Saturday, November 17, 2012

மன்மதலேகியம்--திடுக்கிடும் முடிவு!



முடிவு -1
முனிவரின் கடுந்தவத்தின் பயனாக மாரன் எதிரே தோன்றினான்.

அவன் கையில்  மன்மத லேகியம் நிறைந்த ஒரு பாத்திரம் இருந்தது.

அதை முனிவரிடம் அளித்து இதில் ஒரு கொட்டைப் பாக்களவு சாப்பிட்டால் இளமை திரும்பி விடும் எனச் சொல்லி மறைந்தான்.

அதைச் சோதனை செய்து பார்ப்பதற்காக முனிவர் சிறிதளவு சாப்பிட்டார்; இளைஞனானார்.

மன்னன் அதிகமாகச் சாப்பிட்டுக் குழந்தையானான்!
.............................................................
முடிவு-2

மாரன் லேகியத்தைக் கொடுக்கும்போது சொன்னான்”இதை ஒருவர்தான் சாப்பிட வேண்டும் ஒருவருக்கு மேல் சாப்பிட்டால் விளைவு விபரீதமாகி விடும்”எனச் சொல்லி மறைந்தான்

முனிவர் ஆர்வத்தினால் சிறிது சாப்பிட்டு இளமையடைந்தார்.

மன்னனுக்குத் தரும்போது உன்மையைச் சொல்லாமல் மறைத்து விட்டார்.

மன்னன்  குழந்தையானான்!
........................................................................
முடிவு-3

இளம் முனிவர் சொன்னார்”மன்னா! நான் சர்கு முனிவரல்ல;அவர் புத்திரன் அஜன்.தந்தையார் யாகம் செய்து மன்மத லேகியத்தைப் பெற்று விட்டார். அதைச் சாப்பிட்டால் இளமை திரும்பும்; ஆனால் அவர் ஒரு செய்தி சொல்லி அனுப்பி இருக்கிறார்.அவருக்குப் பாதி ராஜ்ஜியம் வேண்டாமாம். அதற்குப் பதிலாக உங்கள் மகளை எனக்கு மணம் முடித்துக் கொடுக்க வேண்டுமாம். திருமணம் முடிந்ததும் உங்களுக்கு லேகியம் கிடைக்கும்”

மன்னனுக்கு எப்படியாவது இளமை அடைய வேண்டும் என்ற வெறி;அதன் காரணமாக அந்த நிபந்தனைக்குச் சம்மதிக்கிறான்.

மறுநாளே திருமணம் நடை பெறுகிறது;அரசகுமாரிக்கும் அந்த அழகிய இளைஞனை மணப்பதில் மகிழ்ச்சியே.

திருமணம் முடிந்ததும் இளைஞன் தன் கச்சையிலிருந்து ஒரு சிறு டப்பியை எடுத்து மன்னனிடம் கொடுத்து,அதைத் தனியிடத்துக்குச் சென்று  சாப்பிடுமாறு கூறுகிறான்.

மன்னன் செல்கிறான்.

சிறிது நேரத்துக்குப் பின் ஒரு நாய் குரைத்துக் கொண்டே ஓடி வருகிறது

அரண்மனைக்குள் நாய் வந்து விட்டதே எனக் காவலர்கள் அந்த நாயை அடித்து விரட்டி விடுகின்றனர்.

அது திரும்பிப் பார்த்துக் கொண்டே பரிதாபமாக ஊளையிட்டபடி ஓடி விடுகிறது.

எல்லோரும் மன்னனுக்காகக் காத்திருக்கிறார்கள்.

மன்னன் வரவில்லை.

கடைசியில் இளைஞன் அரசியிடம் கூறுகிறான்”திருமணம் முடிந்ததும் தாம் அரச வாழ்க்கையைத் துறந்து செல்லத் தீர்மானித்திருப்பதாக மன்னர் சொன்னார். யார் கண்ணிலும் படாமல் வெளியே செல்ல நான் மருந்து கொடுத்து உதவினேன்.மன்னர் சென்று விட்டார்.இனி வரமாட்டார்”

சிறிது நாட்கள் சென்றபின் அரசியார் இளைஞனிடம் சொன்னார்” இனி நானும் துறவு பூணப் போகிறேன்.இந்த ஆட்சிப் பொறுப்பை உங்களிடம் ஒப்படைக் கிறேன்”

அவனுக்கு முடி சூட்டப்பட்டது.

அஜனான சர்கு முனிவர் வெற்றிப் புன்னகை பூத்தார்.
அந்நாட்டின் கோட்டை வாயிலில் நின்று அந்த நாய் ஊளையிட்டுக் கொண்டே இருந்தது!


(முடிந்தது?!)

15 comments:

  1. //டப்பி// சிறுவயதில் உபயோகித்த வார்த்தை! கடைசியில் தனது ஆசை நிறைவேறாமல் மன்னர் நாயாகி விட்டாரே! பரிதாபம்!

    ReplyDelete
    Replies
    1. நாய்ப் பிழைப்பு.
      நன்றி

      Delete
  2. அடடா இப்படியா முடிவு இருக்க வேண்டும்.

    ReplyDelete
  3. எதிர்பார்க்காத முடிவு!

    ReplyDelete
  4. ஒட்டியில் பதிவுகளை வேகமாக தேர்ந்தெடுக்க முடிகிறது.
    இதனால் எனக்கு ஒட்டி பிடிக்கும்

    http://otti.makkalsanthai.com

    பயன்படுத்தி பாருங்கள் உறவுகளே!! ஒட்டி உங்களுக்கும் பிடிக்கும்

    ReplyDelete
    Replies
    1. பயன்படுத்துகிறேன்
      நன்றி

      Delete
  5. அச்சச்சோ! பாவம் மன்னர்

    ReplyDelete
    Replies
    1. பேராசை பெருநஷ்டம்!
      நன்றி,

      Delete
  6. மூணு பகுதியையும் இப்போதுதான் படித்தேன். கதையும் முடிவுகளும் சூப்பர்

    ReplyDelete
  7. என்ன குட்டன்...இப்பிடி ஆக்கிட்டீங்க !

    ReplyDelete
  8. மூன்று முடிவுகளுமே நச் முடிவுகள்! சிறப்பான படைப்பு! நன்றி!

    ReplyDelete