Monday, September 3, 2012

கடவுளை வணங்கலாமா?எப்படி?!இறை வழிபாட்டுக்குச் சிறந்த நேரம் எது?
எந்த இடத்தில் வழிபடுவது சிறந்தது?”
ஒரு  ஆன்மீக அறிஞரிடம் கேட்கப்பட்ட கேள்விகள்.
அவர் சொன்னார்வழிபடச் சிறந்த நேரம் இப்போது;சிறந்த இடம் இதுவே!”
ஆம் ,எங்கிருக்கிறீர்களோ அங்கேயே தொடங்கலாம்.

1)தினம் சிறிது நேரம் அமைதியில் இருங்கள்;உடல்,மனம் இவற்றைத் தளர்த்தி,உங்கள் பிரச்சினைகளை மறந்து கடவுளை நினையுங்கள்.அவரிடம் உங்கள் பிரச்சினைகளுக்கு முடிவு இருக்கிறது.

2)உங்கள் நண்பனுடன் பேசுவது போல் கடவுளிடம் பேசுங்கள்.வழிபாடு என்பது வெறும் வேண்டுகோள் அல்ல.அவனுக்கு எல்லாம் தெரியும்;நான் என்ன சொல்வது என்று எண்ணாமல்அனைத்தையும் மனம் விட்டு அவனிடம் சொல்லுங்கள்.அவ்வாறு சொல்லும் போது உங்கள் மனம் திறந்து கொள்கிறது .அவன் காட்டும் வழி உங்களுக்குப் புரிகிறது.

பிரார்த்தனைக்கு உகந்தவை ஸ்லோகங்கள்,பாடல்கள் மட்டுமே என்று எண்ணாதீர்கள். உங்கள் மொழியிலேயே,அவனிடம் பேசுங்கள்.அவனுக்குப் பிடித்த மொழி, உங்கள் இதயத்தின் மொழி;அன்பின் மொழி!

3)நாம் அழுக்குகளால் நிரம்பியிருக்கிறோம்;கடவுளை எப்படி அணுகுவது;அவன் ஏற்றுக் கொள்வானா என்றெல்லாம் சிலர் நினைக்கலாம்.ஒரு குழந்தை சாக்கடையில் விழுந்து அசுத்தமாகி விட்டால் அம்மாவிடம்தான் ஓடும்;தன்னைக் கழுவி விடச் சொல்லும்.

4)பேருந்தில் செல்லும்போது தேவையற்ற எண்ணங்களால் மனத்தை நிரப்பாமல், அவனோடு, மனத்தால் பேசுங்கள்.எப்போதெல்லாம் நேரம் கிடைகிறதோ,அது ஒரு மணித்துளியாக இருந்தாலும்,வேலையின் நடுவே,உணவின்போது,எப்போது வேண்டுமானாலும்,அவனை அன்புடன் நினையுங்கள்.நீங்கள் தனியாக இல்லை அவன் உங்களுடன் இருக்கிறான் என்ற தைரியம் வரும்.

5)நீங்கள் கேட்பவற்றில் சில உங்களுக்குக் கிடைக்காமல் போகலாம்.நீங்கள் கேட்டு அவன் தரவில்லையென்றால் அது உங்கள் நன்மைக்கே என உணருங்கள்.காய்ச்சலில் வாடும் பிள்ளை ஐஸ்கிரீம் கேட்டால் தாய் வாங்கித்தருவாளா?

உங்கள் பிரார்த்தனைக்கு அவன் நான்கு விதமாகப் பதில் அளிக்கிறான்,

”சரி;

இல்லை;

பொறு;

இதை விடச் சிறந்தது இருக்கிறது” என்று.

எதை எப்போது தரவேண்டும் என்று அவனுக்குத் தெரியும்.

 நம்புங்கள்.

17 comments: 1. சிந்தையில் வைக்க வேண்டிய நல்ல கருத்துகள்

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகையும் கருத்தும் எனக்கு உற்சாகம் அளிக்கிறது ஐயா.
   நன்றி

   Delete
 2. இளைஞர்கள் இறை வணக்கம் பற்றிப் பேசுவது அருமை. வரவேற்க வேண்டியது. இறைவணக்கமா வேற வேலையில்லை என்பவர்களிற்கு.:-
  மனநல மருத்துவர் மனதில் உள்ளதை எழுதுங்கள் என்பார், இது ஒரு சிகிச்சை முறை. மனதில் உள்ளதை வெளிக் கொட்டுவது. இதையே ஆண்டனிடம் நாம் முறையிடுகிறோம். தியானம், இறைவழிபாடும் அப்படி நன்மை செய்யும் ஒரு முறையே.
  இதனால் வெட்கப் படாமல் செய்யலாம்.
  நல்வாழ்த்து.
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கோவைக்கவி அவர்களே

   Delete
 3. அருமை அருமை கடைசியில் இறைவனின்
  நான்கு பதில்களாகச் சொல்ல்ப்பட்டவைகள்
  மிக மிக் அருமை.மனம் கவர்ந்த பதிவு
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா.

   Delete
 4. //அவனுக்குப் பிடித்த மொழி, உங்கள் இதயத்தின் மொழி;அன்பின் மொழி!//

  மிகச் சிறப்பாகச் சொன்னீர்கள்.இது போன்ற பதிவுகள் தொடர்ந்து எழுதுங்கள்

  ReplyDelete
 5. தங்கள் வருகை மகிழ்ச்சி அளிக்கிறது.அதிகம் நல்ல பதிவுகள் எழுத முயற்சிப்பேன்.
  நன்றி

  ReplyDelete
 6. சிறப்பாக முடித்துள்ளீர்கள்...

  இது போல் சிந்திக்க வைக்கும் பதிவுகளை தொடரவும்... நன்றி... பாராட்டுக்கள்...

  ReplyDelete
 7. நன்றி திண்டுக்கல் தனபாலன் சார்.
  த.ம. ?.இல்லையா?!

  ReplyDelete
 8. //அவனுக்குப் பிடித்த மொழி, உங்கள் இதயத்தின் மொழி;அன்பின் மொழி!//

  அதானே... ஆண்டவனுக்குப் பிடித்தது அன்பின் மொழி தான்!

  சிறப்பான பகிர்வு. தொடரட்டும் உங்கள் பதிவுகள். வாழ்த்துகள் குட்டன்....

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வெங்கட்நாகராஜ் அவர்களே

   Delete
 9. நல்ல கருத்துக்கள் நண்பரே.. பாராட்டுகள்..

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கருண் அவர்களே!

   Delete
 10. நீங்கள் சொல்வது உண்மைதான் கோவிலுக்குப் போனாலும் உண்மையாக வழிபடாமல் திரும்புபவர் உண்டு. நெஞ்சகமே கோயில்.

  என் வலைப் பக்கத்திற்கு வந்து வாழ்த்தியதற்கு நன்றி.சார்!

  ReplyDelete