ஒருவன் ஒரு புதுக்கார் வாங்கினான்.
அக் காரின் சிறப்பு என்ன என்றால்,அது
ஒரு ரோபோ கார்.
அவன் என்ன கட்டளையிட்டாலும் அதைத் தானே
செய்து முடிக்கும்.
அது வந்த பின் அவன் எங்கெல்லாம் சென்று வரவேண்டுமோ
அங்கெல்லாம் அதை அனுப்பி விட்டு நிம்மதியாக இருக்க ஆரம்பித்தான்;
அதுவும் அவன் கட்டளைகளைச் சரியாக
நிறைவேற்றி வந்தது.
ஒரு நாள் அவன் மனைவி சொன்னாள்”எனக்கு
இன்று மிகக் களைப்பாக இருக்கிறது.எனவே உங்கள் காரை அனுப்பிக் குழந்தைகளைப் பள்ளியிலிருந்து
அழைத்து வரச் சொல்லுங்கள்”
அவனும் காரிடம் “என் குழந்தைகளை அழைத்து
வா”எனச் சொல்லி அனுப்பினான்.
கார் வெகு நேரம் திரும்பி வரவில்லை.
அவனுக்குக் கவலை அதிகமாகிப் போலீஸில்
புகார் செய்யப் புறப்படும் நேரத்தில் கார் வந்து சேர்ந்தது.
“உங்கள் குழந்தைகள்”என்று சொல்லி நின்றது.
காரிலிருந்து எதிர்வீட்டுச் சிறுமியும்,பக்கத்து வீட்டுப் பையனும்,அவன் ஆபீஸ் டைப்பிஸ்ட் மகளும்,அவன் மனைவியின்
நண்பியின் பையனும் இறங்கினர்.
மனைவி கோபத்துடன் அவனைப் பார்த்துக்
கேட்டாள்”இவர்களெல்லாம் உங்கள் குழந்தைகளா?”
அவன் கேட்டான்”அது இருக்கட்டும் .ஆனால்
காரில் நம் குழந்தைகள் இல்லையே அதற்கு என்ன சொல்கிறாய்?”
ஹய்யோ ஹய்யோ!...
ஹய்யோ ஹய்யோ!...
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!:)))))))
