Saturday, September 14, 2013

தாமரை வெல்லும்!



தாமரை என்றால் என்ன?
நமக்குத் தெரிந்த வரை ஒரு மலர்.
தாமரை மலரே இலக்குமியின் இருக்கையாம்.

கண்களைத் தாமரைக்கு ஒப்பிடுதல் வழக்கம்.

வடமொழியில் ராஜீவ லோசன என்பர்.

ஆனால் தாமரை எனபது ஒரு எண்ணிக்கையையும் குறிக்குமாம்.


இதோ ஒரு கம்ப ராமாயணப் பாடல்.....

தாமரைத் தலைய வாளி, தாமரைக் கணக்கின் சார்ந்த,
தாம் வரத் துரந்து, முந்தி, தசமுகன் தனயன் ஆர்த்தான்;
 தாமரைத் தலைய வாளி, தாமரைக் கணக்கின் சார்ந்த,
தாம் வரத் தடுத்து வீழ்த்தான், தாமரைக்கண்ணன் தம்பி.

பத்துமுக இராவணன் மகனான இந்திரசித்து,தாமரை வடிவில்  தலை உடைய , தாமரைக் கணக்கிலானலான  அம்புகளை இலக்குவன் மேல் செலுத்தி ஆர்ப்பரித்தான்

தாமரை போன்ற கண்களை உடைய இராமனின் தம்பியாகிய இலக்குவன்
,தானும் தாமரை வடிவில் தலை உள்ள அம்புகளை தாமரைக் கணக்கில் விட்டு இந்திர சித்தின் அம்புகளைத் தடுத்து வீழ்த்தினான்
 
தாமரைக் கணக்கின்” என்றால் என்ன அர்த்தம்?

வடமொழியில் த்மம்என்று ஓர் எண் உள்ளதாம். அது, நூறு லட்சம் கோடி, . அதாவது கோடிகோடி.

அந்தப் த்த்தை, கம்பர் தாமரைஎன்று மொழிபெயர்க்கிறார் என்று சொல்கிறார்கள்

இந்திரசித்து  தாமரை மலர் வடிவத்தில் நூறு லட்சம் கோடி அம்புகளைச் செலுத்த (தாமரைத் தலைய வாளி தாமரைக் கணக்கில்), பதிலுக்கு லட்சுமணனும் அதேபோன்ற  நூறு லட்சம் கோடி அம்புகளைச் செலுத்தி அவற்றை முறியடிக்கிறான்.

எப்படித் தாமரை விளையாட்டு? !



7 comments:

  1. ஒண்ணும் புரியலை!!

    ReplyDelete
  2. கோடி கோடி ....

    மோடி மோடி..... :)

    ReplyDelete
  3. தலைப்பும் தாமரை விளையாட்டும் அருமை
    பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. தாமரை விளையாட்டு புரிகிறது. ஆனாலும் அந்த தாமரைகணக்கின் அம்புகள் இலக்கை அடையாமல் (அத்)வானத்தில் சென்றுவிடுமோ?

    ReplyDelete
  5. நடனசபாபதி அவர்களின் பின்னூட்டம் நான் போட நினைத்தது..... அவர் முந்திக்கிட்டார் :)

    ReplyDelete
  6. mika nallathu...
    Eniya vaalththu.
    Vetha. Elangathilakam.

    ReplyDelete