Showing posts with label நிகழ்ச்சி நிரல். Show all posts
Showing posts with label நிகழ்ச்சி நிரல். Show all posts

Wednesday, August 21, 2013

தெறம காட்டப் போகும் பதிவர்கள்......பதிவர் திருவிழா 2013



சென்னை
21-08-2013

செப்டம்பர் 1 ஆம் தேதி சென்னை வடபழனியில் நடக்க இருக்கும் வரலாறு காணாத பதிவர் திருவிழாவில் மதிய நிகழ்ச்சிகளில்,பதிவர்களுக்குத் தம் திறமைகளை வெளிப் படுத்த நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது தெரிந்ததே.இவர்களில் பலர் ஏற்கனவே தொலைக் காட்சியில் தங்கள் திறமையை வெளிக்காட்டிக் கொண்டிருப்பவர்கள்தான். ஆனால் ’நீயா நானா’ போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் இவர்கள் ’சூப்பர் சிங்கர்’,’மானாட மயிலாட’ போன்ற நிகழ்ச்சிகளில் ஏன் கலந்து கொள்ள முன் வரவேயில்லை என்பது ஒரு புதிராகவே இருந்து வந்திருக்கிறது.

இப்போது இந்தத் திருவிழாவில் இவர்கள் பாட்டு ஆட்டம் ,நடிப்பு போன்ற பல திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்பளிக்கப் பட்டிருக்கிறது.

எமது சிறப்பு நிருபர், டாஸ்மாக்கும் நிலாவும் பேரில் இணைந்த முக்கிய பதிவரிடம் பேசிக் கொண்டிருந்தபோது,யாரெல்லாம் பாடப் போகிறார்கள்,என்னபாட்டு என்ற தகவல்கள் கசிந்தன!

தற்போதைய நிலவரப்படி கீழ்க்கண்ட பதிவர்கள் படும் பாட்டை,சாரி பாடும் பாட்டைத் தெரிந்து கொள்ளுங்கள்..........

1)    பள்ளிச் சிறுவன்...பாட்டும் நானே,பா(B or P?) வமும் நானே....

2)    ஹோட்டல் பதிவர் முருகன்...கல்யாணம்....கல்யாணம்,....வேண்டும்

3)    தலைநகரப் பைத்தியம்....மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்

4)    உறுதியாகச் சண்டை போடு......காதல் கசக்குதய்யா,வர,வரக்.....

5)    தென்புலக் காற்று...மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்…கவிதை அது கவிதை

6)    இறுதியாக…லாலிபாப்பும்,பிஸ்கோத்தும்…..என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்........

(ஆறு பதிவர்களும் யார் யாரென்று தெரியவில்லை என்றால் ,சொல்லுங்கள்)        
  
மதியம் பலமான சாப்பாட்டுக்குப் பின்(சைவம்,அசைவம் இரண்டும்  உண்டு), நிகழ்ச்சிகள் துவங்கும்.பாட்டாவது பாடிவிடலாம்,ஒரு மாதிரி ஏப்பம் விட்டாலும் அதுவே ஒரு சங்கதி எனச் சொல்லிக் கொள்ளலாம்!

ஆனால் நடனம் ஆடுவது எப்படி?

யார் ஆடப் போகிறார்கள் என்ற தகவல் நாளை கிடைக்க வாய்ப்பு இருக்கிறது

(இந்த நிகழ்ச்சியில் நன்கு பாடுபவர்களுக்கு தன் படத்தில் பின்னணி பாடும் வாய்ப்புத் தருவதாகப் பதிவர் மேரு ,கம்பி வடப் பதிவர் சொல்லியிருக்கிறாராம்!)
 

…………புளுகு டைம்ஸ்