Monday, December 17, 2012

பெரியோர் சொன்ன சின்னக்கதைகள்!



ஒரு செல்வந்தர் இருந்தார்.

 ஒரு நாள் அவர் தன் தோட்டத்தில் விளைந்த வாழைக்குலை ஒன்றை பணியாளிடம் கொடுத்துக் கோவிலில் கொடுக்கச் சொன்னார்.

 ஏழைப் பணியாள் எடுத்துச் செல்லும் வழியில் அவனுக்கு அதிகப் பசியெடுக்கவே அக்குலை யிலிருந்து இரண்டு பழங்களைப் பிய்த்துச் சாப்பிட்டு விட்டான்..

மீதிப் பழங்களை கோவிலில் கொடுத்தான்.

அன்றிரவு செல்வந்தர் ஒரு கனவு கண்டார்.கனவில் இறைவன் வந்து நீஎனக்குக் கொடுத்த இரண்டு பழங்களை நான் சாப்பிட்டேன்;ருசியாக இருந்தது என்றான்.

செல்வந்தனுக்கு மிகக் கோபம் வந்தது.

ஒரு குலை பழம் கொடுத்திருக்க இரண்டு மட்டுமே இறைவனுக்குப் போய்ச் சேர்ந்திருக்கிறது. மீதி என்னவாயிற்று எனக் கோபப்  பட்டான்.

மறு நாள் காலை அந்தப் பணியாளைக் கூப்பிட்டு விசாரித்தான்.

அவன் இரண்டு பழங்களைப் பசியினால் தான் சாப்பிட்டதை ஒப்புக் கொண்டு ,மீதிக் குலையைக் கோவிலில் கொடுத்து விட்டதைச் சொன்னான்.

செல்வந்தனுக்குப் புரிந்தது .

அந்த ஏழை சாப்பிட்ட பழம் மட்டுமே இறைவனைச் சென்று அடைந்திருக்கிறது என்று!

.........................................................................................


ஒரு  கருமி இருந்தான்  .

எச்சிற்கையால் காக்கை ஓட்ட மாட்டான்!

அவன் வீட்டுக்கு எதிரில் ஒரு  தர்மவான் இருந்தான் ; பசி என்றுவந்தவர்க்கெல்லாம் உணவளிப்பவன்.

கருமியிடம் யாராவது வந்தால்,எதிர் வீட்டைத் தன் விரலால் சுட்டிக்காட்டி விடுவான் .

அவன் இறந்தபின் எமலோகத்தில் அவனை எண்ணைச் சட்டியில் போட்டு வறுத்தார்கள். 
அவனது சுட்டு விரல் தவிர உடல் முழுவதும் வறுபட்டது. 

ஏன் என எமனிடம் கேட்க அவன் சொன்னான் “நீ தர்மம் செய்யப்படும் இடத்தை உன் விரலால் சுட்டிக் காடினாய்;எனவேதான்”

கொடுக்காவிடினும்,கொடுக்கப்படும் இடத்துக்கு வழி காட்டியதற்குப் பலன்! 

.......................................

13 comments:

  1. அருமையான இரண்டு கதைகளை
    பதிவாக்கி அறியத் தந்தமைக்கு
    மனமார்ந்த வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. நல்ல கதைகள் பாஸ்.எங்க புடிச்சீங்க.சாரி படிச்சீங்க!

    ReplyDelete
  3. படிச்சேன்;புடிச்சுது.புடிச்சிட்டேன்!
    நன்றி முரளிதரன்

    ReplyDelete
  4. இரண்டு கதைகளுமே அருருருருமை!!!

    ReplyDelete
  5. உணவு பொருட்களை முதலில் நெய்வேத்தியம் செய்து பின்னர் எத்தனை வேண்டுமானாலும் தானம் செய்யலாம். இறைவனுக்கு படைக்கும் முன்னர் உண்டதும், எச்சிலை அவருக்கு படைத்ததும் ஏற்கத் தக்கதல்ல, அது கதையாக இருந்தாலும்.

    ReplyDelete
    Replies
    1. ஒரு குலையில் இரு பழம் எடுத்தால் மீதி எப்படி எச்சில் ஆகும்?கடையில் இரண்டு பழங்கள் வாங்கி நைவேத்தியம் செய்கிறோம்.குலையின் மீதிப்பழங்கள் எத்தனை பேர் சாப்பிட்டார்களோ?!
      நன்றி தாஸ்

      Delete
  6. நல்ல நல்ல கதைகள் குட்டன் ஐயா.

    ReplyDelete