Tuesday, August 27, 2013

பதிவர் திருவிழா-2013--கல்யாணம் பண்ணிப் பார்!

கல்யாணம் பண்ணிப்பார்;வீட்டைக் கட்டிப்பார்என்று சொல்வார்கள்.

இரண்டிலும் உள்ள சிரமத்தை எடுத்துக்காட்டுவதற்காகச் சொல்லப்பட்ட வார்த்தைகள் இவை.

இரண்டுக்குமே அதிகபொருள் செலவு;அதிக நேரம் தேவை-சரியாகத் திட்டமிடுதல், தவறின்றிச் செயலாற்றுதல்-,அதிக உழைப்பு தேவை.


ஆனால் இன்றைய சூழலில்,பொருட்செலவைத் தவிர மற்ற சிரமங்கள் இல்லாமல் போய் விட்டன.

கல்யாணத்துக்கும் காண்ட்ராக்டர் இருக்கிறார்;வீடு கட்டவும் காண்ட்ராக்டர் இருக்கிறார்.

என் உறவினர் ஒருவர் ஒரு ஹோட்டலில் மகளின் திருமணம் நடத்த ஏற்பாடு செய்தார்.
அப்போது அந்த ஓட்டலின் மேலாளர் கூறினாராம்மணமகன்,மணமகள்,காசோலைப் புத்தகம் மூன்றுடன் வாருங்கள் போதும்என்று

ஆம் திருமணம் நடத்துவது என்பது அவ்வளவு எளிதாகி விட்டது.

ஆனால் ஒரு பதிவர் திருவிழா நடத்துவது என்பது திருமணம் ,வீடு இரண்டையும் விட மிகப் பெரும் செயலாக இருக்கிறது என்பது  ஒரு நண்பர் வழியாக எனக்குக் கிடைக்கும் செய்திகள் மூலம் தெரிகிறது.

இரண்டு மாதமாகத் திட்டமிடல்.

ஒவ்வொரு வாரமும் ஆலோசனைக் கூட்டம்.

பணியைப் பிரித்துகொண்டு செயலாற்றும் தனித்தனிக் குழுக்கள்.

குழுக்களின் ஒருங்கிணைப்பு.

இன்னும் நான்கு நாட்களே  பாக்கி இருக்கும் நிலையில் கடைசிக்கட்ட ஆலோசனைகள்.

சிறப்பான உணவு ஏற்பாடு.

காவல் துறையின் அனுமதி பெறல்

விழாவுக்கு முதல்நாள் முதல் வெளியூர்ப் பதிவர்களை வரவேற்றல்.

தங்குமிடம் ஏற்பாடு செய்தல்

விழாவன்று மேடை,ஒளி ஒலி ,புகைப்படம் ,வீடியோ ஏற்பாடுகள்.

தொலைக்காட்சி ஒளிபரப்புக்கான ஏற்பாடுகள்.

நேரலை ஒளிபரப்பு ஏற்பாடு.

கடைசி நாள் வரை நிகழ்ச்சி நிரலை மேம்படுத்தத் திட்டமிடல்

எல்லாவற்றுக்கும் மேலாக விழாவன்று நேர மேலாண்மை.

எவ்வளவு ஈடுபாட்டுடன்,சரியாகத் திட்டமிட்டு,பணிகளைப் பிரித்துக் கொண்டு
முழு   மூச்சுடன் செயல்படுகிறார்கள் இந்த இளைஞர்கள்!

இந்த உழைப்புக்குப் பரிசாக கிடைக்கப்போவது விழாவின் மகத்தான வெற்றி!


அடுத்த வாரம் இந்நேரம் விழா சிறப்பாக நடந்தேறி . விழா அமைப்பாளர்களுக்கு திருஷ்டி கழித்து முடிந்திருக்கும்.

இளைப்பாற நேரம் சிறிதும் இன்றி அலுவலகப் பணி.அழைக்க ஓடிக்கொண்டிருப்பார்கள்!

ஆனால் புதிய நண்பர்களின் அறிமுகம்,விரிவடைந்து விட்ட நண்பர் வட்டம்  அனைத்துக்கும் மேலாக சாதித்து விட்டோம் என்ற மன நிறைவு அவர்கள் களைப்பைப் போக்கி விடும்

வாழ்த்துக்கள் !

டிஸ்கி:”கல்யாண சமையல் சாதம்  காய்கறிகளும் பிரமாதம்” என்று கடோத்கஜன் பாடுவது போல் பாட வைக்கும் விருந்து காத்திருக்கிறதாமே!

என்ன மெனு சொல்லுங்கப்பா,நாரதரும் தேவேந்திரனும் தெரிஞ்சுக்கட்டும்!












25 comments:

  1. கண்டிப்பா...நானும் மெனுவை தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறேன்,,ஹிஹிஹி

    ReplyDelete
    Replies
    1. தெரிஞ்சாத் தயாராகிக்கலாம்!
      நன்றி ஜீவா!

      Delete
  2. எனக்கு மெனு தகவல் வந்துவிட்டது
    அது மிகப் பிரமாதமாக இருப்பதால்
    முதல் நாள் இரவு முதல் உபவாசம்
    இருக்க நினைத்திருக்கிறேன்

    ReplyDelete
    Replies
    1. ரமணி சார்,நீங்க சைவமா,அசைவமா?ரெண்டும் நல்லாத்தான் இருக்கும்னு நினைக்கிறேன்

      Delete
  3. உங்களை இம்முறை காண முடியுமா ?

    ReplyDelete
    Replies
    1. வரணும்னுதான் ஆசை
      நன்றி ரூபக்

      Delete
  4. பதிவர் சந்திப்பு தினம் ஆவலுடன்... உங்களுடன் நானும் குட்டன்...

    ReplyDelete
  5. கேப்பைக்களியும், கருவாட்டு குழம்பும், சைவக்காரர்களுக்கு தயிர்சாதமும் எலுமிச்சை ஊறுகாயும்.

    ReplyDelete
    Replies
    1. கார போண்டா கிடையாதா?
      நன்றி

      Delete
  6. முதல்ல நீங்க சைவமா அசைவமான்னு சொல்லுங்க, லிஸ்ட்டை அனுப்பி வைக்கிறேன்

    ReplyDelete
    Replies
    1. நான் வெஜிடேரியன்;நான்-வெஜிடேரியன் அல்ல! நான் வெஜிடேரியன்!புரிந்ததா?
      நன்றி அண்ணே

      Delete
  7. பதிவர் சந்திப்பை வெற்றிகரமாக சென்ற ஆண்டைப்போலவே நடத்த இருக்கிறார்கள் நமது இளம் பதிவர்கள் என அறிந்து மிக்க மகிழ்ச்சி. அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்! விழாவில் கலந்துகொள்ள முடியவில்லையே என்ற வருத்தம் எனக்கு உண்டு.அதனால் என்ன. பின்பு காணொளியில் கண்டு மகிழவேண்டியது தான்.
    நீங்கள்தான் பதிவர் சந்திப்பில் கலந்துகொள்வது சந்தேகம் என்கிறீர்களே. பின் ஏன் மெனு பற்றி விசாரிக்கிறீர்கள்?

    ReplyDelete
    Replies
    1. உங்களால் வர இயலாமல் போவது வருத்தமே!
      //என்ன மெனு சொல்லுங்கப்பா,நாரதரும் தேவேந்திரனும் தெரிஞ்சுக்கட்டும்!//
      அவர்களுக்காகத்தான் கேட்டேன்
      நன்றி

      Delete
  8. குட்டன் என்ற பேரை கேட்டாலே தெரியுதே? அசைவப்பிரியர் என்று.ஆனால் ஒன்று அன்று தெரியாது எது நன்று என்று

    ReplyDelete
    Replies
    1. ஐயா நான் எக்கேரியன் கூட இல்லை;முழுச்சைவம்!
      நன்றி

      Delete
  9. ஆவ்வ்வ்வ்வ்... இதைவிட, ஒரு திருமணம் முடித்துவிடலாம் போல இருக்கு:))[ஆயத்த வேலைகளைப் படிக்க அப்படித் தோணுது]..

    வரமுடியாதோருக்கு.. பார்ஷலில் பக் பண்ணி.. அனுப்ப மாட்டீங்களோ?:))[மெனுவில் உள்ளதை:)]

    ReplyDelete
  10. பதிவுலக கல்யாண சமையல் சாதம்!! சுவைக்க காத்திருக்கிறோம்!

    ReplyDelete
    Replies
    1. இன்னும் மூன்று நாட்கள்!
      நன்றி (ர)ஜீவன்

      Delete
  11. unmaithaan...

    antha sakothararkalukku vaazhthukkal...

    ReplyDelete
  12. வாங்க வாங்க உங்களுக்கு தலைவாழை இலையில் சுத்த சைவம் காத்திருக்கிறது

    ReplyDelete
  13. மெனு எனக்கு தெரியும் ஆனா சொல்ல மாட்டேனே ! சஸ்பென்ஸ்.. :))

    ReplyDelete
  14. பதிவர்கள் எல்லாம் நிலாச்சோறு சாப்பிட வாங்க... ஆனா நிலா தான் இருக்காது.. ஆனா சோறு இருக்கும்.. நடுவில் இருந்து உருண்டை தருவது யார் என்பது தான் இப்போதைய மீட்டிங்..

    ReplyDelete