அழகில்லாத பெண் என்று யாரும் இல்லை!
.....................
ஒரு ஆண் மகப்பேறு மருத்துவர் என்பவர்,காரே சொந்தமாக
வைத்திருக்காத கார் மெகானிக் போன்றவர்!
........................
ஒரு ஆண் பிரசங்கத்தில் சொல்வதை விட ஒரு பெண் பெருமூச்சிலேயே
அதிகம் சொல்லி விடுகிறாள்.
......................
எந்த விவாதத்திலும் பெண் சொல்வதே கடைசி வார்த்தை;அதற்குப்பின் ஆண் சொல்வதெல்லாம்
ஒரு புது விவாதத்தின் தொடக்கமே!
.....................
பெண்கள் அதிகம் பேசாத ஆண்களை விரும்புகிறார்கள்;இவர்கள்
பேசுவ தெல்லாம் அவர்கள் கேட்பார்கள் என்று நம்பி!
......................
கடவுள் முதலில் ஆணைத்தான் உருவாக்கினான்,பின்னரே
பெண்ணை.ஒரு ஒப்பற்ற பொருளை உருவாக்க ஒரு ஒழுங்கில்லாத மாதிரி செய்து பார்ப்பது போல்!
......................
ஒரு சராசரிப்பெண் அறிவை விட அழகையே அதிகம் விரும்புகிறாள்;ஏனெனில்
ஒரு சராசரி ஆண் சிந்திப்பதை விடப் பார்ப்பதில் அதிக கவனம் செலுத்து கிறான்.
.............. ......
ஒரு ஆணின் முகம் சுயசரிதை;ஒரு பெண்ணின் முகம் புதினம்.
.....................
பெண் என்பவள் இல்லையெனில் உலகில் பணம் என்பதே பொருளற்றுப் போகும்.
..................
பெண் தன் கண்ணீரை நகை போல் அணிந்து கொள்கிறாள்!
...................
ஒரு பெண் எப்போது மிக மகிழ்கிறாள்?தன்னை விட குண்டாக
இருக்கும் ஒரு பெண்ணைப் பார்க்கும்போது!
...................