Saturday, September 19, 2015

நிலா நிலா ஓடி வா!

நிலா என்றவுடன்  கவிஞன் அதை ஒரு பெண்ணின் முகத்துக்கு ஒப்பிடுவான்

“கூன் பிறை நெற்றியென்றால் குறை முகம் இருண்டு போகும்” 
“நிலவைப் பிடித்துச் சில கறைகள் துடைத்துக் குறு முறுவல் பதித்த முகம்”
என்றெல்லாம் பாடுவார்கள்.

ஆனால் சில ஆண்டுகளுக்கு முன் நடந்தது இது.

ஒரு முழு நிலா இரவு.
தொலைபேசி அழைத்தது.
எடுத்தேன்
நண்பர் ஒருவர் பேசினார்.குரலில் ஒரு  பர பரப்பு.”நிலாவைப் பாருங்கள்;சாய்பாபா தெரிகிறார்.”

வெளியே சென்றேன்.பார்த்தேன்.
ஆம் சத்திய சாய் பாபாவின் முகம் தெரிந்தது.

நிலவின் கருப்பான பகுதி அவர் முடி போலவும் மீதிப் பகுதி அவர் முகம் போலவும் தெரிந்தது.
என் பங்குக்கு நான் ஒரு நண்பருக்கு ஃபோன் செய்து சொன்னேன்.

சிறிது நேரம் கழித்து அவர் தொலைபேசினார்.
“ஆமாம்.பார்த்தேன்.கால் மேல் கால் போட்டு சாயி அமர்ந்திருக்கிறார்”

நான் வியந்தேன்.
நான் சொன்னது சத்திய சாயி.
அவர் பார்த்த்து ஷீர்டி சாயி.
புரிந்து கொண்டேன் 

எதை நினைத்துக் கொண்டு பார்க்கிறீர்கள்,அது அங்கே தெரிவதை.
இத்தனை நாட்கள் வடை சுடும் கிழவி கூடத் தெரிந்தாளல்லவா?!
எல்லாம் மனம் செய்யும் மாயம் அன்றி வேறில்லை!

காஜல் ரசிகருக்குக் காஜல் கூடத் தெரியலாம்! 

நீல நிலா தெரியுமா ?

ஆங்கிலத்தில் சொல்வார்கள்”once in a blue moon" என்று 


மூன்றாண்டுகளுக்கு ஒரு முறையே நிகழ்வது.
ஒரே மாதத்தில் இரு முழு நிலவுகள் வந்தால்,இரண்டாவது நீலநிலா எனப் படுகிறது.
19 ஆண்டுகளுக்கு ஒரு முறை,ஒரே ஆண்டில் இரண்டு மாதங்களில் இரு முழு நிலவுகள் வருமாம்!


இரு நீலநிலா!

இனி மனங்கவர்ந்தவரின் முகத்தை  முழு நிலவில் கண்டு களியுங்கள்!
.

13 comments:

 1. ரசித்தேன் குட்டன்ஜி ஸூப்பர் நிலா.... தமிழ் மணம் 2

  ReplyDelete
  Replies
  1. கில்லர்ஜிக்குக் குட்டன்ஜி யின் நன்றிகள்!

   Delete
 2. //எதை நினைத்துக் கொண்டு பார்க்கிறீர்கள்,அது அங்கே தெரிவதை.//

  உண்மைதான். இதைத்தான் ‘எண்ணம் போல் வாழ்.’ என்பார்கள்.

  இதைப் படிக்கும்போது எனக்கு வேறொன்று நினைவுக்கு வருகிறது. ஒரு கண்காட்சியில் ஒரு அழகிய ரோஜா மலரை வைத்திருந்தார்களாம். அதைப் பார்வையிட்ட ஒரு கவிஞர் அது ஒரு காதலியின் இதழ் போல் இருக்கிறது என்றாராம். ஆனால் அதைப் பார்வையிட்ட ஒரு வேளாண் அறிஞரோ அது ஒரு கலப்பின (Hybrid) வகையைச் சேர்ந்தது போல் இருக்கிறதது என்றாராம். மூன்றாவதாக வந்த ஒரு சாப்பாட்டுப்பிரியரோ அதை அரைத்து குல்கந்து செய்து சாப்பிட்டால் சுவையாய் இருக்கும் என்றாராம். எனவே வைக்கப்பட்டிருந்த ரோஜா ஒன்று தான் ஆனால் பார்ப்போர் பார்வையில் வெவ்வேறு விதமாக தெரிந்திருக்கிறது.

  ReplyDelete
  Replies
  1. தங்கள் பின்னூட்டம் வெகு சிறப்புங்க ஐயா.

   Delete
  2. தங்களது பாராட்டுக்கு நன்றி கவிஞர் சசிகலா அவர்களே! ஆனால் நாம் அனைவரும் திரு குட்டன்ஜி யைத்தான் பாராட்டவேண்டும்.ஏனெனில் அவருடைய இந்த சிறப்பான பதிவால் தானே நம்மால் இப்படி பின்னூட்டமிடமுடிகிறது.

   Delete
 3. குட்டன் ஜி நீல நிலவை பற்றி சொல்லிவிட்டீர்கள். சிவப்பு நிலா என்று ஒன்று வானில் வருமே கேள்விப் பட்டிருக்கிறீர்களா? வருகிற 28-ம் தேதி நீங்கள் அமெரிக்காவில் இருந்தால் இந்த சிவப்பு நிலவை பார்க்கலாம்.
  அழகான பகிர்வு!
  த ம 3

  ReplyDelete
 4. தங்கள் பகிர்வை ஒட்டி பல கருத்துகள் பின்னூட்டங்களாக வியப்பாக வருகிறது பாருங்க. சிறப்பான சிந்திக்க வைத்த பகிர்வு.

  ReplyDelete
 5. எண்ணம் போல வாழ்வு என்று சொல்வார்கள்! நினைப்புத்தான் பொழப்பை கெடுக்குது என்றும் சொல்வார்கள்! அதே போல வெறும் மேடு பள்ளங்கள் நிறைந்த நிலா அவரவர் பார்வையில் வித்தியாசமாக தெரிகிறது போலும்! அருமை! பகிர்வுக்கு நன்றி!

  ReplyDelete
 6. எண்ணம்போலவே குடி மகனுக்கும் அங்கே ..டாஸ்மாக் கடை இருப்பதாக தெரிந்திருக்கும் திரு.குட்டன்ஜி...

  ReplyDelete
 7. என்ன நினைத்துப் பார்க்கிறோமோ அது தெரிகிறது...... உண்மை தான்.

  பதிவு சுவையான பின்னூட்டங்களை தந்திருக்கிறது. நன்றி குட்டன் ஜி! :)


  ReplyDelete
 8. மூனுக்கும் ஹனி மூனுக்கும் எந்த பொருத்தமும் இருப்பதாக தெரிய வில்லையே ,குட்டன் ஜி :)

  ReplyDelete
 9. அருமையான ரசனையான பதிவு. உண்மையே நாம் என்ன நினைத்துப் பார்க்கிறோமோ அதுதான் கண்ணிற்குத் தெரிகின்றது, பாட்டி கால நீட்டிக் கொண்டு நூல் நூற்பது போலவும் கூட சொல்லுவார்கள். நல்ல நிலா....அழகு நிலா...ரசித்தோம்...

  நீல நிலா போல சிவப்பு நிலா தெரியப்போகுதாம்....ம்ம்ம்ம் அமெரிக்க வாழ் மக்கள் கொடுத்துவைத்தவர்கள் . அவர்கள் நேரத்திற்கு அது தெரியப்போவதால்....அவர்கள் தேதி 28 என்று நினைவு....நமக்குத் தெரியாது போல....

  ReplyDelete
 10. பரெய்டோலியா! மனப்பிம்பங்கள்!

  ReplyDelete