Saturday, May 4, 2013

நவீன சாலமோன்!....



சாலமோன் என்றொரு மன்னன் இருந்தான் .

அவன் சிறந்த அறிவாளியாக விளங்கினான்.

ஒரு நாள் ஒரு சிக்கலான வழக்கொன்று அவன் முன் வந்தது.

ஒரு பச்சிளங்குழந்தைக்குத் தானே தாய் என இரு பெண்கள் வாதிட்டனர்.

சாலமோன் யோசித்தான்.

பின் சொன்னான்”இருவரும் தன் குழந்தை எனச் சொந்த கொண்டாடுவதால்,குழந்தையை இரண்டாக வெட்டி இருவருக்கும் ஒரு பகுதி கொடுத்து விடலாம்”

ஒரு பெண் சொன்னாள் அதுதான் சரி என.

மற்றொரு பெண் பதறினாள்

“அரசே குழந்தையைக் கொன்று விடாதீர்கள்!அவளே வைத்துக் கொள்ளட்டும் “என்றாள்

உண்மையான பாசம் உள்ள இவளே தாய் என சாலமோன் தீர்ப்பளித்தான்.

இன்றைய செய்தித் தாளில் ஒரு சாலமோனின் தீர்ப்பைப் பற்றிப் படிக்க நேர்ந்தது.

ஒரு ஆட்டுக்குட்டி.

அதை இன்னொருவன் திருடி கசாப்புக் கடைக்காரனிடம் ரூ.3700 க்கு விற்று விட்டான் என்று ஒருவன் பிராது கொடுத்தான்.

காவல் துறை ஆட்டுக்குட்டியைக் கைப்பற்றி வழக்குப் பதிவு செய்தனர்.

பிராது கொடுத்தவன் ஆட்டுக்குட்டி தன்னிடம் வர வேண்டும் அதன் தாய் ஆடு தன்னிடம் இருக்கிறது எனக் கூறினான்.

இதைக் குற்றம் சாட்டப் பட்டவன் மறுத்தான்.தாய் ஆடு தன்னிடம் இருப்பதாகச் சொன்னான்.

நீதிபதி யோசித்தார்.

இரண்டு ஆடுகளையும் கொண்டு வரச் சொன்னார்.

ஆட்டுக்குட்டியை அவிழ்த்து விட்டதும் அது வேகமாக ஒரு ஆட்டிடம் ஓடிப் பால் குடிக்க ஆரம்பித்தது.மற்ற ஆடு அதைப் பார்த்துக் கொண்டிருந்தது.

நீதிபதி உடனே தீர்ப்புச் சொன்னார்!

நடந்த இடம் கண்ட்வா! மத்தியப் பிரதேசம்.

சாலமோனின் பெயர்ஜி.ஸி.துபே!
.................................................................................
மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. பாரதி சொன்னான்

”பட்டங்களாள்வதும் சட்டங்கள் செய்வதும்
பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்”

இந்த ஆண்டு ஐஏஎஸ்.....தேர்வுகளில் வெற்றி பெற்றவர்கள் பட்டியலில் முதல் 25 இடங்களில் 12 பேர் பெண்கள்.அகில இந்திய அளவில் முதல்,மூன்றாவது இடம் பெண்களுக்கு.

வெல்க பெண்மை.

ஆனால் முடிவுகளைப் பார்க்கும்போது ஒரு சிறு உறுத்தல்.

மருத்துவம்,பொறியியல் படித்தவர்கள் அநேகர் தேர்வு பெற்றிருக்கிறார்கள்.அதிலும் மருத்துவத்தில் எம்.டி.பட்டம் வேறு.

இது சரியா?

என்ன குறிக்கோளுடன் மருத்துவமோ,பொறியியலோ படித்தார்கள்?

புரியவில்லை!

7 comments:

  1. சுவையான செய்திகள்! நன்றி!

    ReplyDelete
  2. யாரோ ஒருவரின் மருத்துவ வாய்ப்பை தட்டி பறித்து விட்டார்கள் .

    ReplyDelete
    Replies
    1. வழிமொழிகிறேன்

      Delete
  3. இன்றைய செய்திகளை அருமையான கதம்ப மாலையாக்கித் தந்தமைக்கு நன்றி! IAS தேர்வான மருத்துவர் சென்னை மருத்துவக் கல்லூரியில் தங்க மெடல் பெற்றவராம். இவர் படித்த பதிப்பு வீணாய் போகிறதே என்ற வருத்தம் எனக்கும் உண்டு.

    ReplyDelete
  4. நல்ல சுவையான தீர்ப்புகள். சரியான கேள்வி, இப்படித்தான் பல பேர் நம் நாட்டில் பல குழப்பங்கள் செய்துகொண்டிருக்கின்றனர்.

    ReplyDelete
  5. நவீன சாலமன் பற்றிய தகவல் அருமை.

    ReplyDelete
  6. பயனுள்ள தகவல்கள் நன்றி

    ReplyDelete