மே,16,1992.
இன்னிக்கு என்னவோ காத்தாலலேருந்தே,மனசு பர,பரன்னு இருந்தது.ஏன்னு இப்பத்தான் தெரியறது.
வாசல்ல நின்னு பாத்துண்டே இருக்கேன்,அடுத்தாத்து வாசசில ஒரு லாரி வந்து நிக்கறது. காலியாயிருந்த ஆத்துக்குப் புதிசா குடி வரா போலிருக்கு.லாரிக்குப் பின்னாலயே ஒரு காரும் வந்து நிக்கறது.காரிலிருந்து ஒரு மாமா,மாமி அவாளோட அழகா ஒரு பொண்ணும் எறங்கறா.அவ்வளவு அழகா ஒரு பொண்ணை நான் பாத்ததே இல்லை.இத்தனை நாள் கோடியாத்துக் கோகிலாதான் ரொம்ப அழகுன்னு நெனச்சிண்டிருந்தேன்.அவளெல்லாம் இவ கால் தூசிக்குக் காணமாட்டா.
மாமியும் பொண்ணும் கதவைத்தெறந்து உள்ள போயிட்டா.போகும்போதுஅந்தப் பொண்னு என்னைப் பாத்தாளோ?அப்படித்தான் இருந்தது.மாமா வாசல்ல நின்னு லாரியில இருந்து சாமானையெல்லாம் இறக்கறதைப் பாத்துண்டிருந்தார்.
No comments:
Post a Comment