Wednesday, September 19, 2012

பைத்தியம் தெளிவதில்லை!



மேகம் கலைந்த பின்னும்
வானம் வெளுத்த பின்னும்
தேகம் களைத்த பின்னும்
தூவானம் விடுவதில்லை.!

காலம் கடந்த பின்னும்
நேரம் முடிந்த பின்னும்
கோலம் கலைந்தபின்னும்
காத்திருப்பு ஓய்வதில்லை!

வெகு தூரம் நடந்த பின்னும்
வெந்து தணிந்த பின்னும்
மிகு தூரம் தெரிந்த பின்னும்
பயணம் முடிவதில்லை!

தூவானம் விட்ட பின்னும்
காத்திருப்பு ஓய்ந்த பின்னும்
பயணம் முடிந்த பின்னும்
பைத்தியம் தெளிவதில்லை!!

(ஒவ்வொரு பத்தி முடிவிலும் உள்ள வாக்கியம் கடைசிப் பத்தியில் இடம் பெற்று முழுமை பெறுகிறது! )



27 comments:

  1. கருத்தும் மெட்டும் ஒன்றை ஒன்று
    மிஞ்ச முயலும் அருமையான கவிதை
    மனம் தொட்ட பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. பின்னும் பின்னும் என்னு சொல்லி நல்லா பிண்ணிட்டிங்க பாஸ்

    ReplyDelete
  3. நல்லா இருக்குங்க... நன்றி...

    ReplyDelete
  4. புதுமையான முறையில் கவிதை படைத்திருக்கிறீர்கள். கருத்தும் அருமை! கவிதையும் அருமை!! வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  5. பைத்தியம் தெளிய வழியைத் தேட சிந்திக்க வைத்த கவிதை... தொடரட்டும்!!

    ReplyDelete
  6. ம்ம் இது புதுக்கவிதையா இல்லை புதிய கவிதையா கலக்கல்

    ReplyDelete
  7. கவிதையா சந்த மெட்டுக்கு எழுதின திரைப்படப் பாடலான்னு புரியலை. ஆனாலும் ரசிக்க வைச்சது. பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.

    ReplyDelete
  8. வித்தியாசமான முயற்சி வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  9. வித்தியாச முயற்சி. நன்றாக இருக்கிறது.

    ReplyDelete
  10. ரசிக்க வைத்த கவிதை..அருமை நண்பா!

    ReplyDelete
  11. அழகாய் வந்திருக்கு கவிதை.அந்தாதியை ஞாபகப்படுத்துகிறது !

    ReplyDelete
  12. நன்றி நண்டு@நொரண்டு

    ReplyDelete

  13. அந்தம் ஆதியாகாமல் அந்தம் அனைத்தும் வரு பாடலா அமைந்தது புதுமையான முயற்சி! வாழ்த்துக்கள்

    ReplyDelete