Tuesday, August 20, 2013

வரமல்ல ,வந்த சாபம் நீ!



வசந்தமாய் என் வாழ்வில் வந்த உன்னை
வரமென்று எண்ணி மகிழ்ந்தேன் நான்!

உன்னுயிர் நானே என்றாய்
உவகையின் உச்சத்தில் நான்
எல்லையில்லை உன் அன்புக்கென்றாய்
எல்லாமே பொய்யாய்ப் போக
தந்தையின் எதிர்ப்பைச் சொல்லி
தவிக்க விட்டுப் போனாய்!
தடம் புரண்டதென் வாழ்வு
கயஸாய் மாறி,கருத்திழந்து திரிந்தேன்
தேவதாஸாய் மாறித் தேடினேன் புட்டிகளை
இளைத்தேன்,கருத்தேன்
இளமை நலமிழந்தேன்.

இந்நிலை நீடிக்கையில்
கண்டேன் ஒரு நாள் உன்னை
கணவரின் கை பற்றிக்
கடைவீதி நீ செல்கையிலே
முகத்தில் மகிழ்ச்சி
முன் தள்ளிய வயிறு
முன்னிலும் அழகு
புரிந்து கொண்டேன்
என் வாழ்வின் வரமல்ல நீ
சாபம் என்று!





9 comments:

  1. ம்ம் நல்லாதன் இருக்கு உங்க அனுபவம்

    ReplyDelete
  2. அடடா... ...ம்...

    எங்கிருந்தாலும் வாழ்க...
    உன் இதயம் அமைதியில் வாழ்க...
    மஞ்சள் வளத்துடன் வாழ்க...
    உன் மங்கலக் குங்குமம் வாழ்க...
    வாழ்க...வாழ்க...

    ReplyDelete
  3. கயஸாய் மாறி,//

    அப்படீன்னா?

    ReplyDelete
    Replies
    1. ஜோசப் சார்!லைலா-மஜ்னு தெரியுமல்லவா?மஜ்னுவின் பெயர் கயஸ்தான்!
      நன்றி

      Delete
  4. எனக்கும் அதே டவுட்தாட் .அதென்ன கயஸாய்?

    ReplyDelete
    Replies
    1. கலியபெருமாள் சார்
      முந்தைய பதிலைப் பாருங்கள்

      Delete
  5. நம் ஊர் அம்பிகாபதி அமராவதியை விட்டுவிட்டீர்களே!

    ReplyDelete