Saturday, April 6, 2013

கேட்டதைத் தரவில்லை இறைவன்!



எனக்கு வலிமை தா எனக் கடவுளிடம் கேட்டேன்

எண்ணற்ற இடையூ றளித்து வலிமை தந்தான்!


எனக்கு நல்லறிவு தான் என அவனிடம் கேட்டேன்

எத்தனையோ பிரச்சினைகள் தீர்க்க சொல்லி தந்தான்!


எனக்குச் செல்வம் தா என நான் வேண்டி நின்றேன்

உழைக்கும் திறமையும் வலிமையும்  உடன் தந்தான்!


எனக்குத் துணிச்சல் தா எனப் பணிந்து கேட்டேன்

இடர் பல தந்தான்  நான் கடந்து போவதற்கு !


அன்பு வேண்டும் என அவனை நான் அணுகினேன்

வாடும் மக்கள் பலருக்கு உதவ வழி சொன்னான்!


வரங்கள் பல வேண்டும் என பரமனிடம் கேட்டேன்

வாய்ப்புகள் பல தந்து என் வாயை அடைத்தான்!


கேட்டது எதுவும் எனக்குக் கிடைக்கவில்லை ஆனால்


தேவையான எல்லாம் அவன் தந்தருள் செய்தான்!


8 comments:

  1. வளமுடன் திருப்தியோடு வாழ்க...

    ReplyDelete
  2. மன நிறைவே வாழ்கையின் வெற்றி .தொடருங்கள் வெற்றியை.வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. கேட்டதை தந்திருந்தால் நீங்கள் இப்போது இறைவனை நினைத்திருப்பீர்களா? அதனால்தான் அவைகளை நேரடியாகத் தராமல் அவைகளைக் கிடைக்க வழி செய்து அவனை எப்போதும் நினைக்க வழி செய்திருக்கிறான்.

    ReplyDelete
  4. எதைக் கேட்கவேண்டும் என நமக்குத் தெரியவில்லை
    எதைத் தரவேண்டும் என அவனுக்காத் தெரியாது
    ஆழமான சிந்தனையுடன் கூடிய அருமையான பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. கேட்டதை விட சிறப்பானவற்றையே இறைவன் தந்திரு்ப்பதாகத் தெரிகிறது. குறையொன்றுமில்லை! வாழ்க வளமுடன்!

    ReplyDelete
  6. அருமையான படைப்பு! வாழ்த்துக்கள்!

    ReplyDelete

  7. தெய்வம் காட்டுமே தவிர ஊட்டாது என்பார்களே!

    ReplyDelete