Monday, September 30, 2013

காமத்துப்பால்-குறள் விளக்கப்படம்-2 -(7)



                                                                      அனிச்சமும்

                                                          அன்னத்தின் தூவியும்



                                                       மாதர் அடிக்கு நெருஞ்சிப் பழம்

                         அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர்
                         அடிக்கு நெருஞ்சிப் பழம்--     குறள் 1120   (நலம் புனைந்துரைத்தல்)

அனிச்ச மலரும்,அன்னப்பறவையின் இறகும் ஆகிய இவைகள் மாதரின் மெல்லிய அடிகளுக்கு நெருஞ்சி முள் போன்றவை.

மிக மென்மையான அனிச்ச மலரும் அன்னத்தின் சிறகுமே மாதர் அடிக்கு நெருஞ்சி முள் போல் துன்பம் தருவன என்றால் ,அப்பாதங்களின் மென்மையை என்னென்று சொல்வது?!

   “பஞ்சு கொண்டொற்றினும் பைய,பைய என்று
    அஞ்சிப் பின் வாங்கும் மெல்லடி”--சிலப்பதிகாரம்

(மீள் பதிவு,சில திருத்தங்களுடன்!)


9 comments:

  1. வள்ளுவர் வல்லவர் :)

    படங்களுடன் குறள் விளக்கம் அருமை . தொடருங்கள்

    ReplyDelete
  2. காமத்துப் பால் உண்ட மயக்கமோ! காணவில்லையே!

    ReplyDelete
  3. அழகான குறளுக்கு அருமையான விளக்கம். ஆனாலும் இந்த உவமை கொஞ்சம் அதிகமாய் தெரியவில்லை? வள்ளுவரைத்தான் கேட்கவேண்டும்!

    ReplyDelete
  4. அட... சிலப்பதிகாரம்...!

    வாழ்த்துக்கள் ஐயா...

    ReplyDelete
  5. குறள் விளக்கம் புதுமை! அருமை! நன்றி!

    ReplyDelete
  6. வித்தியாசமாக முயற்சிக்கிறீர்கள்...வாழ்த்துக்கள் நண்பா...

    ReplyDelete
  7. வித்தியாசமாக படத்துடன் விளக்கியது அருமை
    வாழ்த்துக்கள்

    ReplyDelete