிரச்சினையே இல்லாத பதிவு!

    ReplyDelete