Tuesday, April 2, 2013

நாங்களும் போவோமில்லே பயணம்?!-பயணக்கட்டுரை



இப்போதெல்லாம் பயணம் பற்றிய பதிவுகள் அதிகமாகி விட்டன.

பல பதிவர்கள்,தாங்கள் சென்ற பயணங்கள் பற்றி அழகிய படங்களுடன் எழுதி என்னைப் போல் எங்கும் போக முடியாத  அபாக்கியவான்களின் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொள்கிறார்கள்.

அந்தக் கட்டுரைகளைப் படித்தபின் கட்டாயம்  இரண்டு ஜெலுசில் மாத்திரைகள் சாப்பிட வேண்டியிருக்கிறது (வயிற்றெரிச்சல் குணமாக!)

வெங்கட் நாகராஜ்,மோகன் குமார்,பிலாசபி பிரபாகரன் என்று பலர்.

இந்த லிஸ்ட்டில் இப்போது புதிதாக அண்ணன்"மின்னல் வரிகள்” பாலகணேஷ் வேறு சேர்ந்து விட்டார்-குளு குளு கொடைக்கானல் போய் வந்த அனுபவத்துடன்!

அவருக்குக் குளு குளு!  ஹூம்!

எனவே இன்று என் பழைய பயண அனுபவம் ஒன்றை மீள் பதிவாகத் தந்து என்னை சமாதானப் படுத்திக் கொள்கிறேன்!

இதோ……………………….


இது ஒரு மறக்க முடியாத பயண அனுபவம்.

நான் சிறுவனாக இருந்த போது சென்ற ஒரு பயணம்.

எங்கள் பாட்டி ஒரு கிராமத்தில் வாழ்ந்து வந்தார்.

ஒரு முறை விடுமுறைக்கு நாங்கள்-நானும் என் சகோதரிகளும்-அம்மாவுடன் கிராமத்துக்குப் போனோம்.

முதன் முறை கிராமத்தைப் பார்க்கும் போது மகிழ்ச்சியாகவே இருந்தது.

வைக்கோல் போரில் குதிப்பது,குளத்தில் குளிப்பது என்று புதிய பல செயல்கள் மகிழ்ச்சி யளித்தன.


                                                  நாங்கள் குளித்த  கிராமத்துக் குளம்

ஆனால் நான்கு நாட்களில் எல்லாம் போரடித்து விட்டது.

எங்கள் பாட்டியை எங்காவது அழைத்துச் செல்லச் சொல்லித் தொந்தரவு செய்ய ஆரம்பித்து விட்டோம்.

எனவே ஒரு நாள் கிராமத்துக்கு அருகில் இருந்த கொக்கரக்கோபட்டிக்குப் போகலாம் என முடிவு செய்யப்பட்டது.

அங்கு போய் ஆற்றில் குளித்து விட்டுக் கோவிலுக்குப் போய் விட்டுத் திரும்பி வரலாம் எனத் திட்டம்.

அந்த நாளும் வந்தது.

காலை எழுந்து பாட்டி புளிசாதம்,தயிர்சாதம்,இட்லி,சட்னி எல்லாம் தயார் செய்தார்கள்.

எல்லோரும் 7 மணி அளவில் புறப்பட்டோம்.

கொ.பட்டிக்கு நடந்தே சென்று திரும்புவதாகத்தான் முடிவு.

நடந்தால் ஒரு மணி நேரத்தில் போய்ச் சேர்ந்து விடலாம் என்று பாட்டி சொன்னார்கள்.

உற்சாகமாகப் புறப்பட்டோம்;பாடியபடியே சாலையில் நடந்தோம்
                                                    நாங்கள் நடந்து சென்ற சாலை
                                        

ஒரு மணி நேரத்தில் கொ.பட்டி ஆற்றை அடைந்தோம்.

அதற்குள் பசி வந்து விட கொண்டு போன இட்லிகளைக் காலி செய்தோம்.


                                         இதுதான் இட்லி-நாங்கள் சாப்பிடுவதற்கு முன்!

பின் ஆற்றில் நீண்ட  நேரம் அட்டகாசம் செய்தோம்.


                                                   இதுதான் நாங்கள் குளித்த ஆறு

பின் கரை ஏறி,உடை அணிந்து கோவிலுக்குப் போனோம் ;

கோவில் என்று எதுவும் இல்லை.

சாலை ஓரத்தில் ஒரு கல்லுக்கு துணி சுற்றிப் பொட்டிட்டு  மாலைகள் போட்டிருந்தார்கள்.
பெயர் மைல்சாமியாம்.

                                                      படம் எடுக்க அனுமதிக்கவில்லை!


என் அக்காதான் கண்டுபிடித்துச் சொன்னாள்.அது ஒரு மைல் கல்;அதை சாமியாக்கி விட்டார்கள்;அதனால்தான் பெயர் மைல்சாமியாக இருக்கும் என்று.

சிரித்துக் கொண்டே அங்கிருந்து புறப்பட்டோம்.

இனி ஊர் திரும்ப வேண்டியதுதான்.

நாளை 2 ஆம் பாகம்.

ஊர் திரும்பும்போது நடந்த  எதிர்பாராத சம்பவங்கள்-படங்களுடன்!


(தொடரும்)

26 comments:

  1. என்னாது ... கொக்கரக்கோபட்டியா ? பெற பாத்தா டுபாக்கூர் பயணம் மாதிரில இருக்கு .

    ReplyDelete
    Replies
    1. தொடர்ந்து படிங்க சாரே!
      நன்றி

      Delete
  2. பரவாயில்லையே! சிறுவனாக இருந்தபோதே பயணம் சென்றபோது புகைப்படங்கள் எடுத்திருக்கிறீர்களே! அது சரி. கொக்கரக்கோபட்டி எங்குள்ளது என்று சொல்லுங்களேன். நாங்களும் நேரம் கிடைக்கும்போது போய் வருகிறோம்!

    ReplyDelete
    Replies
    1. ரகசியம்,பரம ரகசியம்!

      Delete
    2. கொக்கரக்கோ பட்டி ,அத்திப்பட்டி மாதிரி காணாமப் போயிடுச்சு!

      Delete
  3. சின்ன வயசுல போனதுன்னு சொல்லி படமெல்லாம் போட்டிருக்கீங்க? பயணம் உண்மையா?

    ReplyDelete
    Replies
    1. படமெல்லாம் உன்மைதானே!
      நன்றி

      Delete
  4. Replies
    1. பொறுத்தார் பூமியாள்வார்
      நன்றி

      Delete
  5. ரைட்டு... செய்யுங்கப்பா....

    ரசித்தேன்

    ReplyDelete
  6. ஏற்கனவே படிச்ச மாதிரி இருக்கே குட்டன்.

    ReplyDelete
    Replies
    1. //எனவே இன்று என் பழைய பயண அனுபவம் ஒன்றை மீள் பதிவாகத் தந்து என்னை சமாதானப் படுத்திக் கொள்கிறேன்!// என்று பதிவிலேயே சொல்லியிருக்கிறேனே முரளிதரன் சார்!
      நன்றி

      Delete
  7. ஏம்ப்பா... ஏம்ப்பா... நான் பார்வைக்கு சுமார்தான். அதுக்காக என்கிட்டயே மோதுறதா? லைஃப்ல மொதல் தடவையா பயண அனுபவம் எழுத வந்திருக்கேன்...அதோட ஆரம்பத்துலயே இப்படிப் பெருமூச்சு விட்டீங்கன்னா... போகப்போக வரப்போற கும்மாளங்களைப் பாத்துட்டு என்ன சொல்வீ்ஙகளோ?

    அதுசரி... அந்தப் பதிவைப் பாத்துட்டு கமெண்ட் போடாம வந்த குட்டனுக்கு தலையில் பலமாகக் குட்டு வைக்கிறேன்! உங்களின் இயல்பான கிண்டல் கேலியுடன் இதுவும் ரசிக்க வைத்தது என்னை!

    ReplyDelete
    Replies
    1. மோதுறதா? மலைகிட்டயா? முடியுமா ?ஏதோ என்னால் இந்தமாதிரிப் பயனம்தான் முடியும்!
      தொடர்ந்து படிக்கக் காத்துக்கிட்டிருக்கேன்.
      கருத்துச் சொல்ல மறந்த காரணம்,பதிவில் அவ்வளவு லயித்து விட்டேன்!
      நன்றி தலைவரே!

      Delete

  8. பயணம் இனிதே தொடரட்டும்!

    ReplyDelete
  9. ஓஓஓஓஓஓ.... இது தான் இட்டிலியா...?

    (இதே பதிலை அப்பவும் சொன்னேன் குட்டன் ஐயா.)

    ReplyDelete
  10. ஆஹா.... நம்ம தலையும் இங்கே உருளுது! நடக்கட்டும்..... உங்க நடைப் பயணம் போலவே!

    ReplyDelete
  11. போட்டி பயணம் ம்ம்ம் ....பழைய பதிவு நான் படித்ததில்லை நீங்கள் நடந்து சென்ற பாதை படம் நல்ல இருக்கு ஆனா ஒரு ஈ ,காக்காவையும் கூட காணாம்

    ReplyDelete
  12. அண்ணே இம்புட்டு அறிவோட இருக்குற நம்ம மேல இவிங்களுக்கு பொறாமை அண்ணே!.
    நீங்க எழுதுங்க அணணே!. நா வெயில் படாம குடை புடிக்கிறேன். ஏ அண்ணே அடுத்தது நாம ஆத்தாகிட்ட காசு வாங்கிகிட்டு சந்தைக்கு போவோமுள்ள அதை... அதைய எழுதுங்கண்ணே.

    ReplyDelete
  13. நடைப் பயணம் எல்லாம் காணக் கொடுத்து வைக்க வேண்டும்.:))))

    ReplyDelete