சில நாட்களாக ஒரே யோசனை.
உக்காந்து யோசிச்சாச்சு;நின்னு
யோசிச்சாச்சு
ரூம் போட்டுக்கூட யோசிச்சாச்சு
உருப்படியா ஒரு ஐடியாவும் வரலை
நேத்து தூக்கத்தில ஒரு கனவு !
அதில ஒரு சாமியார் வந்து”மகனே!எளிய வழி
இதுதான்”னு ஒரு வழியைச் சொன்னாரு
யோசிச்சாச் சரியாத்தான் இருக்குது!
விசயம் இதுதாங்க,
என்னோட பதிவுக்கு நிறைய பேர் வருகை
தரணும்
கருத்துச் சொல்லணும்
ஓட்டுப்போடணும்
தமிழ் மணம் ரேங்கில மேல போகணும்
இதை எப்படிச் சாதிக்கலாம்னுதான் யோசனை.
தினம் ஒரு பதிவு எழுதலாம்!
நிறைய பதிவுல போய் பின்னூட்டம் இடலாம்!
நிறைய பேருக்கு ஓட்டுப் போட்டுட்டு,த.ம.+1
ன்னு சொல்லிட்டு வரலாம்
இதெல்லாம் போதாது
அதுக்குத்தான் சாமியார் வழி சொன்னார்!
ரொம்ப எளிசான வழி!
ஆமாங்க
என் பேரை மாத்திக்கப் போறேன்
பல பேர் சோசியங்க கிட்ட போய் ஆயிரக்கணக்கில் பணம் கொடுத்து அதிர்ஷ்டப் பெயரா மாத்திக்கிறாங்க இல்ல?
அது மாதிரி.......
இன்று முதல் என் பெயர் “குட்டன்ஜி”
ஆனா இது சரியா இருக்கான்னு நீங்கல்லாம்
சொன்னாத்தான் நான் மாத்திக்குவேன்!
வரலாறு காணாத அளவில் வந்து கருத்துச்
சொல்வீங்களா?!