Friday, August 16, 2013

கோணலா இருந்தாலும் என்னோடது!



உடல் கோணல் இறைவன் தவறு

உள்ளம் கோணல் நம் தவறன்றோ?

உடல் கோணலை மறைக்க முடிவதில்லை

உள்ளக் கோணலோ ஒளிந்து செயல் படும்

பார்த்தால் சிலர் வெறுப்பர் உடல் கோணலை

பழகினால் அனைவர் வெறுப்பர் உள்ளக் கோணலை

நல்லவனாய் இருப்பின்

கோணல் உடலோனும் கொண்டாடப்படுவான்

அல்லவனாயின்

அழகுடலோனும் தூற்றப்படுவான் .

உடல் மட்டும் கோணலெனில்

சொல்வதில் தவறில்லை........

“கோணலாயினும் இது என்னுடையது” என்று!

உள்ளம் கோணலாயின்

உரைக்க முடியுமா அது போல்?!

வெட்கப்பட வேண்டாம் உடல் கோணலுக்கு
 
கட்டாயம் தலை குனியத்தான் வேண்டும்

உள்ளக் கோணலுக்கு!

( டிஸ்கி:ஒரு விளம்பரத்தைப் பார்க்கும்போது பிறந்த சிந்தனை!)

23 comments:

  1. உடல் கோணலை கண்களால் பார்க்கமுடியும். ஆனால் அகக் கோணலை காணமுடியுமோ? அது தெரியும் வரை என் செய்ய?

    ReplyDelete
    Replies
    1. நம் அகக் கோணலை நாமேதான் சரி செய்து கொள்ள வேண்டும்
      நன்றி சார்

      Delete
  2. டிவி பார்த்து என்ன சாதிச்சேன்னு இனி யாரும் உங்களை ஒண்ணும் கேக்க முடியாது

    ReplyDelete
  3. //வெட்கப்பட வேண்டாம் உடல் கோணலுக்கு கட்டாயம் தலை குனியத்தான் வேண்டும்
    உள்ளக் கோணலுக்கு! //

    அருமையான விஷயத்தை எளிமையாகச் சொல்லிட்டீங்கள் ஐயா. பாராட்டுக்கள் ஐயா.

    நேரமிருந்தால் நான் இன்று வெளியிட்டுள்ள சிறப்புப்பதிவுக்கு வருகை தாருங்கள் ஐயா.

    http://gopu1949.blogspot.in/2013/08/blog-post_15.html

    ReplyDelete
  4. அருமை! உள்ளம் கோணலானால் அசிங்கம் படத்தான் வேண்டும்! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  5. //கோணல் உடலோனும் கொண்டாடப்படுவான்

    அல்லவனாயின்

    அழகுடலோனும் தூற்றப்படுவான் .// நல்ல கருத்து

    ReplyDelete
  6. உள்ளக்கோணல் கொண்டவர்களை அடையாளம் கண்டு அவர்களை விட்டு விலகுவதே சிறப்பு... நல்ல பகிர்வு குட்டன்....

    ReplyDelete
  7. வாவ்வ்வ் அருமையான கவிதை ப்ரோ. உள்ளக் கோணல் வெளித்தெரியாது. ஆனால் என்றோ ஒருநாள் தெரிய வந்துவிடும்! சூப்பர்!!!

    ReplyDelete
  8. குறைகளை ஏற்றுக் கொள்ளும் பக்குவம்
    வந்தாலே கோணல் என்பது ஏது
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  9. "வெட்கப்பட வேண்டாம் உடல் கோணலுக்கு

    கட்டாயம் தலை குனியத்தான் வேண்டும்

    உள்ளக் கோணலுக்கு" சரியாகச் சொன்னீர்கள். .

    ReplyDelete
  10. கோணல் என்றோ ஒருநாள் தெரிந்து விடும்... நல்ல கவிதை,,

    ReplyDelete
  11. கோணலான குர்குரே இப்படியொரு அருமையான வரிகளா. சிற்பிக்கு கல்லும் கற்பனையை தூண்டும் என்பதுபோல! வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  12. கோணலுக்கு எதிர்ச்சொல்தான் நேர்மையோ..விளம்பரத்திலும் வித்தியாச சிந்தனை.

    ReplyDelete