Monday, February 18, 2013

பறவைக் கழிவை முகத்தில் பூசும் நடிகைகள்!!வாங்க மேடம்!என்ன முக அழகு படுத்தல்தானே?

“ஆமாம்!ஆஸ்கார் விழாவுக்குப் போறேன் .முகம் பள பளன்னு மின்னணும்.புதுசா ஏதாவது முறைகள் இருக்கா?”

“இருக்கு மேடம்!இப்பத்தான் ரொம்பப் புதுசா ஒரு தயாரிப்பு வந்திருக்கு.அதை வைச்சு முக அழகு படுத்தினா முகம் பளிச்சுன்னு இருக்கும்:சுருக்கம் எல்லாம் போய் பத்து வயது குறைஞ்சுடும்!”


“வாவ்! அதையே செய்திடுங்க!இதிலே இருக்கும் பொருள் என்ன?”

மேடம்!இது பறவைகளின் எச்சத்தில் செய்தது!ரொம்ப விலை உயர்ந்தது.உங்களை மாதிரிப் பிரபலமானவங்கதான் செய்துக்க முடியும்”

(எந்தக் கழிவுல செய்தா என்ன?முகம் அழகானாச் சரிதான்!)

”அதோட  என்னோட முடியையும் அழகு படுத்தணும் ”

“சரி மேடம்!அதுக்கும் புதுசா ஒரு தைலம் வந்திருக்கு.காளை மாடு இருக்கில்ல(எங்க இருக்கு, அதுதான் பூட்ச்சே!) அதோட விரைக் கொட்டையை நசுக்கிச் செய்தது.முடி அப்படியே அலை அலையா இருக்கும்!”

மேலே சொன்னதெல்லாம் கற்பனையல்ல,நிஜம்!

இந்த ஆண்டு ஆஸ்கார் பரிசளிப்பு விழாவில் கலந்து கொள்ளும் நட்சத்திரங்கள் தங்களை அதற்கு அழகு படுத்திக் கொள்ளச் செய்யும் முயற்சிகளின் ஒரு சிறு பார்வை இது!

இன்னும் எத்தனையோ!

250000 டாலர் செலவில் கருப்பு வைர நகப்பூச்சு!

முன்பு ஒரு நடிகை தன் உடலில் அட்டைகளை விட்டு ரத்தத்தை உறிஞ்சச் செய்தாராம்(டெமி மூர்)-ரத்தத்தில் உள்ள நச்சுத்தன்மையை நீக்க!!

இந்த ஆண்டு முகச் சுருக்கங்களை நீக்கிப் பொலிவு தர,கொஞ்சம் ரத்தம் எடுத்து அதிலிருந்து சில மூலகங்களை நீக்கி அதனுடன்,சரும நிரப்பிகளைச் சேர்த்துத் தோலில் உட்செலுத்தும் புதிய முறை வந்திருக்கிறதாம்!

பறவை எச்சம்,காளை மாட்டின் கொட்டை,அட்டைக்கடி இன்னும் என்ன?

பூனை மூத்திரம்,(புனுகு என்பதே ஒரு வகைப் பூனையின் கழிவுதான்),சிங்கப்பல் பஸ்பம்(நிஜ சிங்கப்பல்,சில மனிதர்களுக்கு இருக்குமே அந்த சிங்கப்பல்லல்ல) இப்படி ஏதாவது வருமோ!

அடக்கடவுளே!


29 comments:

 1. நதி மூலத்தையும் ரிஷி மூலத்தையும் பார்க்கக்கூடாது என்பார்கள். அது இதற்குத்தானோ? படித்தவுடன் வாந்தி வராத குறைதான்

  ReplyDelete
 2. நடிகைகளை நினைத்தால் ...அய்யோ......பாவம்.

  ReplyDelete
 3. இப்படியெல்லாம் அழகு படுத்திக் கொள்ள வேண்டுமா? இயற்கை அழகே நிரந்தரம் என்பதை உணராதவர்கள் இவர்கள்! பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete
  Replies
  1. விழாவில் பளபளக்க வேண்டாமா?
   நன்றி

   Delete
 4. உவ்வே... இப்படி ஒரு அழகு தேவையா...

  ReplyDelete
 5. அய்யய்யோ இப்படி அழகு தேவையா ?

  ReplyDelete
  Replies
  1. நல்லாக்கேட்டீங்க!
   நன்றி

   Delete
 6. இவ்வளவு தான... இன்னும் நிறைய இருக்கு அசிங்கம்...

  ReplyDelete
 7. இவ்வளவு தானா...? இன்னும் நிறைய இருக்கு அசிங்கம்...!

  ReplyDelete
  Replies
  1. இருக்கும் இருக்கும்!
   நன்றி திண்டுக்கல்லாரே!

   Delete
 8. ஆஅவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்! கொஞ்சம் அருவருப்பான அழகுதான்! என்றாலும் அழகுதானே முக்கியம்! ஹா ஹா

  ReplyDelete
 9. What about the heroes kissing actresses?? :)

  ReplyDelete
  Replies
  1. என்ன கஷ்டம்டா சாமி?
   நன்றி

   Delete
 10. அது சரி, நதிமூலம் நதிமூலம் ரிஷிமூலம் பார்த்தா எதையும் செய்ய முடியாது போல இருக்கே.....இனிமே பியுட்டி பார்லரில் இருந்து வெளியில வந்தா இதைதான் நினைக்க தோணும்....

  ReplyDelete
 11. அட்டைகளை விட்டு கெட்ட இரத்தத்தை உறிஞ்சும் மருத்துவத்தை டி.வி.ல பார்த்திருக்கேன்.

  மத்ததெல்லாம் நெனச்சாலே அருவெறுப்பா இருக்கே. எப்படித்தான் பண்றாங்களோ!!!

  ReplyDelete
  Replies
  1. அருவறுத்தா அழகு வேண்டாமா?!
   நன்றி

   Delete
 12. namma makkal komiyam kudikkirathu illiyaa??

  ReplyDelete
  Replies
  1. நான் பாக்கீயராஜ் மாதிரி;கோமியம்னா என்ன?

   Delete
 13. அட நல்,,,,,,,ல்ல்ல அழகுக்குறிப்பா இருக்கே/

  ReplyDelete
 14. எவ்வளவு கேவலமாகிப் போச்சு பெண்கள் அழுகுபடுத்தும் நிலை...
  காலம் கலி காலமடா!...
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete