ஆதௌ கீர்த்தனாரம்பத்திலே.குட்டன்,குட்டன் னு ஒரு பையன் இருந்தான்.இரண்டு தடவை சொன்னாலும் ஒரு பையன்தான்! அவன் இந்த வலைப்பூ வகையறாவெல்லாம் படிச்சிண் டிருந்தான்.திடீர்னு அவனுக்கும் ஒரு வலைப்பூ ஆரம்பிக்க ஆசை வந்தது! வரலாமோ? வந்துடுத்து.ஒரு வலைப்பூ ஆரம்பிச்சு அதுல ஒரு பதிவும் போட்டுட்டான்.
அப்பறம்தான் யாரோ அவனைக் கேட்டா”என்ன குட்டா?நேரா பதிவுக்குப் போயிட்டயே?
முதல்ல அறிமுகம் அது ,அது எல்லாம் வேண்டாமா ன்னு.அவன் சொன்னான். “அறிமுகமெல்லாம் பண்ணிக்க நான் என்ன பெரிய ஆளா?என்னவோ எழுதணும்னு தோணித்து எழுதறேன். படிக்கறவாளுக்குப் பிடிச்சிருந்தா சரி.பின்னூட்டம் போடறவா போடட்டும்.எனக்கும் எழுதணும்னு ஒரு ஆசை அவ்வளவுதான் அப்படின்னு சொல்லிட்டான்.
”எனக்கு 15 வயசா இருந்தபோது தமாஷா டயரி எழுதினேன்.அதை இன்னிக்கிப் பொறட்டிப் பாக்கறச்சே சில சுவாரஸ்யமான சம்பவங்கள் ஞாபகம் வந்தது.அது ஒரு ரெண்டுங்கெட்டான் வயசில்லையா?எல்லாப்பெண்களுமே அழகாத்தோணின காலம் அது. அது வளரிளம் பருவம்.அந்த உணர்ச்சிகளே சுகமானவைதானே?” அப்படின்னுட்டான்.
சரி,தொடர்ந்து கலக்குன்னு சொல்லிட்டா.
பாப்போம்,கலக்கப்போறானா,கலங்கப்போறானான்னு!
குட்டன்: பிள்ளையாரப்பா!பால்,தேன்.பாகு,பருப்பு(என்ன பருப்பு-கடலையா,முந்திரியா,பாதாமா) இதெல்லாம் நான் தரவில்லை.நீயும் எனக்குச் சங்கத்தமிழெல்லாம் தரவேண்டாம். சாதாத் தமிழே தா!
குட்டன்: பிள்ளையாரப்பா!பால்,தேன்.பாகு,பருப்பு(என்ன பருப்பு-கடலையா,முந்திரியா,பாதாமா) இதெல்லாம் நான் தரவில்லை.நீயும் எனக்குச் சங்கத்தமிழெல்லாம் தரவேண்டாம். சாதாத் தமிழே தா!
No comments:
Post a Comment