ஆனா அடையார் ஆலமரத்தோட பிராஞ்ச் அடையார்ல மட்டும் தான். பாய்சன் 10 நாள் ஆனா பாயாசம் ஆகாது, ஆனால் பாயாசம் 10 நாள் ஆனா பாய்சன் ஆகிடும். காருக்குள்ள டயர் இருந்தா அது ஸ்டெப்னி, அதே நம்ப மேல அந்த டயர் ஏறினா நாம சட்னி உள்ள போற வரைக்கும் தான் பிராந்தி வெளியிய வந்தா அதுக்கு பேரு வாந்தி தன்னம்பிக்கைக்கும் தலைக்கனத்துக்கும் ஒரு நூல் அளவுதான் வித்தியாசம் என்னால ஃபுல்லா அடிச்சிட்டு ஸ்டெடியா நிக்க முடியும்னு சொல்றது தன்னம்பிக்கை என்னால மட்டும் தான் ஃபுல்லா அடிச்சிட்டு ஸ்டெடியா நிக்க முடியும்னு சொல்றது தலைக்கனம் செல்லுல பேலன்ஸ் இல்லனா கால் பண்ண முடியாது ஆனா மனுசனுக்கு கால் இல்லனா பேலன்ஸ் பண்ண முடியாது இரயில் எவ்வளவு வேகமா போனாலும் கடைசி பெட்டி கடைசியில தான் போகும். பஸ் போயிட்டா பஸ் ஸ்டாண்ட் அங்கயேதான் இருக்கும் ஆனா சைக்கிள் போயிட்டா சைக்கிள்ஸ்டேன்ட் கூடவே போகும் வாயால 'நாய்'னு சொல்ல முடியும் ஆனா நாயால 'வாய்'னு சொல்ல முடியுமா? அரிசி கொட்டினா வேற அரிசி வாங்கலாம் பால் கொட்டினா வேற பால் வாங்கலாம் தேள் கொட்டினா வேற தேள் வாங்க முடியாது ஃபைல்ஸ்னா உட்கார்ந்து பார்க்கனும் ஆனால் பைல்ஸ்னா பார்த்து உட்காரனும் இன்னைக்கு தூங்குனா நாளைக்கு எந்திரிக்கலாம் நாளைக்கு தூங்குனா இன்னைக்கு எந்திரிக்க முடியுமா? பஸ்ல கலெக்டரே ஏறினாலும் மொத சீட்டு டிரைவருக்கு தான் சைக்கிள் கேரியர்ல டிபன் வச்சி எடுத்துகிட்டு போகலாம் டிபன் கேரியர்ல சைக்கிள வச்சி எடுத்துகிட்டு போக முடியுமா? டிக்கெட் வாங்கிட்டு உள்ள போனா அது சினிமா தியேட்டர் உள்ள போயி டிக்கெட் வாங்கினா அது ஆப்பரேசன் தியேட்டர் (சில படங்களை காசு கொடுத்து உள்ள போயி பார்க்கும் போது ஆப்பரேசன் தியேட்டருக்கு போன மாதிரி இருக்கும்) என்னதான் மீனுக்கு நீந்த தெரிஞ்சாலும் அதால மீன் குழம்புல நீந்த முடியுமா? அயர்ன் பாக்ஸ்ல அயர்ன் செய்ய முடியும் ஆனா பென்சில் பாக்ஸ்ல பென்சில் செய்ய முடியுமா? இது தான் வாழ்க்கை நீ என்ன தான் காஸ்ட்லி மொபை வச்சிருந்தாலும் அதுல எவ்வளவு தான் ரீசார்ஜ் செய்து வச்சிருநதாலும் உனக்கு நீயே கால் செஞ்சிக்க முடியாது இது தான் வாழ்க்கை க்ரீம் பிஸ்கெட்டுல க்ரீம் இருக்கும் ஆனா நாய் பிஸ்கட்டுல நாய் இருக்குமா? ஒரு எறும்பு நினைச்சா ஆயிரம் யானையை கடிக்கலாம் ஆனா ஆயிரம் யானை நினைச்சாலும் ஒரு எறும்பை கடிக்க முடியாது. குவார்ட்டர் அடிச்சிட்டு குப்புற படுக்கலாம் குப்புற படுத்துகிட்டு குவார்ட்டர் அடிக்க முடியாது என்னதான் கராத்தேல பிளாக் பெல்ட் வாங்கியிருந்தாலும் சொறிநாய் துரத்தினா ஓடித்தான் ஆகனும் (ஹி ஹி.... ) சேர் உடைஞ்சா உக்கார முடியாது கட்டில் உடைஞ்சா படுக்க முடியாது ஆனா முட்டை உடைஞ்சாதான் ஆம்லெட் போட முடியும் (அதனால உனக்கு கஷ்டம் வந்தா ஆம்லெட் போட தான்னு நினைச்சிக்கோ...)
இளைஞர்களுக்காக ,இளைஞரால் நடத்தப்படும் இளைஞர் வலைப்பூ! (a blog of the youth,by the youth,for the youth!)
Saturday, November 24, 2012
முடிஞ்சாச் சிரிங்க!
> அடையார் ஆனந்த பவனோட பிராஞ்ச் நிறைய இடத்துல இருக்கும்,
Thursday, November 22, 2012
நெக்ரோஃபிலியா தெரியுமா?
நெக்ரோஃபிலியா என்றால் என்ன?
பிணத்துடன் உடலுறவு கொள்வதே நெக்ரோஃபிலியா.
இது தனாடொஃபிலியா என்றும் அழைக்கப்படுகிறது.
1989 இல் ராஸ்மன்,ராஸ்னிக் இதுபோன்ற
34 ஆட்களைத் தேர்ந்தெ டுத்து,ஒரு ஆய்வு நடத்தினர்.முடிவாக
அவர்கள் சொன்னது அதில் 68 விழுக்காடு பேர்
எதிர்ப்புத் தெரிவிக்காத,உதறித்தள்ளாத துணை என்றே அதை நாடியிருக்கிறார்கள்.
இ.பி.கோ. 297 இன் கீழ் இது தண்டனைக்குரிய
குற்றமாகும்.
இன்றைய செய்தியின்படி ஸ்வீடனில் ஒரு
பெண் ஒரு படி மேலே போய், எலும்புக்கூட்டுடன் உடலுறவு கொண்டதற்காக தண்டிக்கப்பட இருக்கிறாள்.
அவள் வீட்டில் எலும்புக்கூடு,மனித எலும்புகள்
இருந்தனவாம்.
அது தவிர’என் நெக்ரோஃபிலியா’,’என் முதல்
அனுபவம்’, எனத் தலைப் பிடப்பட்ட குறுந் தகடுகளும், அவள் எலும்புக்கூட்டுடன் கூடும் படங்களும்
இருந்தனவாம்!
என்ன கண்ணறாவியோ ஒன்றும் புரியவில்லை!
இவ்வாறு பிணத்துடன் உறவு கொள்வதை அய்யன்
வள்ளுவர் எதோடு ஒப்பிடுகிறார் தெரியுமா?
பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்கம் இருட்டறையில்
ஏதில் பிணந்தழீஇ யற்று- 913
எனவே அதையும் நெக்ரோஃபிலியா என்றே அழைக்கலாமா?! :)))
Wednesday, November 21, 2012
பெண்களைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்?!
அழகில்லாத பெண் என்று யாரும் இல்லை!
.....................
ஒரு ஆண் மகப்பேறு மருத்துவர் என்பவர்,காரே சொந்தமாக
வைத்திருக்காத கார் மெகானிக் போன்றவர்!
........................
ஒரு ஆண் பிரசங்கத்தில் சொல்வதை விட ஒரு பெண் பெருமூச்சிலேயே
அதிகம் சொல்லி விடுகிறாள்.
......................
எந்த விவாதத்திலும் பெண் சொல்வதே கடைசி வார்த்தை;அதற்குப்பின் ஆண் சொல்வதெல்லாம்
ஒரு புது விவாதத்தின் தொடக்கமே!
.....................
பெண்கள் அதிகம் பேசாத ஆண்களை விரும்புகிறார்கள்;இவர்கள்
பேசுவ தெல்லாம் அவர்கள் கேட்பார்கள் என்று நம்பி!
......................
கடவுள் முதலில் ஆணைத்தான் உருவாக்கினான்,பின்னரே
பெண்ணை.ஒரு ஒப்பற்ற பொருளை உருவாக்க ஒரு ஒழுங்கில்லாத மாதிரி செய்து பார்ப்பது போல்!
......................
ஒரு சராசரிப்பெண் அறிவை விட அழகையே அதிகம் விரும்புகிறாள்;ஏனெனில்
ஒரு சராசரி ஆண் சிந்திப்பதை விடப் பார்ப்பதில் அதிக கவனம் செலுத்து கிறான்.
.............. ......
ஒரு ஆணின் முகம் சுயசரிதை;ஒரு பெண்ணின் முகம் புதினம்.
.....................
பெண் என்பவள் இல்லையெனில் உலகில் பணம் என்பதே பொருளற்றுப் போகும்.
..................
பெண் தன் கண்ணீரை நகை போல் அணிந்து கொள்கிறாள்!
...................
ஒரு பெண் எப்போது மிக மகிழ்கிறாள்?தன்னை விட குண்டாக
இருக்கும் ஒரு பெண்ணைப் பார்க்கும்போது!
...................
Tuesday, November 20, 2012
சென்ஸார் தங்கமணி!!
இன்று காலை முகச் சவரம் செய்து
கொண்டிருந்தேன்.
“என்னங்க....”தங்கமணியின் கூப்பாடு!
திடுக்கிட்டதில் கை நடுங்கி ரேசர்
,தாடியோடு சிறிது குருதியையும் சேர்த்து எடுத்து விட்டது.
”என்ன ஆச்சு?ஏன் இப்படி
அலறுகிறாய்?”
”நான் அன்னைக்கே சொன்னேனே!இந்த
வலைப்பூவெல்லாம் வேண்டாம்னு. இன்னைக்குப் பாருங்க.முகநூலில் எழுதிய கருத்துக்காக இரண்டு
இளம் பெண்கள் கைது செய்யப்பட் டிருக்காங்க”.
”செல்லம்!அப்படியெல்லாம் சர்ச்சைக்குரிய எதையும் நான் எழுத மாட்டேன்; உனக்குத்
தெரியாதா?உன்னோட அங்கீகாரம் இல்லாம எதுவும்
வலையேற்ற மாட்டேன்.டிராஃப்ட் எழுதி
சேமித்து உன்னிடம் காட்டி விடுகிறேன். வேணுமின்னா ஒரு நாலைந்து எழுதிச் சேமித்து நீ
படித்த பின் ஒவ்வொன்றாக வெளியிடுகிறேன்.உனக்கு ஒரு விஷயம் தெரியுமா ?”
”ஒரு பிரபல
பதிவர் கிட்டத்தட்ட 60 பதிவுகள் டிராஃப்ட் ஆகச் சேமித்து வைத்திருக்கிறாராம்!
பிரமிப்பா இல்ல!”
“இதோ பார்!இன்னைக்குப்பதிவு!பிரச்சினையே
இல்லாத பதிவு!இப்படியே எழுத வேண்டிய துதான்!
படிக்கிறாள்.கண்களைத் துடைத்துக் கொள்கிறாள்.
”உம்,சரிதான் .வெளியிடுங்க!எனக்கும்
இது மாதிரிதான் நடக்கணும்னு ஆசை!”
அணைத்துக் கொண்டேன்!
இதோ பதிவு!
நாடகத்திலும் காவியத்திலும் படித்ததுண்டு.
அவற்றில் எழுதப்பட்டது வெறும் கற்பனையல்ல;நிஜ
வாழ்க்கையின் பிரதி பலிப்புதான் என்பது இன்று புரிகிறது.
கணவன் இறந்தும் அதைப் பார்த்து,அந்த
செய்தி கேட்டுத் தானும் உயிர் துறக்கும் மனைவி காவியத்தில் மட்டுமில்லை,இதோ இங்கிருக்கும்
புன்னப்பாக்கத்திலும்தான்.
எழுபது ஆண்டுகளுக்கு முன் திருமணத்தில் இணைந்தவர்கள்இவர்கள்.வயது
–கணவனுக்கு 91,மனைவிக்கு 82.தீபாவளிக்காக மகன் வீட்டுக்குச் சென்றனர். கால்நடைப் பராமரிப்புக்காகக்
கணவன் ஊருக்குத் தி ரும்பி விட மனைவி அங்கு தங்கினாள்.ஞாயிறுகாலை கணவன் உயிர் பிரிந்தது.அந்தச்
செய்தி மனைவிக்குத் தெரிவிக்கப்பட்டது.செய்தி கேட்டு அவள் சுருண்டு விழுந்தாள். மருத்துவ
மனைக்குக் கொண்டு சென்றனர்.அவள் உயிர் பிரிந்து விட்டதாகத் தெரிந்தது!
ஒருவரை ஒருவர் சார்ந்திருக்கும் தம்பதியில் ஒருவரின் பிரிவு மற்றவருக்கு ஏற்படுத்தும் அதிர்ச்சியின் விளைவே இது!
”உடம்பொடு உயிரிடை என்னமற் றன்ன
மடந்தையொடு எம்மிடை நட்ப”ு
Subscribe to:
Posts (Atom)