“வாப்பா!எப்படி இருக்கே”
”ஏதோ இருக்கேன்.எனக்கு ஒரு உதவி செய்யணும்பா.”
“என்ன சொல்லு”
”என் பெயரைத் தமிழ்ப் படுத்தணும்”
“ஏம்பா திடீர்னு?”
“நான் காதலிக்கும் பெண்ணோட அப்பா ஒரு தமிழ்ப் பித்தர்.அவரோட மகளுக்கு,அதாவது என் காதலிக்கு முதலில் வைத்த பெயரான ’சாந்தி’ என்பதை ’அமைதி’ என்று மாற்றியவர். நானும் தமிழ்ப் பெயர் வச்சுக்கிட்டா அவர்கிட்ட நல்ல பெயர் வாங்கிடலாம்”
”ஆனா உன் பெயர்ல கொஞ்சம் சிக்கல் இருக்கே”
”என்னப்பா?”
“தமிழ்ப் படுத்தினா நல்லாருக்காதே”
“எல்லாம் சரியா இருக்கும்;சொல்லு”
”சரி;அப்புறம் என்னைக் குத்தம் சொல்லாதே.உன் தமிழ்ப் பெயர்...........
“தற்குறி”
“அய்யோ!என்னப்பா?’
“ஆமா!சுயம்புலிங்கம்தானே உன் பெயர்?!”
!!!!!!!!!!!!!!!!!!!!!