Thursday, February 9, 2012

ஐன்ஸ்டைனின் சார்பியல் கோட்பாடு!


ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் எங்கு சென்றாலும் அனைவரும் அவரிடம் அவரது சார்பியல் கோட்பாடு பற்றியே கேட்பார்கள்.ஒரு முறை ஒரு கூட்டத்தில் சார்பியல் பற்றிக் கேட்ட கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்”நீங்கள் ஒரு சூடா அடுப்பின் மீது ஒரு விநாடியே கை வைத்தாலும் அது ஒரு மணி நேரம்போல் தோன்றும்.ஆனால் நீங்கள் ஒரு அழகான பெண்ணுடன் பொழுது போக்கும்போது.ஒரு மணி நேரம் என்பது ஒரு விநாடியாகத்தோன்றும்.இதுதான் சார்பியல்!” 

எப்படி விளக்கம்!!

ஒரு முறை ஐன்ஸ்டைன் ரயிலில் பயணித்துக் கொண்டிருந்தபோது,பரிசோதகர் வருவதைப் பார்த்துப் பயணச்சீட்டுக்காகத் தன் சட்டைப்பயில் தேடினார்.பின் கால்சட்டைப்பையில் தேடினார்.அதன் பின் தன் கைப்பயில் தேடினார் .சீட்டுக் கிடைக்கவில்லை.பரிசோதகர் சொன்னார்”ஐயா!உங்களை எல்லோருக்கும் தெரியும்.நீங்கள் நிச்சயமாகச் சீட்டு எடுத்திருப்பீர்கள். கவலை வேண்டாம் “ எனச் சொல்லிச் சென்று விட்டார்.சிறிது தூரம் சென்ற பின் திரும்பிப் பார்க்கையில்,ஐன்ஸ்டைன் இருக்கைக்கு அடியில் குனிந்து தேடிக் கொண்டிருப்பதைப் பார்த்தார்.அவரிடம் வந்து”ஐயா!நான்தான் கவலை வேண்டாம்  என்று கூறினேனே”என்றார்.

அதற்கு ஐன்ஸ்டைன் சொன்னார்”எல்லாம் சரிதான்.ஆனால் நான் எங்கு போய்க்கொண்டிருக்கிறேன் என்பதை மறந்து விட்டேனே!”

ஐன்ஸடைனின் கூட்டங்களுக்கு அவரது கார் ஓட்டுநரும் சென்று கடைசி வரிசையில்அமர்ந்து கேட்டுக்கொண்டிருப்பார்.ஒரு முறை அவர் ஐன்ஸ்டைனிடம் சொன்னார்.”உங்கள் பேச்சைப்பல முறை கேட்டதில்,இப்போது நானே அது போல் பேச முடியும்அடுத்த கூட்டத்தில்,ஓட்டுநர் பேச,ஐன்ஸ்டைன் ஓட்டுநர் உடையணிந்து கடைசி வரிசையில் அமர்ந்தார்.ஓட்டுநர் அழகாகப்பேசி முடித்த பின் கூட்டத்தில் ஒருவர் எழுந்து ஒரு கடினமான கேள்வி எழுப்பினார்.ஓட்டுநர் சொன்னார்இது மிக எளிதானது இதற்குப் பதில் கடைசி வரிசையில் இருக்கும் என் ஓட்டுநரே சொல்வார்!”

6 comments:

  1. ஐன்ஸ்டைனை எனக்கு மிகவும் பிடிக்கும்.
    தங்களின் இந்தப் பதிவும் எனக்குப் பிடித்திருக்கிறது.
    பாராட்டுகள்!

    ReplyDelete
  2. @பரமசிவம்
    வலைப்பூவின் முதல் வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  3. நல்ல பதிவு...
    ஐன்ஸ்டீன் வாழ்க்கையில் இன்னும் இன்னும் எத்தனையோ சுவாரஸ்யப் பதிவுகளைக் கேள்விப்பட்டிருக்கிறேன்...
    பகிர்வுக்கு மிக்க நன்றி..... ரிலேடிவிடி தியரியை இத்தனை சுவையாக ஐன்ஸ்டீனே விளக்குகிறார் ஆனால் இதைக் கற்றுக்கொடுத்த பேராசிரியர் எங்களைப் போட்டுத் தள்ளிவிட்டார் E=mC^2 ஐ எங்களுக்கு வகுப்பில் விளக்கிய போது!! :)

    ReplyDelete
  4. மிகவும் சுவாரஸ்யமான நிகழ்வுகள். ஆனால் இவை எல்லாம் உண்மையிலே நடந்ததா அல்லது மனிதர்களின் கற்பனைத் திறத்தால் வந்ததா என தெரியவில்லை. இது குறித்து எவரேனும் புத்தக குறிப்பு எழுதி இருந்தால் அதையும் தாருங்கள், உதவியாக இருக்கும்.

    ReplyDelete
  5. இது நான் கேள்விப்பட்டது.புத்தகக் குறிப்பு ஏதும் இருக்கிறதா எனப் பார்க்கிறேன்.நன்றி ராதாகிருஷ்ணன்

    ReplyDelete