Wednesday, August 14, 2013

நீயும் நானும்!



யாரோ அங்கே
யாரோ இங்கே

யாரோ தொலைவில்
யாரோ அருகில்

யாரோ தொலைந்து
யாரோ கிடைத்து

யாரோ சூடாய்
யாரோ குளிர்ந்து

யாரோ மறந்து
யாரோ நினைத்து

யாரோ அழுது
யாரோ சிரித்து

யாரோ வெட்கி
யாரோநிமிர்ந்து

யாரோ பயந்து
யாரோ துணிந்து

யாரோ அவனாய்
யாரோ அவளாய்

யாரோ நீயாய்
யாரோ நானாய்!

................................................

(யாரோ குழப்பி,யாரோ குழம்பி! ஹா,ஹா!)

19 comments:

  1. யாரோ எழுதி...
    யாரோ படித்து....
    யாரோ கருத்திட்டு....

    ReplyDelete
  2. இங்கிட்டுலாம் வந்தா இதையெல்லாம் தாங்கனும்ன்னு யாரோ சொன்னாங்க!!

    ReplyDelete
    Replies
    1. யாரோ சொல்லி
      யாரோ செய்து
      யாரோ எழுதி
      நானே நன்றி சொல்லி!

      Delete
  3. யாரோ எழுதி
    யாரோ படித்து
    யாரோ வருந்த
    யாரோ சிரிக்க
    நாங்கள் தானா கிடைத்தோம்!

    ReplyDelete
    Replies
    1. யாரோ கிடைத்தால்தானே பதிவுக்குப் பயன்!
      நன்றி சார்

      Delete
  4. //(யாரோ குழப்பி,யாரோ குழம்பி! ஹா,ஹா!)//

    அதான.. என்னடா இன்னும் ட்விஸ்ட் எதுவும் வரக் காணோமேன்னு நினைச்சேன்... ஒரு கூட்டமாத் தான் கிளம்பி இருகாயிங்க...

    ReplyDelete
    Replies
    1. யாரோ கிளம்பி
      யாரோ அறுத்து
      யாரோ நொந்து
      யாரோ நூலாகி
      .....
      நன்றி சீனு

      Delete

  5. நீரே எழுதி
    நானே படித்து
    பேரோ கவிதை!
    ஏதோ எழுதினால்
    எல்லாம் கவிதையோ!
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
    Replies
    1. யாரோ எழுதி
      யாரோ சகித்து
      ;;;;;;;;;;;
      பொறுத்தருள்க கவிதாயினி அவர்களே
      நன்றி

      Delete
  6. யாரோ பதிவு போட்டு,
    யாரோ படிச்சு,
    யாரோ பின்னூட்டம் போட்டு
    யாரோ அதுக்கு பதிலும் போட்டு,

    ஹா ஹா யாரோ என்ற சிங்கிள் வார்த்தையை ஹீரோ ஆக்கிட்டீங்க!!

    ReplyDelete
  7. யாரோ ஹீரோவாக
    நானோ ஜீரோவாக!

    நன்றி மணி மணி

    ReplyDelete
  8. நீங்க எழுத
    நான் படிக்க


    பதிவர் திருவிழா வரிங்கதானே ?

    ReplyDelete
    Replies
    1. வருவேன்,வெளிப்படுத்துக் கொள்ளாமல்
      நன்றி ரூபக்

      Delete
  9. Replies
    1. என்ன பேரோ?அறியேனே!
      நன்றி வெங்கட்

      Delete
  10. ஆராரிரோ
    பாடியாதாரோ
    தூங்கிப்போனதாரா...

    ReplyDelete