Monday, August 12, 2013

தமிழ்மணம்-நெடுநாள் வடை!

அவர் தமிழார்வம் உள்ள ஒரு அயல்நாட்டு நண்பர்.

ஒரு நாள் என்னைக்கேட்டார்”தமிழில் ’நெடுநாள் வடை’என்று ஒரு இலக்கியம் 
இருக்கிற தாமே!  வடையைப் பற்றி ஒரு இலக்கியமா!”.

”ஓ!அதைப்பற்றி ஆங்கிலத்தில் படித்தீர்களா?”

“ஆம்!”

நண்பரே!அது நெடுநாள் வடை அல்ல.’நெடுநல் வாடை”

“அப்படியென்றால் என்ன?”

”இது பத்துப்பாட்டு நூல்களில் ஒன்று.ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியனைப் புகழ்ந்து பாடப்பட்டது”

“அதற்கு ஏன் அந்தப்பெயர்?”

”நூலில் குறிப்பிடப்படும் நிகழ்வுகள் வாடைக்காலத்தில் நடை பெறுகின்றன. தலைவனைப் பிரிந்து தவிக்கும் தலைவிக்கு அது மிக நீண்ட(நெடு) வாடைக் காலமாகப் படுகிறது.போரில் வெற்றி பெற்ற தலைவனுக்கொ வெற்றியின் காரணமாக ஒரு நல்ல வாடைக்காலமாகத் தோன்றுகிறது.  ஆகவே அது நீண்ட,நல்ல,வாடைக்காலம்!எனவே நூலின் பெயர் “நெடு  நல் வாடை’.இதுதான் புலவர் கவிதைகளின் சிறப்பு”

“அருமை”

“வடை ஒரு நாள் இருந்தாலே ஊசிப் போய்விடும்.நெடு நாள் இருந்தால் என்ன ஆகும்”

”எனக்கு இது தொடர்பான ஒரு நிகழ்வு நினைவுக்கு வருகிறது.இரு புலவர்கள் வடைபஜ்ஜி விற்கும் ஒரு டீக்கடைக்குப் போனார்கள்.வடை வாங்கினார்கள். வடையைப் பிய்த்துப் பார்த்தால் வடை ஊசிப்போய் நூல் வருகிறது.

ஒருவர் சொன்னார்” ஊசியிருக்கிறது”.இரண்டாமவர் சொன்னார் ”நூலுமிருக்கிறது”. வாசலில் ஒரு பெண் ஏதாவது கொடுப்பார்களா எனக் காத்திருப்பதைப் பார்த்தனர் ”தையலுக்காகும்” என அவளிடம் கொடுத்தனர்.என்ன தமிழ் விளையாட்டு பாருங்கள்”

“இப்போதெல்லாம் பெண்களுக்குத் தமிழ்க் கொடி ,தமிழ்ச்செல்வி என்றெல்லாம் அழகான பெயர்கள் வைக்கிறார்கள்;ஆனால் வேறு பெயரிட்டு அழைக்கிறார்கள்,அழகாகத் தமிழ் என அழைத்தால் என்ன”

”அழைக்கலாம்.ஆனால் பலருக்குத் தமிழின் சிறப்பான இந்தச் சிறப்பு ழகரம் உச்சரிக்க வருவதில்லையே.பழம் என்பதற்குப் பளம்,பயம்,பலம் என்றெல்லாம் சொல்கிறார்கள்.”

”ழகரம் என்றில்லை.லகர ளகர,னகர,ணகரமும் தகராறுதான்.சிறுவன் பல்லிக்குப்  போனான் என்கிறார்கள்.சுவரில் பள்ளி இருக்கிறது என்று சொல்கிறார்கள்.நெஞ்சத்துக்கு மணம் எனச் சொல்கிறர்கள்.பணம் என்பதைப் பனம்  என்கிறார்கள்.”

”ஆமாம்!குறிப்பாக இத்தகைய தமிழ்ப்பணியில் பெருந்தொண்டு ஆற்றுபவர்கள் தொ(ல்)லைக் காட்சியினர்தான்.

ஒரு நாள் ஓய்வில் வருகிறேன் ஐயா!தமிழ் பற்றி நிறையப் பேச வேண்டும்

வாருங்கள்.உங்களைப் போல் தமிழ் கற்ற  ஒருவர் திருக்குறளைத் திருத்த முனைந்த கதை ஒன்று சொல்கிறேன்!



22 comments:

  1. குட்டனின் உதவியுடன் தமிழ் கனி சுவைத்தோம்! ஊசியிருக்கிறது, நூலுமிருக்கிறது, தையலுக்காக்கும்............. ஆஹா இதுவல்லவோ தமிழ்!!

    ReplyDelete
  2. தமிழைக் கொலை செய்பவர்கள் பற்றி மிக அருமையாய் சொல்லியிருக்கிறீர்கள். இதை. இதைத்தான் உங்களிடம் எதிர்பார்த்தேன்! தொடருங்கள். காத்திருக்கிறேன்!

    ReplyDelete
  3. நெடுநாள் வடையும் குட்டனின் கைவண்ணத்தில் தமிழில் மணமாகும்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி தமிழ் இளங்கோ ஐயா

      Delete
  4. கேட்ட வ்டைகள் [கதைகள்] தான் என்றாலும், ஊசிடாமல் சூடாக சுவையாக உள்ளன. பாராட்டுக்கள், ஐயா.. தொடருங்கள். தொடர்ந்து தமிழ் பிழைகளைத் திருத்துங்கள்.

    ReplyDelete
  5. //ஆமாம்!குறிப்பாக இத்தகைய தமிழ்ப்பணியில் பெருந்தொண்டு ஆற்றுபவர்கள் தொ(ல்)லைக் காட்சியினர்தான்.//

    தமிழைக் கொலைசெய்து நாம் என்ன மொழி பேசுகிறோம் என்றே தெரியாமல் இளைய சமுதாயத்தினரை சீரழிப்பதில் இவர்களுக்கு பெரும் பங்குண்டு...

    ReplyDelete
    Replies
    1. ஆம் ஸ்கூல் பையன்!
      நன்றி

      Delete
  6. முடிந்தால் இந்த என் பதிவுக்கு இன்று வருகை தாருங்கள், ஐயா

    http://gopu1949.blogspot.in/2013/08

    ReplyDelete
  7. Replies
    1. நீங்களெல்லாம்தான் அதைச் செய்ய வேண்டும்!
      நன்றி கருண்

      Delete
  8. தமிழார்வத்திற்குப் பாராட்டுக்கள்..

    ReplyDelete
    Replies
    1. நன்றி இராஜராஜேஸ்வரி அவர்களே

      Delete
  9. ஆயிரமாவது பதிவுக்கு வாழ்த்துக்கூறி
    சிறப்பித்ததற்கு மனம் நிறைந்த
    இனிய அன்பு நன்றிகள்..

    ReplyDelete
  10. ஒருவர் சொன்னார்” ஊசியிருக்கிறது”.இரண்டாமவர் சொன்னார் ”நூலுமிருக்கிறது”. வாசலில் ஒரு பெண் ஏதாவது கொடுப்பார்களா எனக் காத்திருப்பதைப் பார்த்தனர் ”தையலுக்காகும்” என அவளிடம் கொடுத்தனர்.என்ன தமிழ் விளையாட்டு பாருங்கள்”//

    அருமை. இப்படி கவிதை நயத்துடன் இயல்பாகவே பேசும் அளவுக்கு வேறெந்த மொழியிலாவது முடியுமா என்று தெரியவில்லை.

    கடந்த வாரம் நீதித்துறையில் மிக உயர்ந்த பதவியில் முதல் முதலாக அமர்த்தப்பட்டுள்ள ஒரு தமிழரின் உரையைக் கேட்க நேர்ந்தது. அவருக்கும் ழகரம் லகரமாகத்தான் வருகிறது. ஆக, சிறுவயதிலேயே ஒருவருடைய பேச்சு திருத்தப்படவில்லையென்றால் அவர்கள் எந்த உயர்ந்த பதவியை அடைந்தாலும் அந்த தவறு அப்படியே இருக்கும் என்பது இவர் ஒரு உதாரணம். அது தவறு என்று அவருக்கே தெரியவில்லை என்பதுதான் கொடுமை. அத்தகையோர் தமிழில் சொற்பொழிவு செய்யாமல் இருப்பதே மேல்.

    ReplyDelete
    Replies
    1. அது போன்ற உச்சரிப்புக் கொலையைக் கேட்டால் கோபம் வருகிறது ஐயா!தமிழறிஞர்கள் என்று பெயர் பெற்ற சிலர் கூட இப்படிப் பேசுவது வேதனை!
      நன்றி

      Delete
  11. கற்றுக் கொள்ளத் தயாராயிருக்கிறோம்
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  12. அருமை.....

    தொடரட்டும் தமிழ் மணம்!

    ReplyDelete