Showing posts with label பதிவர் திருவிழா. Show all posts
Showing posts with label பதிவர் திருவிழா. Show all posts

Thursday, October 23, 2014

கத்தி...ஒரு பார்வை




பல தினங்களாகவே கத்தி பற்றி ஊடகங்களில் வெகுவாகப் பேசப்பட்டு வருகிறது. கத்திக்காயம் பட்டால் டாக்டரிடம்தானே(!) போக வேண்டும்?!கத்தியால் காயம் படுவது என்பது வேறு;கத்திக் கத்தியே காயம் படுவது என்பது வேறு.இந்த பரபரப்பான சூழலில் கத்தி பற்றிய என் பார்வை…….

Sunday, September 1, 2013

பதிவர் திருவிழாவில் குட்டன்!



குட்டனும் அவர் நண்பர் சுட்டனும் சந்திக்கிறார்கள்.

சுட்டன்:என்ன குட்டன்!பதிவர் திருவிழா பதிவர் திருவிழான்னு பெனாத்திக்கிட்டே 
இருந்தீங்களே? போனீங்களா?

குட்டன்:பின்ன!போகாமல் இருப்பேனா?

சுட்டன்:அப்ப உங்க முகத்தைக் காட்டிட்டீங்க?!

குட்டன்:அதான் இல்ல.நான் அங்க பதிவு பண்ணவே இல்ல!

சுட்டன்:லேட்டாப் போனீங்களா?

குட்டன்:இல்லை ;9 மணிக்கு முன்னாலயே போயிட்டேன்.நான் போன போது தலைவர் புலவர் ஐயா,முன்னிலை சென்னைபித்தன்,அமைப்புக்குழு உறுப்பினர்கள் எல்லாம் வந்துட்டாங்க.ஆனா நிகழ்ச்சி 9 மணிக்கு ஆரம்பமாகல !

சுட்டன்:ஏன்?

குட்டன்:பெரும்பான்மைப் பதிவர்கள் லேட்டாத்தான் வந்தாங்க!ஆனாப் பாரு சுட்டன் ,சில பதிவர்கள் இரவு தூங்கம அரங்க அமைப்புகளில் இருந்திருக்காங்க.என் காதில் மதுமதி,ரூபக் ராம்,இன்னும் ஓரிரு பெயர்கள் விழுந்தன.பாவம் மிகவும் களைத்துக் காணப்பட்டாங்க.நான் பதிவு பண்ணாமக் காத்திருந்து ஒரு ஓரமா உள்ள போய் உட்காந்துக்கிட்டேன்!

சுட்டன்:என்னென்ன நிகழ்ச்சிகள்?

குட்டன்:நிகழ்ச்சி நிரலில் கண்ட படிதான்;சுரேகா தொகுத்து வழங்கினார். புலவர், சென்னைபித்தன் பேச்சுக்குப் பின் பதிவர்களின் சுய அறிமுகம்.117 பதிவர்கள் அறிமுகம் செஞ்சுக்கிட்டாங்க. ஓரிருவர் தவிர மற்றவர்கள் சுருக்கமா முடிச்சுக்கிட்டாங்க.12.15க்குப் பாமரன் அவர்கள் பேச ஆரம்பித்தார்.தன் வெகு சுவாரஸ்யமான உரையை சரியா ஒரு மணிக்கு முடிச்சுக்கிட்டார். அதுக்கப்புறம் மிக முக்கியமான நிகழ்ச்சி!சாப்பாடு!

பத்து மணி வாக்கில குளுகுளு ஜூஸ் ஒண்னு குடுத்தாங்க!11 மணிக்கு மேல சூப்பர் டீ!சில பதிவர்கள் ரெண்டு டீ குடிச்சாங்கன்னா பாத்துக்கயேன்!

சுட்டன்:சாப்பாடு எப்படி?

குட்டன் :அசைவம் நல்லா இருந்திருக்குமோ என்னவோ?.நான் தயி சாதம் மட்டுமே சாப்பிட்டேன்!

சுட்டன்:மதியம் நிகழ்ச்சிகள்?

குட்டன்:ஹி,ஹி.மாலை ஒரு திருமண வரவேற்புக்குத் தங்கமணியைக் கூட்டிட்டுப் போக வேண்டியிருந்தது அதனால மதியம் வீட்டுக்குப் போயிட்டேன்!நேரலை பார்க்கலாம்னா அது அவ்வளவு சரியா வல்ல!

இவ்வளவு சிறப்பா எந்தவிதமான பிரச்சினையும் இன்றி விழாவை நடத்தி முடித்த ,புலவர் தலைமையில் இயங்கிய இளைஞர் படைக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.இப்படை தோற்கின் எப்படை ஜெயிக்கும்?

அடுத்த ஆண்டு மதுரையா,ஈரோடா,கோவையான்னு தெரியலை,ஒலிம்பிக் போட்டிக்கு நாடுகள் போட்டி போடற மாதிரி இதுக்கும் போட்டியா இருக்காம்!

எந்த ஊரா இருந்தாலும் போயிற வேண்டியதுதான்!

வர்ட்டா?

Friday, August 30, 2013

மன நல மருத்துவருடன் குட்டன்!-பதிவர் திருவிழா-2013



மன நல மருத்துவர் முன் அமர்ந்திருக்கிறார் குட்டன்.

”சொல்லுங்க” என்கிறார் ம ந ம.

”எனக்கு நாலைந்து  நாளா ஒரு பிரச்சினை”

”பிரச்சினை இருக்கறதுனாலதானே வந்துரிக்கீங்க!என்ன பிரச்சினை?”

”1 ஆம்தேதி தமிழ் வலைப்பதிவர் திருவிழா நடக்க இருக்கிறது”

“ஆமாம்!நண்பர் ருத்திரன் கூடச் சொல்லிகொண்டிருந்தார்.திருவிழாதான் உங்க பிரச்சினையா?!”

”இல்ல டாக்டர்.தினம் ஒரே கனவு வந்து என்னை இம்சிக்குது. ”

”கனவா?திருவிழா சம்பந்தமான கனவா?

“ஆமாம் டாக்டர்”

“என்ன கனவு சொல்லுங்க”

”கனவில திருவிழா போவதற்காக நான் ரொம்ப ஆவலுடன் இருக்கிறேன்.நான் போய் என்னை அறிமுகம் செய்து கொண்டதும் பல பதிவர்கள் என்னைச் சூழ்ந்துக்குவாங்க.
வெகுவாகப் பாராட்டுவாங்க என்றெல்லாம் பல எதிர்பார்ப்புகள்.நல்லா டிரஸ் பண்ணிக் கிட்டுப் போகிறேன்.”

“நல்லாத்தானே போயிட்டிருக்கு”டாக்டர் ஜோக்கடிக்கிறார்

“இனிமேதான் பிரச்சினையே!நான் போய் அரங்குக்குள் நுழைகிறேன்.வாசலில் இருவர் அமர்ந்து வருகைப்பதிவு செய்து கொண்டிருக்கின்றனர்.நானும் எனக்கு முன் வந்த மூவருக்குப் பின் காத்துக் மொண்டிருக்கிறேன்.அவர்கள் பேசிக்கொள்வதிலிருந்து பதிவு  செய்யும் அவர்கள் இருவரும் சீனு,ரூபக் ராம் என்று அறிகிறேன்.எனக்கு மிக மகிழ்ச்சி.அதற்குக் காரணம் பின்னர் சொல்கிறேன்.என் முறை வருகிறது”

”பெருமையாகச் சொல்கிறேன்வலைப்பூவின் பெயர் “குச்சி மிட்டாயும் குருவி ரொட்டியும்”என் பெயர் குட்டன்.அவர்கள் இருவரும் பரபரப்பாகி என்னை வரவேற்பார்கள் என்ற அல்ப ஆசை!ஆனால் அவர்கள் சர்வ சாதாரணமாக விவரங்களை பதிவு செய்து கொண்டு அடையாள அட்டையைக் கொடுக்கின்றனர்.”

”எனக்குப் பெருத்த ஏமாற்றம்.ஏன் தெரியுமா டாக்டர்?இவர்கள் இருவருமே என் ரசிகர்கள் என்று சொன்னவர்கள்.”

“நேரில் சொன்னார்களா?

”இல்லை டாக்டர் பின்னூட்டத்தில் சொன்னார்கள்.என்னை எதிர்பார்ப்பதாகவும் சொன்னவர்கள்”

“என்ன சார் நீங்க?ஒரு வருசத்துக்கு மேலா வலைப்பூ நடத்துறீங்க.இது கூடத் தெரியலையே. பின்னூட்டத்தில சொல்றதெல்லாமே உண்மைன்னு நம்புறீங்க.உங்களுக்குத்தான் குச்சி மிட்டாயும்  குருவி ரொட்டியும் குடுக்கணும்.அதெல்லாம் ஒரு பின்னூட்ட நாகரிகம். அவ்வளவுதான். இதெல்லாம் ரொடீன்.சில பேர் ரைட்டு,ஓகேன்னுவாங்க சிலர்’ ம்’ ன்னு ஒரு முக்கு முக்குவாங்க.அது போலத்தான்!”

குட்டன் மிரளா மிரள விழிக்கிறார்.

டாக்டர் தொடர்கிறார்”உங்க ஆழ் மனசுல இப்படிப் பட்ட எண்ணம்  ஊன்றிப்போச்சு.நீங்க திருவிழாவுக்குப் போய் அங்கே உங்களை யாரும் கண்டுக்கலைன்னா,அது மன அழுத்தத்தில் கொண்டு போய் விடும்;பிரச்சினை பெரிசாகி விடும்.”

”அப்ப என்ன செய்யலாம் டாக்டர்”

”ஒரே ஒரு வழிதான்”

”என்ன ?”

“திருவிழாவுக்குப் போகாதீங்க?!

டாக்டர் அறிவுரைப்படிக் குட்டன் திருவிழாவுக்குப் போவதில்லை என முடிவெடுக்கிறார்!

Tuesday, August 27, 2013

பதிவர் திருவிழா-2013--கல்யாணம் பண்ணிப் பார்!

கல்யாணம் பண்ணிப்பார்;வீட்டைக் கட்டிப்பார்என்று சொல்வார்கள்.

இரண்டிலும் உள்ள சிரமத்தை எடுத்துக்காட்டுவதற்காகச் சொல்லப்பட்ட வார்த்தைகள் இவை.

இரண்டுக்குமே அதிகபொருள் செலவு;அதிக நேரம் தேவை-சரியாகத் திட்டமிடுதல், தவறின்றிச் செயலாற்றுதல்-,அதிக உழைப்பு தேவை.


ஆனால் இன்றைய சூழலில்,பொருட்செலவைத் தவிர மற்ற சிரமங்கள் இல்லாமல் போய் விட்டன.

கல்யாணத்துக்கும் காண்ட்ராக்டர் இருக்கிறார்;வீடு கட்டவும் காண்ட்ராக்டர் இருக்கிறார்.

என் உறவினர் ஒருவர் ஒரு ஹோட்டலில் மகளின் திருமணம் நடத்த ஏற்பாடு செய்தார்.
அப்போது அந்த ஓட்டலின் மேலாளர் கூறினாராம்மணமகன்,மணமகள்,காசோலைப் புத்தகம் மூன்றுடன் வாருங்கள் போதும்என்று

ஆம் திருமணம் நடத்துவது என்பது அவ்வளவு எளிதாகி விட்டது.

ஆனால் ஒரு பதிவர் திருவிழா நடத்துவது என்பது திருமணம் ,வீடு இரண்டையும் விட மிகப் பெரும் செயலாக இருக்கிறது என்பது  ஒரு நண்பர் வழியாக எனக்குக் கிடைக்கும் செய்திகள் மூலம் தெரிகிறது.

இரண்டு மாதமாகத் திட்டமிடல்.

ஒவ்வொரு வாரமும் ஆலோசனைக் கூட்டம்.

பணியைப் பிரித்துகொண்டு செயலாற்றும் தனித்தனிக் குழுக்கள்.

குழுக்களின் ஒருங்கிணைப்பு.

இன்னும் நான்கு நாட்களே  பாக்கி இருக்கும் நிலையில் கடைசிக்கட்ட ஆலோசனைகள்.

சிறப்பான உணவு ஏற்பாடு.

காவல் துறையின் அனுமதி பெறல்

விழாவுக்கு முதல்நாள் முதல் வெளியூர்ப் பதிவர்களை வரவேற்றல்.

தங்குமிடம் ஏற்பாடு செய்தல்

விழாவன்று மேடை,ஒளி ஒலி ,புகைப்படம் ,வீடியோ ஏற்பாடுகள்.

தொலைக்காட்சி ஒளிபரப்புக்கான ஏற்பாடுகள்.

நேரலை ஒளிபரப்பு ஏற்பாடு.

கடைசி நாள் வரை நிகழ்ச்சி நிரலை மேம்படுத்தத் திட்டமிடல்

எல்லாவற்றுக்கும் மேலாக விழாவன்று நேர மேலாண்மை.

எவ்வளவு ஈடுபாட்டுடன்,சரியாகத் திட்டமிட்டு,பணிகளைப் பிரித்துக் கொண்டு
முழு   மூச்சுடன் செயல்படுகிறார்கள் இந்த இளைஞர்கள்!

இந்த உழைப்புக்குப் பரிசாக கிடைக்கப்போவது விழாவின் மகத்தான வெற்றி!


அடுத்த வாரம் இந்நேரம் விழா சிறப்பாக நடந்தேறி . விழா அமைப்பாளர்களுக்கு திருஷ்டி கழித்து முடிந்திருக்கும்.

இளைப்பாற நேரம் சிறிதும் இன்றி அலுவலகப் பணி.அழைக்க ஓடிக்கொண்டிருப்பார்கள்!

ஆனால் புதிய நண்பர்களின் அறிமுகம்,விரிவடைந்து விட்ட நண்பர் வட்டம்  அனைத்துக்கும் மேலாக சாதித்து விட்டோம் என்ற மன நிறைவு அவர்கள் களைப்பைப் போக்கி விடும்

வாழ்த்துக்கள் !

டிஸ்கி:”கல்யாண சமையல் சாதம்  காய்கறிகளும் பிரமாதம்” என்று கடோத்கஜன் பாடுவது போல் பாட வைக்கும் விருந்து காத்திருக்கிறதாமே!

என்ன மெனு சொல்லுங்கப்பா,நாரதரும் தேவேந்திரனும் தெரிஞ்சுக்கட்டும்!












Monday, August 26, 2013

பதிவர் திருவிழா 2013--தேவலோகத்திலும்!



இடம்:தேவலோகம்,இந்திர சபை.

ரம்பா,ஊர்வசி ஆகியோரின் நடனத்தை தேவேந்திரன் தன் சிம்மாசனத்தில் அமர்ந்து ரசித்துக் கொண்டிருக்கிறான்.

நவக்கிரகங்கள்,தேவர்கள் .அஷ்ட திக் பாலகர்கள் எல்லோரும் அமர்ந்திருக்கின்னர்.

அப்போது “நாராயண,நாராயண” என்ற குரல் கேட்கிறது.

நாரதர் வருகிறார்.

இந்திரன்:வாருங்கள் நாரதரே!பூலோக சஞ்சாரம் எல்லாம் சுபமாக முடிந்ததா?

நாரதர்:ஆகா!சென்னை நகருக்குச் சென்றிருந்தேன்.இந்திர லோகம் போல் கோலாகலமாக இருக்கிறது!

இந்:அப்படியா?என்ன விசேஷம்?

நா:செப்.முதல் தேதியன்று தமிழ் வலைப்பதிவர்கள் ஒன்று கூடி இரண்டாவது வலைப்பதிவர் திருவிழா நடத்த இருக்கிறார்கள்.மிகுந்த கவனத்துடன் திட்டமிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இந்:ஓகோ?சென்ற ஆண்டு இன்றைய தேதியில்தானே முதல் மாநாடு நத்தினார்கள்? அதைப்பற்றி நீங்கள் சொன்ன பின்தானே,நம் தேவலோகத்திலும் வலைப்பதிவுகள் தொடங்கினோம்?எப்படி நடக்கிறது நம் வலைப்பதிவுலகம்?

நா:உனக்குத் தெரியாதா இந்திரா?

இந்:எனக்கு அதற்கெல்லாம் நேரமேது நாரதரே?

நா:ஆமாம்,ஆமாம்,நடனம்பார்க்கவே நேரம் போதவில்லை!

இந்:நாரதரே!

நா:தப்பு,தப்பு. நாராயணன் தினம் மரபுக்கவிதை எழுதுகிறார்,சிவனோ துரும்பு கிடைத்தாலும் அதைப் பதிவாக்கி விடுகிறார்,விநாயகர் குடும்பப்பதிவராகி விட்டார்!எல்லாம் நன்றாகவே நடந்தாலும் பூலோகம் போலில்லை இந்திரா!

இந்:அப்படியா?நடக்க இருக்கும் விழா பற்றிச் சொல்லுங்கள்.

நா:விழாவன்று காலை நிகழ்ச்சிக்குப் பதிவுலக பீஷ்ம பிதாமகர் ஆயிரம் பிறை கண்ட மூதறிஞர்புலவர் இராமானுசம் அய்யா அவர்கள் தலைமை தாங்குகிறார்,அடையார் அஜீத் எஅழைக்கப்படும் மூத்த திவர் சென்னபித்தன் முன்னிலை.எழுத்தாளர் திரு பாமரன் அவர்கள் சிறப்புரை.முக்கியமாக பதிவர்கள் அனைவரின் சுய அறிமுகம் 

பின் மதியம் தேவலோக உணவையும் விஞ்சும் உணவு—சைவம் அசைவம் இரண்டும்!

மதிய நிகழ்ச்சிகளில் பதிவர்கள் சிலர் பாட்டு நடனம்,நாடகம் என்று கலக்கப்போகிறார்கள். 

சேட்டைக்காரன்,சதீஸ் சங்கவி,மோகன் குமார்,யாமிதாஷா ஆகிய பதிவர்களின் நூல் வெளியீடு.

விழாக் குழுவினர் செயலாற்றும் வேகத்தைப் பார்த்தால் எனக்கே பிரமிப்பாக இருக்கிறது, ”மெய் வருத்தம் பாரார்,பசி நோக்கார்,கண் துஞ்சார்” என்ற பாடல்தான் நினைவுக்கு வருகிறது

இந்:கேட்பதற்கே பிரமிப்பாகத்தான் இருக்கிறது!

நா: நான் விழாவன்று அரங்குக்குச் சென்று கண்டு களிக்கப் போகிறேன்.தேவேந்திரா நீயும் என்னுடன் வந்து விழாவில் கலந்து கொள்ளேன்.

இந்:நானே நினைத்தேன்;நீங்கள் சொல்லி விட்டீர்கள்,அவசியம் வருகிறேன்.

நா:என்னைப்போல் மறைவாக இருந்தால் சுவை இருக்காது.நீ ஒன்று செய்.குட்டன் என்று ஒரு குசும்புப் பதிவர் இருக்கிறார்;அவர் அநேகமாக விழாவுக்கு வரமாட்டார்.நீ அவரைப்போல் வேடம் தாங்கி வந்து விடு.வேறொருவர் போல் வேடம் போட உனக்குச் சொல்லியா கொடுக்க வேண்டும்!

இந்:நாரதரே!

நா:தப்பு,தப்பு.

இந்: சரி நாரதரே!அந்தகுட்டன் வந்துவிட்டால்?

நா:வந்தால் வரட்டுமே!அவர் என்ன கௌதமரா?பதிவர் வேடமிட்டு வந்த உன் மேனி முழுவதும் கீபோர்டாகட்டும் என்று சபிக்கவா முடியும்?

இந்:நாரதரே!

நா: தப்பு,தப்பு.

இந்:சரி நாரதரே நாம் செல்வோம்.பார்த்து விட்டு வந்தபின் அதே போல் ஒரு விழா தேவ லோகத்திலும் நடத்த வேண்டும்.

 நா:ஆகா! திவ்யமாக நடத்தலாம் ,செல்லுமுன் ஒரு எச்சரிக்கை.நீ வழக்கம்போல் சோம பானம் ,சுராபானம் ஏதாவது குடித்து விட்டு வராதே.வெளியேற்றி விடுவார்கள்.படம் பிடிக்கும் கருவியைக் கட்டுப்பாட்டுடன் உபயோகி.பெண்களைப் படமெடுக்கக்கூடாது.ஒழுக்கமாக நடந்து கொள்ள வேண்டும்.

தேவேந்திரன் தலையாட்டுகிறான்.

டிஸ்கி:விழாவன்று பதிவர்கள் இவ்விரு தேவலோக வாசிகளையும் கண்டு கொள்ள முடிகிறதா பாருங்கள்!:))