Monday, July 22, 2013

வீட்டில் மகாபாரதம் பார்க்கலாமா?--நாழியூர் காராயணன் கருத்து!



மகாபாரதம் தொடர் வீட்டில் பார்க்கலாமா?

வீட்டில் இராமாயணம் படிக்கலாம்;ஆனால் மகாபாரதம் படிக்கக்கூடாது என்று ஒன்று நம்பிக்கை நிலவுகிறது.

மகாபாரதம் அழிவைச் சித்திரிக்கிறது.பங்காளிச் சண்டையினால்  ஒரு வம்சமே அழிவதைச் சொல்கிறது எனவே வீட்டில் பாரதம் படித்தால் கலகம் வரும்;சண்டை வரும்;அழிவு நேரிடும் என்று ஒரு நம்பிக்கை நிலவுகிறது.

அவ்வாறாயின் அதைக் காணொளியாக மட்டும் பார்க்கலாமா?

படிக்கும்போதாவது மனம் சிதற வாய்ப்புண்டு;ஆனால் பார்க்கும்போது அதிலேயே மனம் ஒன்றிப்போகிறது;எனவே படிப்பதை விட அதிக சக்தி பார்ப்பதற்கு உண்டு.

படிப்பது சரியில்லை என்றால் பார்ப்பது அதனிலும் மோசம் அல்லவா?!

இதற்கு சாஸ்திர பூரவ ஆதாரம் இருக்கிறதா எனில் ,இல்லை என்றே சொல்ல வேண்டும்!

இது வழக்கத்தில் வந்த நம்பிக்கை.

சோதிடத்தில் பெண்ணுக்கு மூலம் ஆகாது (இது போல் பல உண்டு) என்று 
சொல்வார்கள்.

இதற்கு சோதிட சாஸ்திரத்தில் ஆதாரம் இருப்பதாகத் தெரிவதில்லை.

அது போலவே பாரதம் வீட்டில் படிக்கக்கூடாது என்பதும் ஒரு நம்பிக்கை ;அவ்வளவே.

படிக்கக் கூடாது எனில் மூதறிஞர் ராஜாஜி “வியாசர் விருந்து” என்ற தலைப்பில் மகாபாரதத்தை ஒரு சிறு புத்தகமாக அனைவரும் படிக்கும்படித் தந்திருப்பாரா?

இது பற்றிச் சோதிடர் நாழியூர் காராயணனிடம் கேட்டபோது அவர் என்ன சொன்னார்?

”இது அவரவர் விருப்பத்தைப் பொறுத்தது!”

சரிதானே!

14 comments:

  1. குட்டனுக்கு இன்னொரு புனைப்பெயர் இன்னொரு புனைபெயர் நாழியூர் காராயணனோ!

    ReplyDelete
  2. செம கருத்து குட்டன் அய்யா அவர்களே

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி அரசன்!

      Delete
  3. வரும் சென்னை விழாவில் குட்டன் அவர்களை காண முடியுமா...?

    ReplyDelete
    Replies
    1. ஒரு சின்னச் சிக்கல்!அதையும் மீறி..........முடியும்!
      நன்றி தனபாலன்

      Delete
  4. உண்மைதான்ருப்பத்தைப்பொறுத்தது

    ReplyDelete
  5. நான் இதெல்லாம் நம்புறது இல்ல

    ReplyDelete
  6. நீண்ட நாள் கழித்து தங்களிடம் இருந்து வரும் பதிவு... நலமா ?

    ReplyDelete
  7. சோதிடர் பதில்தான் சரி!

    ReplyDelete