Thursday, October 23, 2014

கத்தி...ஒரு பார்வை
பல தினங்களாகவே கத்தி பற்றி ஊடகங்களில் வெகுவாகப் பேசப்பட்டு வருகிறது. கத்திக்காயம் பட்டால் டாக்டரிடம்தானே(!) போக வேண்டும்?!கத்தியால் காயம் படுவது என்பது வேறு;கத்திக் கத்தியே காயம் படுவது என்பது வேறு.இந்த பரபரப்பான சூழலில் கத்தி பற்றிய என் பார்வை…….

கத்தி  என்பது வெட்டுவதற்குப் பயன்படும் கருவி. வெட்டும் கூர்மையான பாகமும் பிடியும் கொண்டதாகக் கத்திகள் அமைந்திருக்கும். கற்காலத்திலிருந்து கத்திகள் ஆயுதங்களாகவும் பயன்பட்டு வருகிறது. நவீன கருவிகளின் வரவால், கத்தியின் ஆயுதப் பயன்பாடு குறைந்து வருகிறது. இதது சமையலில் முக்கிய இடம் பெறுகிறது. தேவைகளைப் பொருத்துப் பல அளவுகளிலும் கத்திகள் தயாரிக்கப்படுகின்றன. கத்தி தயாரிக்கும் நிறுவனங்கள் ஆயிரக்கணக்கில் உள்ளன.

முற்காலத்தில், பாறை, எலும்பு, தீக்கல் உள்ளிட்டவற்றால் கத்தி செய்யப்பட்டது. தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால், வெண்கலம், செப்பு, இரும்பு, எஃகு, பீங்கான், தைட்டானியம் ஆகியவற்றிலும் கத்தி செய்யப்படுகிறது. பல்வேறு பண்பாடுகளில் கத்தியின் பயன்பாடு காணப்படுகிறது. மனிதன் முதன்மை கண்டுபிடிப்புகளில் கத்தியும் ஒன்று. இதனால், பண்பாடு, சடங்குகளில் கத்தி முக்கிய இடம் பிடிக்கிறது.

சரித்திர,புராணப் படங்களில் வரும் சண்டைகளை நாம் கத்திச் சண்டை என்று அழைக்கிறோம்.ஆனால் கத்திச் சண்டை அல்ல அது;வாட் சண்டை.வாள் பற்றிப் பார்ப்போமா?

வாள் என்பது உலோகத்தால் செய்யப்பட்டதும், கூரிய விளிம்பு கொண்டதும், நீளமானதுமான ஒரு ஆயுதம் ஆகும். வெட்டுவதற்கும், குத்துவதற்கும் பயன்படும் இவ்வாயுதம் உலகின் பல நாகரிகங்களிலும் பல நூற்றாண்டுகளாகப் பயன்பட்டது. வாள் ஒரு நீண்ட அலகையும், ஒரு கைப்பிடியையும் கொண்டிருக்கும். இதன் அலகின் ஒரு பக்கமோ அல்லது இரு பக்கங்களுமோ கூராக இருக்கக்கூடும். விளிம்புகள் வெட்டுவதற்கும், அலகின் நுனி கூராகக் குத்துவதற்கு ஏற்றவகையிலும் இருக்கும். வாள் போர்க் கலையின் அடிப்படை நோக்கமும், அதன் வடிவமும் பல நூற்றாண்டுகளாகவே அதிக மாற்றங்கள் எதுவும் இன்றி இருந்துள்ளது. எனினும் அதன் நுட்பங்கள், அது பயின்றுவந்த பண்பாடுகள், காலப்பகுதிகள் என்பவற்றைப் பொறுத்து வேறுபட்டுள்ளன. இது முக்கியமாக வாளின் அலகின் வடிவமைப்பினதும், அதன் நோக்கத்தினதும் வேறுபாடுகளால் ஏற்பட்டது ஆகும். தொன்மங்களிலும், இலக்கியத்திலும், வரலாற்றிலும் பல வாள்களுக்குக் கொடுக்கப்பட்ட பெயர்களில் இருந்து அவற்றுக்கிருந்த மதிப்புப்பற்றி அறிந்துகொள்ள முடிகிறது.

ஆனால் வாட்சண்டையைக் கத்திச் சண்டை என்றழைப்பதும் ஒரு விதத்தில் சரியே!ஏனெனில் சண்டை போடும்போது கத்திக் கொண்டேதானே சண்டை போடுகிறார்கள்?!

வழக்கமாக அனைவரும் சொல்லும் ஒரு மொழி”ஒரே உறையில் இரு கத்திகள் இருக்க முடியாது”என்பது
 .
ஏன் இன்னைக்கு கத்தி பத்தி இவ்வளவு கத்தறேன்னு பாக்கிறீங்களா?

காலையில காய் வெட்டும்போது அந்தக் கத்தி  விரலைக் கொஞ்சம் பதம் பார்த்து விட்டது
டாக்டரை(!)ப் பார்க்க வேண்டுமோ?!

(கத்தி வாள் பற்றிய தகவல்கள் விக்கி பீடியா உபயம்.)

டிஸ்கி:பதிவர்கள் பயணநாள் நெருங்கி விட்டது.25 ஆம் தேதியே மதுரை திருவிழாக்கோலம் பூணப்போகிறது.செல்ல முடிந்தவர்கள் பாக்கியவான்கள்.நான் பெருமூச்சு மட்டுமே விட முடியும்!


2 comments:

  1. தங்களுக்கென்று ஏதேனும் வித்தியாசமான தலைப்பு கிடைத்துவிடுகிறது எங்களை ஏமாற்ற. எல்லோரும் ‘கத்தி’ திரைப்படம் பற்றி கத்தி பேசிக் கொண்டிருக்கும்போது நீங்கள் தெரியாத/தெரிந்த தகவல்களை சுவைபடத் தந்துள்ளீர்கள்.நன்றி!

    ReplyDelete
  2. கத்தி பற்றிய சுவையான தகவல்கள்!

    இந்த தடவை நான் ஏமாறலை! :)

    ReplyDelete