Showing posts with label அரசியல். Show all posts
Showing posts with label அரசியல். Show all posts

Friday, March 28, 2014

கருத்துக்கணிப்பும்,மதச்சார்பின்மையும்!




இந்தக் கருத்துக் கணிப்பு மிக நேர்மையாக,சார்புகள் எதுவும் இன்றி நடத்தப்படுகிறது.

எல்லா வகுப்பைச் சேர்ந்தவர்களும் சரியாவிகிதாசாரத்தில் கணிப்பில் வாக்களிக்கச் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள்.

வாக்களிப்பவர்கள் சொல்லும் வார்த்தைக்குக் கட்டுப்பட்டு நடப்பவர் பலர் இருக்கும் படியான ஒரு அளவு கோலைக் கருத்தில் கொண்டே இக் கருத்துக் கணிப்பு நடத்தப் படுகிறது.

உங்கள் ஒவ்வொருவரிடமும் ஒரு சீட்டு கொடுக்கப்படும்.அதில் இருப்பவற்றில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து குறியிட்டுப் பெட்டியில் போடவும்.

வாக்குப்பதிவு முடிந்த்தும்,வாக்குகள் எண்ணப்பட்டு,கருத்துக்கணிப்பின் முடிவுகள் அறிவிக்கப்படும்.”

“ஏதாவது கேள்விகள் உண்டா?”

ஐமபது மாணவர்கள் கூடியிருந்த அக்கூட்டத்தின் முன் நின்று அந்த இளைஞன் சொல்லி முடித்தான்.

கூட்டத்திலிருந்து ஒரு மாணவன் கேட்டான்”இதில் குறிப்பிடப்பட்டிருக்கும் பெயர்கள் பற்றி ஒரு சந்தேகம்”

”என்ன?”

”கல்லூரிப் பேரழகியைத் தேர்ந்தெடுக்கும் கருத்துக் கணிப்பு இது.இதில் உள்ள பெயர்கள்.. திவ்யா,மும்தாஜ்,எஸ்தர்,அமர்ஜித் கௌர்.ஆனால் பேரழகிகளில் ஒருத்தி எனச் சொல்லப் படக்கூடிய ராதாவின் பெயர் இதில் ஏன் இல்லை?”

முதல் மாணவன் சொன்னான்”நீ சொல்வது உண்மைதான்.ஆனால் இது மதச் சார்பற்ற கருத்துக்கணிப்பு.எனவே அந்த அடிப்படையிலேயே பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன.நம் மதச் சார்பின்மையை நாம் நிலை நாட்டுவோம்!”

எல்லா மாணவர்களும் பலத்த கரவொலி எழுப்பினர்

“தலைவன் நீதான்”என ஒருமித்துக் குரல் எழுப்பினர்.

வாக்களிப்பு தொடங்கியது!

Saturday, September 14, 2013

தாமரை வெல்லும்!



தாமரை என்றால் என்ன?
நமக்குத் தெரிந்த வரை ஒரு மலர்.
தாமரை மலரே இலக்குமியின் இருக்கையாம்.

கண்களைத் தாமரைக்கு ஒப்பிடுதல் வழக்கம்.

வடமொழியில் ராஜீவ லோசன என்பர்.

ஆனால் தாமரை எனபது ஒரு எண்ணிக்கையையும் குறிக்குமாம்.


இதோ ஒரு கம்ப ராமாயணப் பாடல்.....

தாமரைத் தலைய வாளி, தாமரைக் கணக்கின் சார்ந்த,
தாம் வரத் துரந்து, முந்தி, தசமுகன் தனயன் ஆர்த்தான்;
 தாமரைத் தலைய வாளி, தாமரைக் கணக்கின் சார்ந்த,
தாம் வரத் தடுத்து வீழ்த்தான், தாமரைக்கண்ணன் தம்பி.

பத்துமுக இராவணன் மகனான இந்திரசித்து,தாமரை வடிவில்  தலை உடைய , தாமரைக் கணக்கிலானலான  அம்புகளை இலக்குவன் மேல் செலுத்தி ஆர்ப்பரித்தான்

தாமரை போன்ற கண்களை உடைய இராமனின் தம்பியாகிய இலக்குவன்
,தானும் தாமரை வடிவில் தலை உள்ள அம்புகளை தாமரைக் கணக்கில் விட்டு இந்திர சித்தின் அம்புகளைத் தடுத்து வீழ்த்தினான்
 
தாமரைக் கணக்கின்” என்றால் என்ன அர்த்தம்?

வடமொழியில் த்மம்என்று ஓர் எண் உள்ளதாம். அது, நூறு லட்சம் கோடி, . அதாவது கோடிகோடி.

அந்தப் த்த்தை, கம்பர் தாமரைஎன்று மொழிபெயர்க்கிறார் என்று சொல்கிறார்கள்

இந்திரசித்து  தாமரை மலர் வடிவத்தில் நூறு லட்சம் கோடி அம்புகளைச் செலுத்த (தாமரைத் தலைய வாளி தாமரைக் கணக்கில்), பதிலுக்கு லட்சுமணனும் அதேபோன்ற  நூறு லட்சம் கோடி அம்புகளைச் செலுத்தி அவற்றை முறியடிக்கிறான்.

எப்படித் தாமரை விளையாட்டு? !



Thursday, June 6, 2013

ஆடை இன்றிப்போன அரசன்!



அரசன் ஒருவனுக்கு வந்ததொரு ஆசை!

அணிய வேண்டும் ஒரு மெல்லிய ஆடை

அழைத்தான் நாட்டின் நெசவாளர்களை

ஆணையிட்டான் தன் ஆசையை நிறைவேற்ற

ஆடைகள் பல வந்து குவிந்தன அரண்மனையில்

அழகு பட்டில், பஞ்சில்,பருத்தியில் பலப்பல

அத்தனையும் ,மோதிரத்தில் நுழையும் அளவே!

அரசனுக்கு அவை எல்லாம் ஆசைப்படி இல்லை

அடியோடு நிராகரித்தான் அனைத்து ஆடைகளையும்

அப்போது வந்தான் அந்த நெசவாளி

அரசே பாருங்கள் ஆடை இதன் நேர்த்தியை

அத்தனை மென்மை கண்ணுக்கே தெரியாது

ஆடை தெரிவதற்கு கலைக்கண் வேண்டும்

அறிவு வேண்டும் அரும் பெரும் மாட்சி வேண்டும்.

அரசனும் பார்த்தான்;ஏதும் தெரியவில்லை

ஆனாலும் சொல்லப் பயம் அறிவில்லை என்றாமோ?

ஆடையை அரசனுக்கு அணிவித்தான் நெசவாளி

அரசனும் புறப்பட்டான்  ஊர்வலம் நாட்டோர் காண

அத்தனை பேரும் அச்சத்தில் வாய்மூடி நின்றிருக்க

அலறி எழுந்தது ஒரு குரல் அனைவரும் கேட்க

“அய்யய்யோ அரசர் அம்மணமாய்ப் போகிறார்!”

அச்சம் அறியாத சிறுவனவன்!

அடடா!அச்சிறுவன் எங்கே போனான் ?


ஆயிரமாய்,லட்சமாய்க் கோடி கோடியாய் வா!