Wednesday, September 16, 2015

என்னங்க!புதுக்கோட்டை போறீங்களா?என்னங்க!புதுக்கோட்டை போகப் போறீங்களா?

என்ன,திடீர்னு கேக்குறே?

ஏதோ பதிவர் சந்திப்பு திருவிழா அக்டோபர் 11 ஆம் தேதின்னு சொன்னீங்களே,அதுக்குப் போகப் போறீங்களான்னு கேட்டேன்.

எனக்கு யாரைத் தெரியும், அதை விட என்னை யாருக்குத் தெரியும்?நான் அங்க போய் என்ன செய்ய?

என்ன இப்படிச் சொல்றீங்க?போய் நாலு பேரைப் பார்த்துப் பேசிப் பழகினா தன்னால தெரிஞ்சுட்டுப்  போகுது;போயிட்டு வாங்க.

என்னம்மா இவ்வளவு அக்கறை,நான் போறதில?

இல்ல.நானும் உங்க கூட வரலாமேன்னுதான்!

ஹே!இது பதிவர் சந்திப்புதான்.பதிவர் குடும்ப சந்திப்பு இல்ல!எல்லாரும் இப்படிக் குடும்பத் தோட வந்தா அங்க சந்திப்பா நடக்கும்?அதுவும் எல்லருக்கும் சோறு போட்டுக் கட்டுப் படியாகுமா? இப்பவே பட்ஜட்டில கால் பாகம்தான் சேர்ந்திருக்காம்,பாவம்.சிலர் குடும்பமே பதிவர் குடும்பம்! அவங்க வேணா வரலாம்.அதைத்தவிர ஒரு பதிவர் பேரே குடும்ப் பதிவராம்! அது ஏனோ தெரியலை

நாம வெளில சாப்பிட்டுக்குவோம்! 

அதெல்லாம் சரியா வராது/அது சரி நீ ஏன் வரணுங்கிறே?

அங்க பாக்கறத்துக்கு நெறய இருக்காமில்ல!அருங்காட்சியகம்,ஞானலாயா நூலகம்,சித்தன்ன வாசல்,ஆவுடையார் கோவில்,குடுமியான் மலை,திருமயம் மலைக்கோட்டை அப்படின்னு!

அதஎல்லாம் பின்னால எப்பவாச்சும் பாத்துக்கலாம்.இப்ப சந்திப்பு முக்கியம்;ஆனா எங்க போனாலும் எனக்கு இன்னொண்ணு ரொம்ப முக்கியம்!

சாப்பாடுதானே?

ஆமாண்டி!சோறுதான் !நமக்கு சைவம்தான்! இந்த  சைவம்,அசைவம் ரெண்டும் கலக்கிறது எல்லாம் சரியா வராது. அதுவும் தட்டைக் கையில ஏந்திக்கிட்டு அம்மா தாயேன்னு வாங்கிச் சாப்பிடறதெல்லாம் நமக்குச் சரியா வராது.

இந்த வயசில இப்படி பஃப்ஃபே பிடிக்காதுன்னு சொல்றீங்களே,வயசானவர் மாதிரி!


 ஆமாம்!இலை போட்டு வித விதமா வடை பாயசத்தோட பரிமாறணும், சாப்பிடணும். அதுவும்  பாயச பக்கெட்டை என் முன்னால வச்சு குடிக்கக் குடிக்க ஊத்திக்கிட்டே இருக்கணும்!


சாப்பிடறதிலயே இருங்க!போட்டியெல்லாம் வச்சிருக்காங்களாம்.-மூணு கட்டுரைப்போட்டி, ரெண்டு கவிதைப் போட்டி. ஏதாவது எழுதிப் பரிசு வாங்கலாமில்ல!

ரொம்பச் சுளுவாச் சொல்லிட்ட?எம்பரம்பரையிலயே ஒரு பய எழுதினது கெடையாதே!நான் என்ன எழுத? ஆமக்கதைதான் எழுதணும்!

சரி விடுங்க! எழுத வேண்டாம்,போக முடியல அப்படின்னாலும் உங்க விவரங்களைக் கையேட்டுக்கு அனுப்பலாமில்ல?

அதுல ஒரு சிக்கல் இருக்கே?

அதுவா? சரி விடுங்க!

விழா நல்லா நடக்கணும்னு இங்கிருந்தே வாழ்த்துவோம்!

சந்திப்பு பற்றிய என் முந்தைய பதிவுகள்....

http://kuttikkunjan.blogspot.com/2015/08/blog-post_20.html

http://kuttikkunjan.blogspot.com/2015/08/blog-post_19.html

http://kuttikkunjan.blogspot.com/2015/08/blog-post_18.html

18 comments:

 1. ஆஹா உங்களுக்காக பாயாசம் காத்திருக்கு...உடனே கிளம்பி வாங்க சைவம் தான்.....ஆவலுடன் உங்க வருகைக்காக காத்திருக்கிறோம் நன்றி.

  ReplyDelete
  Replies
  1. பால் பாயாசமா? சொல்லீட்டீங்க இல்ல! புறப்பட்டுடறேன்(இயன்றால்!)
   நன்றிம்மா

   Delete
 2. இணைப்புகளுக்கு நன்றி... தளத்தில் இணைத்து விடுகிறேன்... (http://bloggersmeet2015.blogspot.com/p/2015.html)

  ReplyDelete
  Replies
  1. நன்றி தனபாலன் ஐயா

   Delete
 3. விழா நல்லா நடக்கணும்னு இங்கிருந்தே வாழ்த்துவோம்!
  இந்த கதையெல்லாம் வேண்டாம், கிளம்புங்க குடும்பத்தோட புதுகைக்கு,
  தங்கள் தகவலுக்கும், வருகைக்கும் நன்றி.

  ReplyDelete
  Replies
  1. நான் இருக்கிற ஊரிலிருந்து ரயில் வசதி இல்லையே?!
   நன்றி மகிம்மா

   Delete
 4. ஹஹ சிறப்பான உரையாடல் ஆனாலும் தங்கள் வருகையை எதிர்பார்க்கிறோம். வாங்க!

  ReplyDelete
  Replies
  1. அடுத்த ஆண்டு நிச்சயம் சந்திப்போம் பாவலரே!

   Delete
 5. விழாவில் கலந்து சிறப்பியுங்கோ குட்டன் அண்ணாச்சி!

  ReplyDelete


 6. திரு குட்டன் அவர்களே நீங்கள் இப்படித்தான் சொல்லிவிட்டு சென்னையில் நடந்த முந்தைய பதிவர்கள் விழாவில் அரூபமாய் கலந்துகொண்டதுபோல் இப்போதும் கலந்துகொள்வீர்கள் என நினைக்கிறேன்.
  நீங்கள் சொல்வது போல சைவ உணவும் அசைவ உணவும் ஒன்றாய் இருப்பது அனேகமாய் எல்லா சைவ உணவு உண்போருக்கு நெருடலாய் இருக்கும். விழாக்குழுவினர் அவைகளை தனித்தனியாக பரிமாற வழி செய்வார்கள் என நம்புகிறேன்.
  அது இருக்கட்டும்.
  “செவிக்குண வில்லாத போழ்து சிறிது
  வயிற்றுக்கும் ஈயப் படும்.” என்ற குறள் அறியாதவரல்லவே தாங்கள்.
  நீங்கள் போவது பதிவர் சந்திப்புக்கு, அதில் பதிவர்களின் பேச்சைக் கேட்பதுதானே முக்கியமான நிகழ்வு. பின்னர் பசி இருப்பின் உணவைப்பற்றி யோசிக்கலாம்!

  ReplyDelete
 7. அருமை நண்பரே நல்ல காமெடி
  தமிழ் மணம் 4

  ReplyDelete
 8. வணக்கம் நண்பரே!!! தங்கள் தளத்திற்கு புதியவன்! இனி தொடர்ந்து வருகிறேன்!! அருமை !!!! நன்றி

  ReplyDelete
 9. ரெண்டு வோட்டு போடலாம்னு போட்டா ,ஏற்கனவே விழுந்துடுச்சுன்னு வருது ,மேலே சைவம்,கீழே அசைவ தமிழ் மணப் பட்டையா :)

  ReplyDelete
 10. குட்டன் சார்! இப்படியே ஒவ்வொரு சந்திப்பிற்கும் சொல்லிக் கொண்டே போனால், எப்போதுதான் உங்களை நாங்கள் கண்டு கொள்வது?

  ReplyDelete
  Replies
  1. அவரைப் பார்க்கணும்னா சென்னை அடையாறுக்கு வாங்க...எங்க வீட்டுப் பக்கத்துலதான் இருக்காரு...ஆனா, நண்பர் ஆவி என்னை ஒரு நாள் அழைத்தும் போக முடியாத சூழலினால் நானே இன்னும் பார்க்கலை....ஹிஹிஹி....

   Delete
  2. அவரைப் பார்க்கணும்னா சென்னை அடையாறுக்கு வாங்க...எங்க வீட்டுப் பக்கத்துலதான் இருக்காரு...ஆனா, நண்பர் ஆவி என்னை ஒரு நாள் அழைத்தும் போக முடியாத சூழலினால் நானே இன்னும் பார்க்கலை....ஹிஹிஹி....

   கீதா

   Delete
 11. ஆஹா..... அருமை.

  குடும்பப் பதிவர்! :)

  விழா சிறக்க எனது வாழ்த்துகளும்.

  ReplyDelete
 12. ஹஹஹஹ செம காமெடி....காமெடியானாலும் ஒரு நல்ல கருத்தை வைத்திருக்கின்றீர்கள். குடும்ப பதிவர்கள் என்றால் சரி...மற்றபடி குடும்பத்தையே அழைத்து வருவது பற்றி சொல்லி இருப்பது சரிதான்....நல்ல விஷயம்....

  ஆனால் பாருங்கள் எங்க வீட்டுல நான் தனியா போக முடியாதுங்க....மினிஸ்ட்ரி .....என்ன செய்ய...ஆனா நான் போய் எல்லோரையும் சந்திக்க வெண்டும் என்ற ஆவல்..அதனால் என் பட்டாளமும் என்னுடன் பின் தொடரும்...என்ன செய்ய...

  ReplyDelete