Tuesday, November 3, 2015

மொச்சைக் கொட்டைச் சுண்டல்!



முஸ்கி!:இதைப் படிக்குமுன் ஒரு ஊதுபத்தியைக் கொளுத்தி அருகில் வைத்துக் கொள்ளவும்!

நவராத்திரியின்போது நண்பர் வீட்டுக் கொலுவுக்கு அழைத்திருந்தார்கள்

போயிருந்தேன்

அன்று அவர்கள் வீட்டில் மொச்சைக் கொட்டை சுண்டல்

ஒரு தொன்னையில் கொடுத்தார்கள்.

அப்படி ருசியான சுண்டல் நான் சாப்பிட்டதே இல்லை.

சாப்பிட்டு முடித்தேன்

நாக்கு இன்னும் வேண்டும் என ஏங்கியது

சப்புக்கொட்டியது

அவர்கள் புரிந்து கொண்டு இன்னும்கொஞ்சம் தரவா என்றார்கள்

தலையசைத்தேன்

வந்தது; சாப்பிட்டேன்

இன்னும் கொஞ்சம் கேட்க ஆசை.ஆனால் தயக்கமாக இருந்தது.

புறப்படும் போது ஒரு பொட்டலம் கட்டிக் கொடுத்தார்கள்

வீடு செல்லும் வழியில் அதையும் காலி செய்தேன்

விட்டை அடையும்போது வயிற்றில் ஒரே கடமுடா!

என் மனைவி எங்கே போயிட்டிங்க?உங்களுக்கு ஒரு ஆச்சரியம் காத்துக் கொண்டிருக்கிறது என்று கூறி என் கண்களைத் துணியால் கட்டி அழைத்துச் சென்று நாற்காலியில் உட்கார வைத்தாள்

நான் சொல்லும் வரை திறக்கக் கூடாது என்று சொல்லும்போதே அடுத்த அறையில் போன் அடித்தது;அவள் போய்விட்டாள்

நிம்மதியாகக் கொஞ்சம் வாயுவை வெளியேற்றினேன்

பிறகும் கடமுடா மீண்டும் வாயு.

என்ன நாற்றம்!

மனைவி வந்தான்; கண்கட்டை அவிழ்த்தான்

பார்த்தேன்;

எதிரே என் உறவினர் பலர் மூக்கைப் பொத்தியபடி ”பிறந்துநாள் வாழ்த்துகள்” என்றனர்.

டிஸ்கி:ஆங்கிலத்தில் படித்தது;கொஞ்சம் மாற்றித் தமிழாக்கியிருக்கிறேன்

8 comments:

  1. ஹாஹாஹா ரசித்தேன் குட்டன்ஜி நாற்றத்தையும்....
    தமிழ் மணம் 2

    ReplyDelete
  2. சிரிச்சு மாளல குட்டன் ஜி!
    த ம 4

    ReplyDelete
  3. ஹஹஹஹஹ் செம! சிரிச்சு சிரிச்சு....பிதாமகன் படத்துல சூர்யா இந்த வாயுவுக்கு ஒரு மருந்து விற்கும் காட்சி அது நினைவுக்கு வர உங்கள் பதிவோடு அதையும் இணைத்துச் சிரிக்க தாங்கல..

    ReplyDelete
  4. முஸ்க்கிக்கான காரணம் புரிந்தது :)

    ReplyDelete
  5. நாற்றம் என்றால் நறுமணம் அல்லவா? பதிவை இரசித்தேன்!

    ReplyDelete
  6. ஹாஹா.ஹா... சாப்பிட்ட உடனே அதன் Effect தெரிஞ்சுடுச்சு போல! :)

    ReplyDelete