Saturday, June 22, 2013

எத்தனை அழகு இருபது வயதினிலே!



அப்படி ஒரு அழகு அவள்!

எப்படி நான் விலகுவேன் அவளை விட்டு?

கல்லூரி சென்றாலும்

கடற்கரை சென்றாலும்

கண்டிப்பாய் பின் செல்வேன்.

கடைக்கண் பார்வைக்காய் காத்திருந்தேன்!

கரும்பாய் ஒரு மொழி சொல்வாளா?

திரும்பிப் பார்த்தாள் ஒரு நாள்

"ஏன் என்னை எப்போதும் தொடர்கிறாய்?”

திகைத்தேன்;தடுமாறினேன்

தயங்கி வந்தன சொற்கள்

“காதலிக்கிறேன் உன்னை”

சிக்கனமாய்ச் சிரித்தாள்!

கேட்டாள்”நான் அழகென்பதாலா?

என்னை விட அழகு என் தோழி

உன் மனம் அவளிடம் மயங்கும்

உன் பின்னால்தான் வருகிறாள்பார்!”

திரும்பிப்பார்த்தேன்;யாருமில்லை

திரும்பினேன் மீண்டும்.

ஏளனமாய்ச் சொன்னாள்

”என் மீது காதல் கொண்டிருந்தால்

என்னிலும் அழகி காண

விரும்பியிருக்க மாட்டாய்.

விலகிச் செல் உடனே இங்கிருந்து!”

அவள் சொன்னது சரிதானோ?



(அழகிகள்தானே காதலிகளாக முடியும்?அழகாயில்லாதவள்?,,,தங்கைதான்!)
 



8 comments:

  1. // அழகிகள்தானே காதலிகளாக முடியும்?//
    இதை இப்படி சொல்லலாமே? காதலிகள் எல்லாம் அழகானவர்கள் என்று!

    ReplyDelete
  2. ஹி ஹி பேராசை பெருநட்டம் பாஸ்

    ReplyDelete

  3. காதல் பிதற்றலாக உள்ளதே சகோ!
    இனிய வாழ்த்து
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  4. அட அவள் சொன்னது சரிதான் போல! ஆனா லவ் பண்ண முதலேயே இப்படி டெஸ்டா?

    அருமையான கதை குட்டன்!!

    ReplyDelete
  5. அருமையான படைப்பு! அழகில் பிறந்தாலும் அழகில் முடிவது இல்லை காதல்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  6. ஹா ஹா . அப்போ மனைவியாவது ?

    ReplyDelete
  7. அடடே... அவள் சொன்னதும் நியாயம் தானே! அருமையான, ரசிக்க வைத்த கதை!

    ReplyDelete