என்னங்க!புதுக்கோட்டை போகப் போறீங்களா?
என்ன,திடீர்னு கேக்குறே?
ஏதோ பதிவர் சந்திப்பு திருவிழா அக்டோபர் 11 ஆம் தேதின்னு சொன்னீங்களே,அதுக்குப் போகப் போறீங்களான்னு
கேட்டேன்.
எனக்கு யாரைத் தெரியும், அதை விட என்னை யாருக்குத்
தெரியும்?நான் அங்க போய் என்ன செய்ய?
என்ன இப்படிச் சொல்றீங்க?போய் நாலு பேரைப்
பார்த்துப் பேசிப் பழகினா தன்னால தெரிஞ்சுட்டுப் போகுது;போயிட்டு வாங்க.
என்னம்மா இவ்வளவு அக்கறை,நான் போறதில?
இல்ல.நானும் உங்க கூட வரலாமேன்னுதான்!
ஹே!இது பதிவர் சந்திப்புதான்.பதிவர் குடும்ப
சந்திப்பு இல்ல!எல்லாரும் இப்படிக் குடும்பத் தோட வந்தா அங்க சந்திப்பா
நடக்கும்?அதுவும் எல்லருக்கும் சோறு போட்டுக் கட்டுப் படியாகுமா? இப்பவே பட்ஜட்டில
கால் பாகம்தான் சேர்ந்திருக்காம்,பாவம்.சிலர் குடும்பமே பதிவர் குடும்பம்! அவங்க வேணா வரலாம்.அதைத்தவிர ஒரு பதிவர் பேரே
குடும்பப் பதிவராம்! அது ஏனோ தெரியலை
நாம வெளில சாப்பிட்டுக்குவோம்!
அதெல்லாம் சரியா வராது/அது சரி நீ ஏன் வரணுங்கிறே?
அங்க பாக்கறத்துக்கு நெறய இருக்காமில்ல!அருங்காட்சியகம்,ஞானலாயா
நூலகம்,சித்தன்ன வாசல்,ஆவுடையார் கோவில்,குடுமியான் மலை,திருமயம் மலைக்கோட்டை அப்படின்னு!
அதஎல்லாம் பின்னால எப்பவாச்சும் பாத்துக்கலாம்.இப்ப
சந்திப்பு முக்கியம்;ஆனா எங்க போனாலும் எனக்கு இன்னொண்ணு ரொம்ப முக்கியம்!
சாப்பாடுதானே?
ஆமாண்டி!சோறுதான் !நமக்கு
சைவம்தான்! இந்த சைவம்,அசைவம் ரெண்டும் கலக்கிறது எல்லாம்
சரியா வராது. அதுவும் தட்டைக் கையில ஏந்திக்கிட்டு அம்மா தாயேன்னு வாங்கிச் சாப்பிடறதெல்லாம்
நமக்குச் சரியா வராது.
இந்த வயசில இப்படி பஃப்ஃபே பிடிக்காதுன்னு சொல்றீங்களே,வயசானவர் மாதிரி!
ஆமாம்!இலை போட்டு வித விதமா வடை பாயசத்தோட பரிமாறணும், சாப்பிடணும்.
அதுவும் பாயச பக்கெட்டை என் முன்னால வச்சு
குடிக்கக் குடிக்க ஊத்திக்கிட்டே இருக்கணும்!
சாப்பிடறதிலயே இருங்க!போட்டியெல்லாம் வச்சிருக்காங்களாம்.-மூணு கட்டுரைப்போட்டி, ரெண்டு
கவிதைப் போட்டி. ஏதாவது எழுதிப் பரிசு வாங்கலாமில்ல!
ரொம்பச் சுளுவாச் சொல்லிட்ட?எம்பரம்பரையிலயே
ஒரு பய எழுதினது கெடையாதே!நான் என்ன எழுத? ஆமக்கதைதான் எழுதணும்!
சரி விடுங்க! எழுத வேண்டாம்,போக முடியல
அப்படின்னாலும் உங்க விவரங்களைக் கையேட்டுக்கு அனுப்பலாமில்ல?
அதுல ஒரு சிக்கல் இருக்கே?
அதுவா? சரி விடுங்க!
விழா நல்லா நடக்கணும்னு இங்கிருந்தே
வாழ்த்துவோம்!
சந்திப்பு பற்றிய என் முந்தைய பதிவுகள்....
http://kuttikkunjan.blogspot.com/2015/08/blog-post_20.html
http://kuttikkunjan.blogspot.com/2015/08/blog-post_19.html
http://kuttikkunjan.blogspot.com/2015/08/blog-post_18.html