Monday, June 17, 2013

தலயா?தளபதியா? யார் வேண்டும்?!



ஒரு பெண் ஆற்றின் கரையில் துணிகளைக் மரக்கட்டையால் அடித்துத் துவைத்துக் கொண்டிருந்தாள்.

அப்போது கட்டை கைதவறி ஆற்றில் விழுந்து விட்டது.

அவள்”ஐயோ! கட்டை போய் விட்டதே ? இனி எப்படித் துவைப்பேன்?”என அழத் தொடங்கினாள் .

கடவுள் அவள் முன் தோன்றி விஷயம் என்ன என்று கேட்க அவள் நடந்ததைச் சொன்னாள்.
கடவுள் தன் கையை ஆற்றில் விட்டு ஒரு தங்க் கட்டையை எடுத்து அவளிடம் காட்டி “இதுவா” எனக் கேட்டார்.

அவள் இல்லை என்றாள்.
மீண்டும் ஆற்றில் கைவிட்டு ஒரு வெள்ளிக் கட்டையை எடுத்துக் காட்டினார்.

அவள் இல்லையென்றாள்.

மூன்றாவது முறையாக  அவளது மரக்கட்டையை எடுத்துக்க்காட்ட அவள் ஆம் என்றாள்.

கடவுள் அவள் நேர்மைக்குப் பரிசாக மூன்றையும் அவளுக்கே கொடுத்து மறைந்தார்.

சிறிது காலத்துக்குப் பின் அவள் ற்றின் கரையோரம் தன் கணவனுடன் சென்று கொண்டிருந்தபோது அவள் கணவன் ஆற்றில் தவறி விழுந்து மூழ்கி விட்டான்!

அவள் அழுதாள்.

கடவுள் மீண்டும் தோன்றி நடந்ததைக் கேட்டு ஆற்றில் கைவிட்டு தல’ அஜித்’ தை   எடுத்துக் காட்டினார்.

அவள் ”ஆம்.அவர்தான் ”  எனச் சொல்ல கடவுளுக்குக் கோபம் வந்து கேட்டார் 

“ஏன் பொய் சொல்கிறாய்?”

அவள் சொன்னாள்”நான் இல்லையென்று சொன்னால் அடுத்து தளபதி விஜய்’யை எடுத்துக் காட்டு வீர்கள்.  அவரும் இல்லையென்று சொன்ன பின் என் கணவனைக் காட்டுவீர்கள். கடைசியில் மூவரையுமே எனக்குக் கொடுத்து விட்டுச் சென்று விடுவீர்கள்.மூவரையும் சமாளிக்க என்னால் இயலாது .எனவேதான்………!”

கடவுள் சிரித்து அவள் கணவனைத் தந்து மறைந்தார்!!


(இணையத்தில் கிடைத்தது--சில மாற்றங்களுடன்!)

Thursday, June 6, 2013

ஆடை இன்றிப்போன அரசன்!



அரசன் ஒருவனுக்கு வந்ததொரு ஆசை!

அணிய வேண்டும் ஒரு மெல்லிய ஆடை

அழைத்தான் நாட்டின் நெசவாளர்களை

ஆணையிட்டான் தன் ஆசையை நிறைவேற்ற

ஆடைகள் பல வந்து குவிந்தன அரண்மனையில்

அழகு பட்டில், பஞ்சில்,பருத்தியில் பலப்பல

அத்தனையும் ,மோதிரத்தில் நுழையும் அளவே!

அரசனுக்கு அவை எல்லாம் ஆசைப்படி இல்லை

அடியோடு நிராகரித்தான் அனைத்து ஆடைகளையும்

அப்போது வந்தான் அந்த நெசவாளி

அரசே பாருங்கள் ஆடை இதன் நேர்த்தியை

அத்தனை மென்மை கண்ணுக்கே தெரியாது

ஆடை தெரிவதற்கு கலைக்கண் வேண்டும்

அறிவு வேண்டும் அரும் பெரும் மாட்சி வேண்டும்.

அரசனும் பார்த்தான்;ஏதும் தெரியவில்லை

ஆனாலும் சொல்லப் பயம் அறிவில்லை என்றாமோ?

ஆடையை அரசனுக்கு அணிவித்தான் நெசவாளி

அரசனும் புறப்பட்டான்  ஊர்வலம் நாட்டோர் காண

அத்தனை பேரும் அச்சத்தில் வாய்மூடி நின்றிருக்க

அலறி எழுந்தது ஒரு குரல் அனைவரும் கேட்க

“அய்யய்யோ அரசர் அம்மணமாய்ப் போகிறார்!”

அச்சம் அறியாத சிறுவனவன்!

அடடா!அச்சிறுவன் எங்கே போனான் ?


ஆயிரமாய்,லட்சமாய்க் கோடி கோடியாய் வா!




Wednesday, June 5, 2013

காதல் ஜோடியா?!


கொடுத்து வைத்தவர்.காதலியோடு ஜாலியா பார்க்கில்  உட்கார்ந்திருக்கிறார் பாருங்க!


அவர் முகம் மட்டுமே தெரிகிறது.

முன்னால் சென்று காதலியின் முகத்தையும் பார்க்கலாமா?!

............................................


.............................


............................


......................

 

அய்யய்யோ!காதலி இல்லையா?


ஹா ஹா ஹா ஹா ஹா







Tuesday, June 4, 2013

ஒரு நொடி சபலம்!ஒரு நொடி இன்பம்!!



சிவராமனுக்குப் பார்க்கப் பார்க்க ஆசை அதிகமானது.

என்ன கலர்!

என்ன அழகு!

உடல் பரபரத்தது.

எத்தனை நாள் ஆச்சு?

இந்த சுகம் மறந்தே போச்சு.

இன்று வாய்ப்பை நழுவ விடக்கூடாது.

கல்யாணி வேறு ஊரில் இல்லை.

ஆனாலும் ஒரு தயக்கம்.

இந்த வயதில் இது தேவையா?

ஏதாவது நோய்,கீய் வந்து தொலைத்தால்?

தன்னைத்தானே சமாதானப் படுத்திக் கொண்டார்.

எல்லோருக்கும் நோய் வருகிறதா என்ன?

அவரவர் தலை விதி.

துணிந்து விட வேண்டியதுதான்.

கல்யாணிக்குத் தெரிந்து விட்டால்?

அவள் கிடக்கிறாள் கிழவி!

முடிவுக்கு வந்தார்.

சுற்றும் முற்றும் பார்த்தார்.

அருகில் சென்றார்

“ஒரு பஞ்சு மிட்டாய் கொடப்பா”

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!