Wednesday, December 5, 2012

யாருக்குத் தெரியும்?!

யாருக்குத் தெரியும்?!
..................................


நடப்பவை எல்லாமே

ஒரு காரணத்துக்காகவே

ஆனால் என்ன காரணம் என

யாருக்குத் தெரியும்!

.................................... 

நட்பே வாழ்க்கை
.................................


எவரேனும் என்னைக் கேட்டால்

வாழ்க்கை என்பது என்ன என்று

நண்பர்கள் அருகில் அமர்ந்து

அவர்கள் தோளில் கைபோட்டு

உரக்கச் சொல்வேன் நான்


”இவர்களே என் வாழ்க்கை”
...............................................................

 எது கடினம்?
 ............................

மகிழ்ச்சியாய் இருப்பதே வாழ்வில்

மிகக் கடினம் என்றெண்ணி யிருந்தேன்

இன்றுணர்ந்தேன்,வலிகள் பல சுமந்தும்

மகிழ்ச்சியாய் நடிப்பதே கடினம் என்று!

.......................................................
 


 

Tuesday, December 4, 2012

குரு என்னும் ஒருவர்!




ஆசிரியரும் குருவும் ஒன்றா?

எல்லா குருவும் ஆசிரியர்தான்.

ஆனால் எல்லா ஆசிரியரும் குரு அல்ல!

குருவுக்கும் ஆசிரியருக்கும் என்ன வேறுபாடு?

இதோ---

ஆசிரியர்                                                                           குரு    
------------                                                                         -----------
1)ஆசிரியர் உங்கள் வளர்ச்சிக்குப்                                குரு உங்கள் வளர்ச்சிக்கு
பொறுப்பேற்கிறார்                                                         உங்களையே பொறுப்பேற்க வைக்கிறார்


2)உங்களிடம் இல்லாத,உங்களுக்குத்                         உங்களிடம் உள்ள உங்களுக்குத்
தேவையானவற்றைத் தருகிறார்.                                 தேவையற்றவற்றை நீக்குகிறார்.


3)உங்கள் கேள்விகளுக்கு விடை அளிக்கிறார்            உங்கள் விடைகளுக்குக் கேள்வி
                                                                                           கேட்கிறார்

4)ஆசிரியர் மாணவனுக்கு பிள்ளைக்குத்                     குரு மாணவனுக்கு,பிள்ளைக்குத்
     தந்தை போன்றவர்                                                       தாய் போன்றவர்


                                                                                  

5)ஆசிரியர் குழப்பங்களிலிருந்து வெளி வர                 குரு குழப்பங்களையே வேரறுக்கிறார்
   உதவுகிறார்


6)ஆசிரியர் உங்கள் அறிவைக்                                        குரு உங்கள் அறிவை விரிவு 
  கூர்மைப் படுத்துகிறார்.                                                 படுத்துகிறார்


7)ஒருவர் எப்போது வேண்டுமென்றாலும்                    குரு உங்களைத் தேடி ஏற்றுக் கொள்ள
  ஒரு ஆசிரியரைக் கண்டு கொள்ளலாம்.                     வேண்டும்

 ஆம் நல்ல குரு கிடைப்பதும் ஒருவரின் தவப்பயன்தான் .

எல்லா குருவும் நல்ல குரு அல்ல.
 
திருமூலர் சொல்கிறார்—

“குருட்டினை நீக்கும் குருவினைக் கொள்ளார்
 குருட்டினை நீக்காக் குருவினைக் கொள்வார்
 குருடும் குருடும் குருட்டாட்டம் ஆடிக்
 குருடுங் குருடுங் குழிவிழு மாறே”
                    

Monday, December 3, 2012

நித்யானந்தா பற்றிய அரிய தகவல்கள்!



பகவான் நித்யானந்தா அவர்கள் பிறப்பு பற்றி உறுதியான தகவல்கள் இல்லை.

அவரது சீடர்கள் சொல்வது- கோழிக்கோட்டுக்கு அருகில் உள்ள டுனேரி கிராமத்தில் ஒரு ஆதரவற்ற குழந்தையாக நாயர் தம்பதியால் கண்டெடுக்கப்
பட்டார்.

பிறப்பு 1897 ஆம் ஆண்டு என்று மட்டும் தெரிகிறது. இருபது வயதுக்கு முன்பே அவர்,ஹிமாலயாவில் அலைந்து திரிந்து ஆத்ம ஞானம் பெற்றார் .

1920 இல் திரும்பி வந்து கன்னங்காட்டில் ஒரு ஆசிரமம் கட்டத் தொடங்கினார்.
அக்கால ஆங்கில அதிகாரிகள் அவர் கள்ள நோட்டுத்தயாரிப்பதாகச் சந்தேகப் பட,அவர் அவர்களை முதலைகள்  நிறைந்த ஒரு குளத்துக்கு அழைத்துச் சென்று அதில் மூழ்கி ரூபாய் நோட்டுக்கள் எடுத்துக் காட்டினாராம்.

1936 இல் மகாராஷ்ட்ராவில் உள்ள கணேஷ்புரிக்குச் சென்று அங்கேயே தங்கி ஆசிரம் நிறுவினார்.8-8-1961 இல் மகா சமாதி அடைந்தார்.

இவருக்குப் பின் ஆசிரமத்தலைவராக வந்தவர் ஸ்வாமி முக்தானந்தா.1982 இல் இவர் காலமானார். 

அவருக்குப் பின் குருமயி சித்விலாசானந்தா, அவர் சகோதரர் நித்யானந்தா இருவருக்கும்  கருத்து வேற்றுமை வந்து ,நித்யானந்தா தனியாகச் சென்று ஆசிரமம் அமைத்துப் பின்  தஸ்னமி அகாராவின் மஹா மண்டலேஸ்வரர் ஆனார்.

பகவான் நித்யனந்தாவின் சமாதி கணேஷ்புரியில் இருக்கிறது.


மடையர்களா ஆண்கள்?!



மாற்றத்தை உணராத மடையர்களா ஆண்கள்?  

ஆம் என்கிறது ஒரு சர்வே ரிப்போர்ட்.
 

உலகம் தோன்றிய நாள் முதலாக ஆண்களிடம் குற்றம் கண்டு பிடிப்பதே பெண்களின் வேலை என்றாகி விட்டது . 

இதை ஒரு நிறுவனம் 2 ஆயிரம் பெண்களிடம் பேட்டி கண்டு அறிக்கையாக வெளியிட்டி ருக்கிறது..
 
அப்படி என்ன புதிய குறையை கண்டு பிடித்திருக்கிறார்கள்?

வீட்டின் உள் அலங்காரத்திலோ, அறைகளில் போடப்பட்டிருக்கும் தளவாடங்களிலோ (Furniture), சுவர் சித்திரங்களிலோ ஏதாவது மாற்றம் செய்தால் அதை ஆண்கள் கண்டு பிடிப்பதே இல்லையாம். அப்படியே கண்டு கொண்டாலும் அதை வெளி காட்டிக்கொள்வ தில்லையாம். அப்படியே மாற்றத்தை சுட்டிக்காட்டி கேட்டாலும் பாராட்டி வார்த்தை பேசுவதில்லையாம்.
 
குற்றப்பத்திரிகை வேறு வாசிப்பார்கள். இத்தோடு முடிகிறதா என்றால் இல்லை. அப்படியே ஒருவேளை மாற்றத்தை தெரிந்து கொண்டாலும் சரி அதான் மாத்தியாச்சே...இனி இதுல நான் சொல்றதுக்கு என்ன இருக்கு என்னவோ பண்ணித் தொலைக்க வேண்டியது தானே என்று எரிந்து விழுகிறார்களாம் சிடுமூஞ்சி ஆண்கள்.

சரி , இந்த சர்வேயில் பாராட்டே கிடையாதா என்றால் உண்டு. ஆனால் பாராட்டு அம்மணி களின்  அம்மாக்களுக்குதான்
.

ஆம் எந்த வீட்டில் என்ன மாற்றம் செய்தாலும் அந்த பெண்ணுடைய அம்மாக்கள் உடனே கண்டு பிடித்து விடுகிறார்களாம்.  (மாமியார்களும் கண்டு பிடிப்பார்கள். ஆனால் அது மிக பெரிய சண்டையில் சென்று முடியும் என்பதால் சர்வே நிறுவனம் எச்சரிக்கையாக அதை கேட்கவே இல்லை.)

" இந்த மஜந்தா கலர் திரை சீலை வாங்கினாயா? அல்லது உங்க வீட்டுகாரர் பழைய வேட்டியா? (மஜந்தா - மருமகன் வேட்டி அவ்வளவு அழுக்கு!) என்று அம்மாக்கள் சட்டென்று கேட்டு விடுகிறார்களாம். கூடவே 3000 ரூபாய் கொடுத்து வாங்கிய புடவையை பழைய பாத்திரக்காரரிடம் 40 ரூபாய்க்கு  போட்டு கூடவே 300ரூபாய்  சேர்த்துக் கை துடைக்கிற
டவல் வாங்கிய சாமர்த்தியத்தையும் பாராட்டி விடுகிறார்களாம்!

பாவம் ஆண்கள்- அசடு , அசமஞ்சம், மாற்றத்தை உணர தெரியாத ஜடம், ரசிக்க தெரியாத ஜந்து, சிரிக்க மறந்த பிராணி, பரந்த மனதில்லாத ஜென்மம் என்றெல்லாம் பட்டம் வேறு வாங்க வேண்டியிருக்கிறது..
 
காலம் பூராவும் பெண்களிடம் ஏச்சு வாங்கவே பிறந்ததுதான் ஆண்களின் தலை விதி போலும்..

(இணையத்திலிருந்து)

Saturday, December 1, 2012

நட்பின் இலக்கணம்!-குறள் விளக்கப் படம்!

                        
                     நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனில் கொட்பின்றி
               ஒல்லும்வாய் ஊன்றும் நிலை----குறள்-789

நட்புக்குச் சிறந்த நிலை எது என்றால் எப்போதும் வேறுபடுதல் இன்றி  முடியும்போதெல்லாம் உதவி செய்து தாங்கும் நிலையாகும்-(முனைவர்.மு.வ)