Tuesday, July 23, 2013

காதல் முக்கியம்!



 

காதல் என்பது ஒரு மனிதனுக்கு ஆழமான, மகிழ்ச்சியான, ஆனந்தமான உணர்வாக இருக்கிறது.
 
இந்த உணர்வை ஏதோ ஒரு காரணம் தூண்டிவிடுகிறது.

ஆங்கிலத்தில் அழகாக 'Falling in Love’ என்று சொல்வார்கள். காதலில் ஏற முடியாது, இறங்க முடியாது. நிற்க முடியாது, பறக்க முடியாது. விழத்தான் முடியும். 'நான்' என்ற தன்மை கொஞ்சம் நொறுங்கிக் கீழே விழுந்தால்தான், காதல் பிறக்க முடியும்.

சென்ற கணம் வரை உங்கள் வாழ்க்கையில் நீங்கள்தான் ஹீரோ. காதல் வந்துவிடட்டுமே, உங்களைவிட இன்னொருவர் முக்கியமாகி விடுகிறார். எப்போது இன்னோர் உயிர் நம்மை விட முக்கியமாக ஆகிவிட்டதோ, அதற்குப் பெயர்தான் காதல்.

கல்லூரி நண்பர்கள் சிலர் பல வருடங்கள் கழித்து தங்கள் புரொஃபசர் வீட்டில் சந்தித்தனர். எங்கெங்கோ சுற்றிவிட்டு பேச்சு அவர்களுடைய காதல் வாழ்வு பற்றித் திரும்பியது. ஒவ்வொரு நண்பரிடத்திலும் ஏதோ ஓர் ஏமாற்றம், ஏதோ ஒரு வருத்தம்.

புரொஃபசர் ஒரு ஜாடியில் தேநீர் கொண்டுவந்து வைத்தார். 'அந்த அலமாரியில் நிறையக் கோப்பைகள் இருக்கின்றன.
உங்களுக்குப் பிடித்த கோப்பையில் தேநீரை எடுத்துக்கொள்ளுங்கள்' என்றார்.

பீங்கான் கோப்பை, கண்ணாடிக் கோப்பை, வெள்ளிக் கோப்பை என்று விதவிதமான கோப்பைகள். நண்பர்கள் ஆளுக்கு ஒரு கோப்பையை எடுத்து தேநீர் நிரப்பி அமர்ந்ததும், புரொஃபசர் சொன்னார்...

'
சாதாரணமான மண் கோப்பைகளை யாரும் எடுக்கவில்லை. விலை உயர்ந்த அழகான கோப்பைகளைத்தான் நீங்கள் எல்லோரும் எடுத்திருக்கிறீர்கள் என்பதைக் கவனித்தீர்களா? கோப்பையைக் கையில் வைத்திருக்கப்போகிறீர்கள். அவ்வளவுதான். தேநீர்தான் உள்ளேபோய் உங்களுடன்  ஒன்றாகப்போகிறது. ஆனால், உங்கள் கவனம் கோப்பையில் நின்றுவிட்டது.

எனக்கு என்ன கிடைத்தது, அடுத்தவருக்கு எந்தக் கோப்பை போய்விட்டது என்பதில் சிந்தனை போய்விட்டதால், தேநீரின் உண்மை யான ருசியைக் கவனிக்கத் தவறுகிறீர்கள். காதலும் அப்படித்தான். அந்த அற்புதமான உணர்வு கொண்டுவரும் ஆனந்தத்தை வெளித் தோற்றங்களுடன் தொடர்புபடுத்தி, ருசிக்கத் தவறுகிறீர்கள்... வேதனையில் அல்லாடுகிறீர்கள்!

 
காதலாக இருக்கும்போது, உங்களுடைய உணர்வு இனிப்பாக இருக்கிறது. உயிர் போனாலும் சரி என்ற ஆனந்த உணர்வு நிறைகிறது. ஒரே ஒருவராலேயே இவ்வளவு கிடைக்கும் என்றால், எல்லா ஜீவராசிகளிடமும், ஜீவனுக்கு மூலமாக இருக்கிற காற்றிடமும், மண்ணிடமும், கல்லிடமும், செடியிடமும் காதல்கொண்டால், எப்பேர்ப்பட்ட அளவில்லாத ஆனந்தம் கிடைக்கும் என்று கற்பனை பண்ணிப் பாருங்கள். மலை, நதி, பூ, புல்வெளி, பட்டாம்பூச்சி, ஆடு, மாடு என்று காணும் ஒவ்வொன்றின் மீதும் காதல்கொள்ளலாம்.

காதலிப்பது கையில் கிடைக்க வேண்டும் என்று நினைத்தால்தான், பிரச்னை. அதைத் தவிர்த்துவிட்டால், கடலின் மீதும், ஆகாயத்தின் மீதும், நிலவின் மீதும்கூட உண்மையான காதல்கொள்ளலாமே? அந்த உணர்வை உங்களிடம் இருந்து யாரால் தட்டிப் பறிக்க முடியும்?''


(சத்குரு ஜக்கி வாசுதேவ்--தமிழ் தாயகத்திலிருந்து)



26 comments:

  1. எங்கோ கேள்விப்பட்ட கதையை உல்டா பண்ணி சொல்லி இருக்கிறாரு நம்ம சக்கி.. ம்ம்ம்.

    ReplyDelete
  2. இப்படி உல்டா பண்ற வேலை பதிவர்களுக்கு மட்டும்தான் பொருந்தும் என்று கைப்புள்ளயா நம்பிக்கிட்டுருந்தேன் !

    ReplyDelete
  3. காதல் பற்றிய உணர்வை அற்புதமா சொல்லியிருக்கிங்க குட்டன்..

    ReplyDelete
  4. இது யார் எழுதியது என்று தெரியாத புகழ்பெற்ற பழைய கதை. நான் இதே கதையை காபி மாதிரிதான் வாழ்க்கை என்று நானும் பதிவிட்டிருக்கிறேன்.ஒவ்வொருவரும் அவரவர் பாணிக்கு மாற்றிக் கொள்கிறார்கள்.

    ReplyDelete
  5. நல்ல கதை! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete

  6. //காதலிப்பது கையில் கிடைக்க வேண்டும் என்று நினைத்தால்தான், பிரச்னை. அதைத் தவிர்த்துவிட்டால், கடலின் மீதும், ஆகாயத்தின் மீதும், நிலவின் மீதும்கூட உண்மையான காதல்கொள்ளலாமே?//

    உண்மைதான். ஆனால் மனம் இந்த கருத்தை ஏற்றுக்கொள்ளாதே என் செய்ய?

    ReplyDelete
  7. சத்குரு ஜக்கி வாசுதேவ் - சந்திக்க முடியாவிட்டாலும் உங்களை சென்னையில் சந்திக்க வேண்டும்...!

    ReplyDelete
    Replies
    1. எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்!
      நன்ரி

      Delete
  8. Replies
    1. சும்ம்..மா!
      நன்றி

      Delete
    2. எனக்கும் இந்த சந்தேகம் உண்டு ...

      Delete
  9. காதலைப்பற்றியவிளக்கம்அருமை

    ReplyDelete
    Replies
    1. நன்றி கண்ணதாசன் அவர்களே

      Delete
  10. எல்லாருமே எதோ ஒரு ஏமாற்றத்தில்தான் வந்திருக்கிறார்கள் ம்ம்ம்ம்ம் நல்லா சொல்லிட்டீங்க காதல் பற்றி...!

    ReplyDelete
  11. குட்டன், உங்களை ஒரு தொடர்பதிவுக்கு கூப்பிட்டிருக்கேன்... அவசியம் கலந்துக்கனும்..

    http://schoolpaiyan2012.blogspot.com/2013/07/blog-post_24.html

    ReplyDelete
  12. உங்களின் அடுத்த பகிர்வு : http://schoolpaiyan2012.blogspot.com/2013/07/blog-post_24.html

    தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  13. அருமையான பகிர்வு தலைவா !!

    ReplyDelete