Friday, March 9, 2012

நாங்க வெளி நாட்டிலேருந்து வந்திருக்கோம்ல!

கையில மினரல் வாட்டரை வச்சிக்கிட்டே திரியிவாங்க... (அவங்க சுகாதாரமா இருக்காங்களாம்!)


வெளி நாட்டிலிருந்து இந்தியாவுக்கு லக்கேஜ் கொண்டு வந்த பேக்கில் உள்ள ஸ்டிக்கரை 4 மாசம் ஆனாலும் கிழிக்க மாட்டாங்க.. (10 லட்ச ரூபாய் லாட்டரி சீட்டு போல, பத்திரமா வச்சிக்கிட்டு என்ன பண்றாங்களோ?)

கேபின் லக்கேஜ் பேக்கை, நம்ம ஊரு ரோட்டுல உருட்டிக்கிட்டு அல்லது தள்ளிக்கிட்டு போறதுக்கு முயற்சி செய்வாங்க.. (நம்ம ஊரு ரோட்ல கார் ஓட்டுறதே, சர்க்கஸ் சாகசம் மாதிரி.. இதுல இதுவேறயா?)

குளிக்கவே தேவையில்லாத மாதிரி சென்ட்டு, டியோட்ரன்ட், பாடி ஸ்பிரே அடிச்சிகிட்டு அலையறது (பக்கத்துல நின்னு பேசறவங்களுக்கே.. மறுநாள்தான் அந்த வாசனையே போகும்னா பாத்துக்கோங்க!)

கையேந்தி பவன்ல கூட கிரிடிட் கார்டை எடுத்து நீட்டுவாங்க... (மப்புல இல்ல, மேகம் தெளிவா இருக்கும்போதே!)

சுத்தத்தை பத்தி அடிக்கடி மறக்காம கருப்பு எம்.ஜி.ஆர் போல பேசிகிட்டே இருப்பாங்க. ரோட்டு கடையில டீ சாப்டுட்டு, கப்பை கரைக்டா குப்பதொட்டியிலதான் போடுவேன்னு அடம் பிடிப்பாங்க! (வீட்டுல சாப்பிட்ட தட்டை எடுங்கப்பா முதல்ல..)

எதை வாங்கினாலும்  டாலர்,திர்கம்ஸ்ல யோசிச்சி "ஹேய்.. சாப்பாடு ஒரு  டாலர் தான் வாவ்.. ன்னு ராமானுஜம் ரேஞ்சிக்கு கணக்கு பண்ணுவாங்க..

தும்மலோ.. கொட்டாவியோ.. வந்தா முடிச்சிட்டு "எக்ஸ்சூஸ்மீ" ன்னு சொல்றது... (அப்படி சொல்லும்போது நாம அவங்கள வடிவேலு ரேஞ்சிலதான் பார்போம்ங்கறது வேற விசயம்!!)


"செளக்கியமா"ன்னு கேக்காம.. "ஹாய்"ன்னு சொல்றது, "லட்ச"த்துக்கு பதிலா.. "மில்லியன்ல" சொல்றது, தயிருக்கு பதிலா.. "யோகர்டு"ன்னு சொல்றது, "ஹய்வே"க்கு பதிலா "ஃப்ரீவே"ன்னு சொல்றதுன்னு பீட்டருக்கே பீஸா குடுக்குற ரேஞ்சிக்கு பிரிப்பாய்ங்க! (இந்த பாயின்ட் பெங்களூர் பீட்டர்களுக்கும் பொருந்தும்!)

சாப்பாட்டுல காரம், மசாலா அயிட்டங்களை தவிர்ப்பது. சாப்பிடறப்பவோ.. இல்லனா, சாப்ட்டு முடிச்ச அப்புறமோ.. கண்டிப்பா "கோக்கோ () பெப்சியோ" இருக்கனுமுன்னு அடம்புடிக்கிறது! (சுகாதாரம்..சுகாதாரம்ன்னு சொல்லிட்டு, டாய்லெட் ஆசிட்டை குடிங்கடே!)

சாதா ஹோட்டலுக்கு சாப்பிட போயிட்டு.. " ஃபப்பே சிஸ்டம் இல்லியா, குபாக்/குணாஃபா உண்டா" ன்னு சப்ளையருக்கு கொலவெறியை கெளப்புறது! (வீட்ல இதெல்லாம் கேட்டா, சுடுதண்ணியை சுட வைப்பாங்கன்னு தெரிஞ்சிதான்.. ஹோட்டல்ல இந்த அலப்பரை!)

வந்த ஏர்லைன்ஸ்ச பத்தி... அந்த ஃபிளைட்ல சீட்டு சரியில்ல, ஜன்னல் பக்கதுல உக்காரமுடியல, பணிபெண்னுக்கு முக்கு சப்பை, கஞ்சப்பசங்க.. சாப்பிட ஒண்ணும் குடுக்கல, ன்னு வந்து சேர்ந்துட்டு 2 மாசமா கொறை சொல்லிகிட்டு சுத்துறது.. (யப்பா.. பணம் டிராவல் பண்றதுக்கு மட்டும்தான், ஃபிளைட்டையே உங்க பேருக்கு எழுதி வைக்கல!)

கடைசியா ஆனா நங்குன்னு ஒன்னு...
எதை சொல்ல வந்தாலும்.. "இப்படிதான் யு.எஸ்ஸில...", "இப்படிதான் நான் துபாய்ல இருந்தப்ப... " ன்னு ஆரம்பிப்பாங்க!!....

நெட்டில் சுட்டது!

12 comments:

  1. வருகைக்கு நன்றி,ராஜ்

    ReplyDelete
  2. நல்ல சுவரிசமான தகவல். உண்மையும் தான்.
    லட்சத்துக்கு பதிலா மில்லியன்ல சொல்றதில் மட்டும் மில்லியன்ல சொல்றதில் இலகுவாகவும் லட்சம் சொல்வதில் குழப்பங்கள் இருக்கிறது என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
  3. நல்ல ஆரம்பம்.தொடர்ந்து எழுதுங்கள்

    ReplyDelete
  4. நன்றி சென்னை பித்தன்

    ReplyDelete
  5. MURUGANANDAM said...

    // Nice comments about NRI//
    thank u sir!

    ReplyDelete
  6. நல்லாவே அனுபவிச்சி சொல்லியிருக்கீங்க! ரொம்பத்தான் அலும்பல் பண்றாங்க!

    ReplyDelete
  7. நாங்களும் வெளி நாட்டில்தான் இருக்கிறோம் விடுமுறையில் ஊருக்கு வந்தால் யாரும் மதிக்கவே மாட்றாங்க, நீங்க எந்த ஊருன்னு சொன்ன நாங்களும் அங்க வந்து பீட்டர் உட வசதியா இருக்கும்.
    அப்புறம் நாங்கள் இங்கு கோகோ பெப்சியோ குடிப்பதில்லை, ஊர்ல இருந்து மசாலா பொடிகள் அரைத்து எடுத்து வந்து செட்டி நாடு சமையல் செஞ்சி சாப்பிடிகிறோம்

    ReplyDelete
    Replies
    1. குவைத்திலிருந்து என்ன கொண்டு வருவீர்கள்?! :)))
      நன்றி முபாரக்,

      Delete
  8. நாங்களும் வெளி நாட்டில்தான் இருக்கிறோம் விடுமுறையில் ஊருக்கு வந்தால் யாரும் மதிக்கவே மாட்றாங்க, நீங்க எந்த ஊருன்னு சொன்ன நாங்களும் அங்க வந்து பீட்டர் உட வசதியா இருக்கும்.
    அப்புறம் நாங்கள் இங்கு கோகோ பெப்சியோ குடிப்பதில்லை, ஊர்ல இருந்து மசாலா பொடிகள் அரைத்து எடுத்து வந்து செட்டி நாடு சமையல் செஞ்சி சாப்பிடிகிறோம்

    ReplyDelete