Tuesday, December 11, 2012

தர்ம சங்கடம்!



ஏ.சி.பி. குட்டன் மனைவியுடன் வெளியே கிளம்பத் தயாராகிக் கொண்டிருந்தார்.

அவர் கடமையில் மிகக் கண்டிப்பானவர்.நேர்மை தவறாதவர்.

அந்த ஊர் ரவுடிகளுக்கெல்லாம் சிம்ம சொப்பனமாக விளங்கினார்.

மக்களின் ஒழுங்கு பற்றி மிகக் கண்டிப்பாக இருப்பவர்.

தான் போகும் வழியில் யாராவது ஒழுங்கீனமாக நடப்பதைக் கண்டால்,அதற்கான தண்டனை தராமல் விட மாட்டார்.

பொது இடங்களில் காதல் என்ற பெயரில் நடக்கும் சல்லாபங்களை அறவே வெறுத்தவர்.

அப்படி யாரையாவது பார்த்தால் அவர்களை விசாரித்து ,அவர்களைப் பற்றிய ஆதரங்களைச் சரி பார்த்துக் கண்டித்து அனுப்புவார்.

தன் கீழ் பணி புரிபவர்க்கும் இது விஷயத்தில் கடும் உத்தரவு பிறப்பித்திருந்தார்.

இருவரும் வெளியே செல்லத் தயாராயினர்.

காரில் ஏறிப் புறப்பட்டனர்.

மாலை முடிந்து இருள் பரவிக் கொண்டிருந்தது.

செல்லும் வழியில் முக்கியமான எதையோ மறந்து விட்டதாக மனைவிக்குச் சந்தேகம் வரக், கைப்பையத் திறந்து பார்த்தார்.

வண்டி செல்லும்போது சரியாகப் பார்க்க முடியவில்லை.

கணவரை வண்டியை நிறுத்தச் சொல்லி விட்டுக் கைப்பையைக் கவிழ்த்துத் தேட ஆரம்பித்தார்.

அந்தநேரத்தில்—

மூடப்படிருந்த காரின் கண்ணாடி தட்டப்பட்டது.

கண்ணாடியை கீழே இறக்கினார் குட்டன்.

வெளியே ஒரு காவலர்.

உள்ளே யார் இருக்கிறார்கள் எனப் பார்த்தார்.

அவருக்குக் குட்டனைத் தெரியவில்லை.

“இந்த நேரத்தில் இங்கு காரை நிறுத்தி விட்டு என்ன செய்கிறீர்கள்?”எனக் கடுமையாகக் கேட்டார்.

குட்டன் திகைத்தார்.

தான் யார் என்று சொல்ல மனமில்லை,சங்கடமாக இருந்தது

“நாங்கள் ஒரு கல்யாண வரவேற்புக்குப் போய்க்கொண்டிருக்கிறோம்.இது என் மனைவி. கைப்பயில்  தேடுவதற்காக வண்டியை நிறுத்தினோம்.”

”ஏதாவது ஆதாரம் இருக்கிறதா?”

நல்ல வேளையாக அவரும் மனைவியும் குழந்தையும் சேர்ந்து எடுத்த ஃபோட்டோ டேஷ்போர்டில் இருந்தது.

அதைக்காட்டினார்.

“சரி போங்க” காவலர் நகர்ந்தார்

ஏசியிலும் ,ஏசிக்கு வியர்வை வந்தது!



Saturday, December 8, 2012

உங்களுக்கு நோமொஃபோபியா இருக்கிறதா?



























(இணையத்திலிருந்து)

Friday, December 7, 2012

தாம்பத்திய உறவில் எது முக்கியம்?



தாம்பத்திய உறவில் முக்கியமானது எது?

உடனே நீங்கள் சொல்வது,உறவு என்ற சொல்லே அதைச் சொல்லி விடுகிறதே என்றா?

படுக்கையைப் பகிர்ந்து கொள்வது மட்டும் தாம்பத்தியமாகி விடுமா?

இல்லறம் இனிமையானதாகி விடுமா?

இந்த உறவில் மிக முக்கியம்,புரிதல்,விட்டுக் கொடுத்தல்,அனைத்தையும் பகிர்தல்.

இன்பம்- துன்பம்,எழுச்சி-வீழ்ச்சி,வரவு –செலவு என்று எல்லாம் பகிர்ந்து கொள்ளுதல்.

இதைச் சொல்கையில் சமீபத்தில் நான் படித்த ஒரு குட்டிக்கதை நினைவுக்கு வருகிறது.
நகைச்சுவைக்காகச் சொல்லப்பட்ட கதைதான்.

ஆனால் அதையும் மீறி அதனுள் இருக்கும் அந்த உன்னதமான தாம்பத்திய உறவின் அழுத்ததைப் பாருங்கள்.

இதோ கதை--------

ஒரு வயதான தம்பதி ஓட்டலுக்குள் நுழைந்தனர்;

கணவனுக்கு வயது 85க்கு மேலும்,மனைவிக்கு 80க்கு மேலும் இருக்கலாம்.

ஒரு மேசையின் முன் அமர்ந்தனர்.

பணியாளிடம் இரண்டு இட்லி,ஒரு வடையுடன் இன்னொரு தட்டும் கொண்டு வரச் சொன்னார்கள்.

இட்லி வடையும் காலித்தட்டும் வந்தன.

கணவன் ஒரு இட்லியையும்,வடையில் பாதியையும் காலித்தட்டில் வைத்து,சாம்பார்,
சட்னியிலும் பாதி ஊற்றி,மனைவி முன் வைத்து விட்டுச் சாப்பிடத்தொடங்கினான்.

அவன் சாப்பிடுவதைப் பார்த்தவாறே மனைவி அமர்ந்திருந்தாள்,அவ்வப்போது தண்ணீரைக் குடித்தவாறு.

ஓட்டலில்  இருந்த மற்றவர்கள்,இவர்கள் வசதியற்றவர்கள்,எனவே கொஞ்சமாக  வாங்கிப் பகிர்ந்துகொள்கின்றனர் என எண்ணினர்.

ஒரு இளைஞன் அவர்களிடம் வந்து,இன்னொரு தட்டு இட்லி வடை தான் வாங்கித்தருவதாகக் கூற அவர்கள் மறுத்து விட்டனர் ,தாங்கள் எப்போதுமே பகிர்வதே பழக்கம் எனக் கூறி.

கணவன் சாப்பிட்டு முடித்தான்.

கை கழுவப்போனான். 

இளைஞன் மீண்டும் வந்து மனைவியிடம் கேட்டான்”ஏன் நீங்கள் சாப்பிடவேயில்ல?”

அவள் கூறினாள்”பல் செட்டுக்காகக் காத்துக் கொண்டிருக்கிறேன்!!”

பகிர்தலின் உச்சம்!!!

Thursday, December 6, 2012

எதெல்லாமோ பறக்குதே!


                          1-2-2012;ஆஸ்திரேலியா .தோனி மட்டையைப் பறக்க விடுகிறார்!


  
                            மீண்டும் பறக்கிறது தோனியின் மட்டை--அக்டோபர் 2006

(மட்டை பறந்தால் பரவாயில்லை;இங்கிலாந்துக்கு எதிராக எல்லாமே பறக்கிறதே, பந்தைத் தவிர!)

இந்திய விளயாட்டின் மானமும் பறக்கிறது, சர்வதேச ஒலிம்பிக் குழு, இந்திய ஒலிம்பிக் சங்கத்துக்கு விதித்த தடையினால்.

அதைப்பற்றி என்ன கவலை.பதவி வேண்டும் .5 நட்சத்திர ஓட்டலில் பார்ட்டி கொண்டாட வேண்டும் அதுதான் முக்கியம்!

நாசமாய்ப் போகட்டும் நாட்டின் விளையாட்டுத் துறை!