Saturday, February 2, 2013

கலப்புத் திருமணங்களால் சாதி ஒழியுமா?



சமீபத்தில் ஒரு  திருமண நிச்சயதார்த்தத்துக்குப் போயிருந்தேன்.

பெண்ணின் தந்தை என் நண்பர்;அசைவ முதலியார்.

பையன் பிராமண வகுப்பைச் சேர்ந்தவர்.ஏற்பாடு செய்யப்பட்ட திருமணம்!

இன்னுமோர் நிச்சயதார்த்தம்.பெண் ஐயர்,பையன் நாயுடு.ஐந்து நட்சத்திர ஓட்டலில் நடை பெற்றது!

 சில நாட்களுக்கு முன் எனக்குத் தெரிந்த ஒருவர்,அவரும் பிராமணர்தான்,என்னிடம் சொல்லி வருத்தப்பட்டார்-அவரது ஒரே பையன் ஒரு சீனப்பெண்ணைக் காதலிப்பதாகவும் அவளையே திருமணம் செய்து கொள்ளப் போகிறான் என்றும்.நேற்று எனக்குத் தெரிய வந்தது,அவரே சென்னையில் மண்டபம் பார்த்து விட்டதாகவும்,திருமணத்தை நடத்தி வைக்கப் போவதாகவும்.

ஒரு மணமகன் தேவை விளம்பரம் பார்த்தேன்(தங்கமணி சண்டைக்கு வருகிறாள் நீங்கள் ஏன் அந்த விளம்பரம் எல்லாம் பார்க்கிறீர்கள்,இன்னொரு கல்யாண ஆசையா என்று!)

பிராமண வகுப்பைச் சேர்ந்த பையன் தேவையாம்.பெண்ணின் பெற்றோர் காதலித்து மணம் புரிந்தவர்கள்.அம்மா,பிராமணர்;அப்பா பிள்ளை வகுப்பு என நினைவு.ஆனால் அவர்கள் பெண்ணுக்கு பிராமணப் பையன்தான் வேண்டுமாம்!

தற்போது நடந்து வரும் பல கலப்புத் திருமணங்களைப் பார்க்கும்போது, எனக்குத் தோன்றுவது—மற்ற சமூகத்தவரை விடப் பிராமணர்கள் இதில் அதிகம் வளைந்து கொடுக்கிறார்கள் என்று!

காதல் வயப்பட்ட இருவரும் அது வெறும் இனக்கவர்ச்சியாக இல்லாமல்,ஒருவரையொருவர் புரிந்து கொண்டு,,அவர்கள் திருமணத்தின் முக்கியமாகக் கலப்புத்துமணத்தின், சாதக பாதகங்களை அலசி ஆராய்ந்து  முடிவெடுப்பது மிக அவசியம்.

என் நண்பர் ஒருவர் சொன்னார் ,அதர்மம் மிகும்போது வர்ணக்கலப்பு நடைபெறும் என்று கிருஷ்ணரே  கீதையில் சொல்லி விட்டார் என்று. உண்மையா பொய்யா எனக்குத் தெரியாது.

ஆனால் கலப்புத் திருமணங்களின் எண்ணிக்கை பெருகி வருகிறது என்பது கண்கூடு.

ஆனால் கலப்பு மணம் செய்து கொண்டவர்களே தங்கள் பெண்/பையனுக்குக் குறிப்பிட்ட சாதியில் துணை தேடினால் சாதி எப்படி ஒழியும்?!





31 comments:

  1. //ஆனால் கலப்பு மணம் செய்து கொண்டவர்களே தங்கள் பெண்/பையனுக்குக் குறிப்பிட்ட சாதியில் துணை தேடினால் சாதி எப்படி ஒழியும்?!//

    தெரியலயே?

    ReplyDelete
  2. நல்ல பதிவு, ஜாதி மிகவும் நுட்பமானது, ஜாதியை எதிர்ப்போரோ அதில் மீண்டும் திரும்புவது முரண்

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

      Delete
  3. நல்ல பதிவு, ஜாதி மிகவும் நுட்பமானது, ஜாதியை எதிர்ப்போரோ அதில் மீண்டும் திரும்புவது முரண்

    ReplyDelete
  4. முன்பெல்லாம் பிராமணப் பையன்கள் பிற இனத்தவரை காதல் திருமணம் செய்வது மிக அரிதாக இருக்கும். தற்போது இது அதிகரித்து வருகிறது. இது பற்றி
    சமீபத்திய எனது பதிவில் கூட கூறி இருந்தேன்.

    ReplyDelete
    Replies
    1. ஆம் முரளிதரன்.என் நெருங்கிய வட்டத்திலேயே சமீபத்தில் இது போன்ற நான்கு திருமணங்கள்!
      நன்றி

      Delete
  5. T.N.முரளிதரன் சொல்வதை நானும் ஆமோதிக்கிறேன். இப்போது மாற்று சாதி மனம் நடப்பதை தவறாக எண்ணுவதில்லை இரு வீட்டாரும் உடன்பட்டே மனம் செய்துகொள்ளும் வழக்கம் பெருகி வருகிறது

    ReplyDelete
    Replies
    1. ஆனாலும் மணச்சடங்குகளில் அவரவர் சாதிச் சடங்குகள் பின் பற்ற விரும்புகின்றனர்!
      நன்றி கவிஞரே

      Delete
  6. //ஆனால் கலப்பு மணம் செய்து கொண்டவர்களே தங்கள் பெண்/பையனுக்குக் குறிப்பிட்ட சாதியில் துணை தேடினால் சாதி எப்படி ஒழியும்?!//
    கலப்புத்திருமணம் செய்துகொண்டவர்கள் அப்படி திருமணம் செய்துகொண்டவர்களோடு சம்பந்தம் வைத்துக்கொண்டாலொழிய சாதி ஒழியாது.
    சிந்திக்க வைத்த பதிவு. வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. சரியாகச் சொன்னீர்கள் சார்.
      நன்றி

      Delete
  7. சாதியை ஒழிப்பது என்பதை விட அனைத்து சாதியினரையும் சமமாக மதிக்கும் மனப்பக்குவம் வந்தாலே போதும்!

    ReplyDelete
  8. \\மற்ற சமூகத்தவரை விடப் பிராமணர்கள் இதில் அதிகம் வளைந்து கொடுக்கிறார்கள் என்று!\\ ஏதோ நாலு விளம்பரத்தை பார்த்திட்டு முடிவு செய்வது சரியல்ல.

    ReplyDelete
    Replies
    1. விளம்பரம் அல்ல ஜெயதேவ்!என் நண்பர்கள் பலர் குடும்பத்திலும் இது நடந்திருக்கிறது

      Delete
  9. மூங்கிற்காற்று டி.என்.முரளிதரன் அவர்களின் பதிவில் ( நீயா? நானா?காதல் திருமணங்கள் ஏற்றுக் கொள்ளக் கூடியதா? ) நான் கொடுத்த எனது கருத்துரையையே மீண்டும் இங்கும பதிவிடுகிறேன்.

    // எல்லா (பெற்றோர் பார்த்து வைத்த திருமணம், காதல் திருமணம், கலப்பு திருமணம், மறுமணம் என்று ) திருமணங்களிலும், வாழ்க்கையில் வெற்றியும் இருக்கிறது. தோல்வியும் இருக்கிறது. தோல்வியை மட்டுமே படம் பிடித்துக் கொண்டு இருக்கிறார்கள். நீதிமன்றங்களில் இருக்கும் பல குடும்ப வழக்குகள் எல்லா ஜாதியிலும் இருக்கின்றன. தன் ஜாதிக்காரன் என்று யாரும் விட்டுக் கொடுப்பதில்லை.//







    ReplyDelete
    Replies
    1. கருத்துக்கு நன்றி ஐயா

      Delete
  10. உண்மைதான் பிராமணர்கள் இப்போது ஜாதி அதிகம் பார்ப்பது இல்லை என்றே நினைக்கிறேன்! ஆனால் கலப்புத்திருமணங்களால் ஜாதி ஒழியாது! புதியதாய் வேறு ஒரு ஜாதிதான் உருவாகிறது! நன்றி!

    ReplyDelete
  11. உலகில் எந்த மூலையிலாவது கலப்புத் திருமணத்தால் மதம் ஒழிந்ததா? ஒன்று இன்னொன்றாக மாறலாம். அவ்வளவுதான். அதுபோலத்தான் இதுவும்.

    கலப்புத் திருமணங்களால் சாதி ஒழியும் என்பது கட்டுக்கதை.

    ReplyDelete
    Replies
    1. கலப்புத் திருமணத்தையே எதிர்ப்பது சரியா ?
      நன்றி

      Delete
  12. நீங்களே பதிவுனுள் கிருஷ்ணர் வர்ணக்கலப்பு நேரிடும்போது கலியுண்டாகும் என்று சொன்னதாக எழுதியிருக்கிறீர்கள். இல்லையா? ஆக, ஜாதி வேறு, வருணங்கள் வேறு.

    வருணக்கொள்கையை விமர்சித்து பார்ப்பனர்களைத் தாக்கினார்கள். அவர்கள் அக்கொள்கையால், பன்னெடுங்காலமாக இந்திய சமூகத்தில் பிறரைவிட தம்மை உயர்வாகக் காட்டி மற்றவர்களையும் நம்பவைத்தார்கள் என்பதுதான் விமர்சனம்.

    எனவே கலப்புத் திருமணங்கள் வருணக்கலப்பை உண்டாக்கி, பிராமணன், வைசியன், சத்திரியன், சூத்திரன் என்ற பிரிவுகளைக் காலாவதியாக்கும்.

    நம் சமூகத்தில் சிலர் தாழ்வு, சிலர் உயர்வு என்பது இந்து மதத்தை வைத்து மட்டும் வருவதில்லை. அதற்கு பிறகாரணிகள் உண்டு. அவற்றைப்போக்க வெறும் கலப்புமணம் போதாது.

    அருள் சொல்வதையே எடுப்போம். ஜாதியை அழிக்க கலப்பு மணத்தால் முடியாது. ஆனால் மற்றவையால் முடியும். வன்னியருக்கெல்லாம் இடஒதுக்கீட்டை எடுத்துவிட்டால், அவர்கள் மேலும் மேலும் பொருளாதாரத்தில் கீழே செல்வார்கள். அவர்களிடையே கல்வி இல்லாமல் போக வாய்ப்புக்களைப் பெருக்குங்கள். வடமாநில கிராமங்களில் விவசாயம் பொய்க்கட்டும். வன்னியர்கள் சென்னை நோக்கி படையெடுத்து கூவக்கரையோரங்களில் குடிசை போடுவார்கள். (தற்போது இருப்பவர்களும் அவர்களும் தலித்துகளும்தான்)

    தலித்துகளுக்கு கல்வியாலும் பொருளாதாரத்தாலும் மேலே செல்ல வையுங்கள்.

    அப்போது நிலைமை எப்படியிருக்குமென்றால் வன்னியர்கள் தம்பெண்ணைப் பணம்படைத்த தலித்தொருவன் மணம் செய்யமாட்டானா என்று இருப்பர். இப்போது ஏன் தலித்தை மட்டும் எதிர்க்கிறார்கள். பணத்திற்காக. வெறும் காழ்ப்புணர்ச்சி. நமக்கில்லையே இவர்களுக்கு மட்டுமேன் என்று.

    தலித்துகள் மேலே செல்லின் வன்னிய சாதியென்றவொன்றே காணாமல் போகும்.

    ஆக, குட்டன், பொருளாதாரம், அதனால் பெருகும் பல சமூக வலிமைகள் ஒரு சமூகத்தில் யார் உயர்வு என்பதை நிரூபிக்கும்.

    கலப்பு மணத்தைப்பொறுத்தவரை, அது இந்துமத்ததின் ஆணிவேரான வருணக்கொளகையை அழித்துவிட்டது.

    இது போதாதா அதன் வெற்றிக்கு ? (வெற்றி என்று சனாதாவாதிகள் ஏற்க மாட்டார்கள்)?

    எனவே தமிழ்ப்பார்ப்பனர்கள் கலப்பு மணம் வேண்டாம், நம் ஜாதியழிந்துவிடும் என அவர்களுக்குள்ளே பிரச்சாரம் செய்கிறார்கள். கேட்பாரில்லை. காரணம். அவர்களுக்கிடையே வறுமையும், வரனகள் தட்டுப்பாடும் காரணம். எந்த பார்ப்பனரும் தம் பெண்ணை ஒரு ரோட்டோரத்து பூஜாரிக்கு கொடுக்கமாட்டான். இல்லையா? மேலும், பார்ப்ப்னப்பையனகளுக்கும் அவர்கள் ஜாதிக்குள்ளே பெண்களுமில்லை.

    ReplyDelete
    Replies
    1. விளக்கமான கருத்துக்கு நன்றி!
      புத்தக சந்தையில் பார்க்க முடியவில்லையே?!

      Delete
  13. Therefore, there s no qn of whether caste will go with mixed marriages r not. Both caste and varnam r not eternally fixed things. Varnam is a religious fiction and caster a political fiction. The latter becomes a reality when ppl live together in a caste group and perpetuate their line with endogamous marriages. Such marriages r possible only under favourable circumstances. If a caste member leaves his caste group to go to live in a far away Mumbai r Chennai r abroad among different ppl, he can't get a caste alliance there. Can he keep his daughter r son for ever unmarried? Any bride or groom s ok and only eligibility s economic stability and health. To live w/in a caste group and marry w/in the group s also bad in a scientific and social sense: scientific coz, the progeny is the same carrying the same features, social coz. the group won’t allow you to grow as an individual and you can’t achieve anything to your satisfaction and contribute to the welfare of society.

    Marriages w/in caste (endogamous marriages) needs nurturing; otherwise they will wilt. And ppl will go for any marriage. In Brahmin community, the nurture is getting depleted. It is not untrue to say that they r avaricious ppl also i.e. for them, a wealthy bride groom from any caste s preferable to poor one from w/in caste – This s avarice.

    Let the same happen to other communities. The same will happen.

    Take it from me; Social actions are not god-made. They are always in a flux. The proverb Marriages are made in heaven - is true only in a fatalist way. Not true in common sense way. Therefore caste marriages can be destroyed, not by you and me but with natural social causes. Mixed marriages r rooted in a few social causes: like young people coming together in large number as in a BPO co. or a big organisation, like in AG office chennai, there will be bound to be attraction that will create marriages; poverty; lack of alliances w/in community.

    U can destroy caste marriages; but can’t with mixed marriages. Coz as I said, favourable circumstances r necessary to both. Right now, the circumstances r favourable only to the latter. If u want to make unfavourable circumstances, then, u should not send your girls outside as Taliban does.

    ReplyDelete
  14. இங்குள்ள பலருக்கும்...
    நீங்கள் இந்தியாவை வைத்து அப்படித்தான் எல்லா நாட்டினரும் இருப்பார்கள் என்று எடை போடுகிறீர்கள்...தவறு. மேலை நாடுகளில் ஜாதி கிடையாது; இந்தியவிலிருந்து வந்த அமெரிக்கா வந்துள்ள ஒரு சிறு பான்மையினர் ஜாதி பார்க்கலாம. இந்திய பார்மபரிய மக்கள் அமெரிக்காவின் ஜனத்தொகையில் அரை அல்லது முக்கால் விழுக்காடு இருப்பார்கள். இது கடலில் கரைத்த பெருங்காயம்; அவ்வளவே.

    எங்களை மாதிரி ஆட்கள் மதமெல்லாம் பார்ப்பது கிடையாது. நாளைக்கே என் மகன் வேறு மதத்தை சேர்ந்த பெண்ணைத் திருமனம் செய்தாலும் எனக்கு ஓகே. ஒரு தகப்பனா, அவனுக்கு பிடித்த பெண்ணைத்-தான் கட்டிக்கணும். அது தன என் ஆசை. அமெரிக்கர்களும் மதத்தைப் பற்றி பெசமாட்டறாக்கள்; வாழ்க்கைக்கு அது சுத்தமாக தேவையில்லை என்று நினைக்கிறார்கள்.

    நம் இந்திய இளைய தலைமுறை, இங்கு ஜாதியோட ராவு காலம் எமகண்டதையும் ஏற்றுமதி செய்திருக்கிர்ர்றாக்கள. இங்கு மதம் ஒன்ற ஒன்றை ஒரு பயலும் (majority) நினைபப்துமைல்லை; திருமனத்திற்க்கு மதம் ஒரு தடையும் இல்லை.

    எப்பவும் ஒரு பலமைவாதிக் கூட்டம் எங்கேயும் மதப் பித்து பிடித்து அலைவார்கள்; அவர்கள் இங்கு சொற்பமே.

    இந்திய ஜனத்தொகை உலக ஜனத்தொகையில் ஒரு 20 விழுக்காடு இருக்குமா? அதை வைத்து உலகை எடை போடமுடியாது..போடக்கூடாது.

    இந்தியாவில் ஜாதி மதம் ஒழியாது என்று சொல்லுங்கள்----ஒத்துக்கொள்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. நான் எழுதுவது நான் பிறந்த வளர்ந்த வாழும் என் தாய் நாட்டைப் பற்றி.சாதி என்பது இங்குதானே அதிகம் பார்க்கப்படுகிறது உங்கள் சொற்படி!
      நன்றி

      Delete
  15. @அருள்,

    கலப்புத் திருமணம் செய்தவர்களையெல்லாம் வன்னியர்கள் என்று அறிவித்துவிடலாம். ராமதாசுக்கு நிறைய ஓட்டுகள் கிடைக்கும். எப்படி.. ?

    ReplyDelete