Wednesday, October 10, 2012

கணவியாக மாறிய கணவன்!பாவி மனுசன்,காணாமப்போயி 18 மாசமாச்சு.என்னையும்,குழந்தையையும் தனியாத் தவிக்க விட்டிட்டு,சொல்லாமக் கொள்ளாமப் போனவரு.என்ன ஆச்சுன்கறதே தெரியலையே.யாரோ சொன்னாங்கன்னு கோர்ட்ல ஆட்கொர்வு மனு கூடப் போட்டாச்சு;போலீஸைக் கேட்டாத் தேடிட்டே இருக்கோம்னு சொல்றாங்க.இன்னும் எத்தனை நாளுக்கோபெருமூச்செறிந்தாள் ரதி.கண்களில் கண்ணீர் குளம் கட்டி நின்றது.

ரதி யாரும்மாவீட்டு வாசலிலிருந்து குரல் கேட்து.

வெளியே வந்தாள்.

போலிஸ்காரர் ஒருவர் நின்றிருந்தார்.

நீதானேம்மா ரதி?உன் புருசன் கிடைச்சிட்டான்.இன்ஸ்பெக்டர் ஐயா கூட்டிட்டு வரச் சொன்னாரு.”

ரதிக்கு மகிழ்ச்சியில் ஒன்றுமே ஓடவில்லை,குழந்தையைக் கையில் எடுத்துக்கொண்டு, போலிஸ்காருடன் புறப்பட்டாள்,

காவல் நிலையத்தில் நுழைந்ததும் அவள் கண்கள் கணவனைத் தேடின.

காவலர்களைத் தவிர ஆண் யாருமே இல்லை.

ஒரே ஒரு பெண் நின்றிருந்தாள்.

ரதி ஏமாற்றத்துடன் ஆய்வாளர் அருகில் சென்றாள்.

இவளைப் பார்த்த ஆய்வாளர் அந்தப் பெண்ணின் பக்கம் கையைக்காட்டி,”இதோ நிக்கிறான் பாரு உன் புருசன்என்றார். 

அப்போதுதான் ரதி அப்பெண்ணை முழுமையாகப் பார்த்தாள்தலை சுற்றி பூமியே காலடியில் நழுவுவது போலிருந்தது.

அது அவள் புருசன் ராஜன்தான்.ஆனால் புருசன் அல்ல!புடவை கட்டிப் பொட்டு வைத்து பெண்களுக்குரிய அணிகளுடன் அவன் -அவள்நின்றிருந்தாள்-ராஜியாக!

ஆய்வாளர் தந்த தகவல்களிலிருந்து அவள் அறிந்தது--

அவள் கணவனுக்குத் திருமணத்துக்கு முன்பே பெண்மை உனர்வுகள் அதிகம் இருந்ததாம்; அவன் விருப்பத்துக்கு மாறாக அவனுக்குத்  திருமணம் செய்துவைத்து விட்டனர்.மும்பாய் சென்ற போது அவன் கனவு நனவாகியது.அங்கு அறுவை சிகிச்சை மூலம் அவன் ராஜியாகி விட்டான். இவ்வாறு வாழ்வதுதான்  அவனுக்கு விருப்பமாம்.இதெல்லாம் மாஜிஸ்ட்ரேட் முன்னிலையில் அவன் சொன்னது.

மனமுடைந்து போன ரதி தன் உறவினர்களுடன் சொந்த ஊருக்குத் திரும்பினாள்

இது கதையல்ல.சித்திரிக்கப்பட்ட விதம் கற்பனை!அடிப்படை நிகழ்வு உண்மை.

டைம்ஸ் ஆஃப் இந்தியா 7-10-2012 இல் வந்த செய்தியே ஆதாரம்!

இது பற்றித் திருநங்கைகளுக்காகப் போராடும் கல்கி அவர்கள் கூறும்போது.”விருப்பமின்றி மணம் புரிந்து ஒரு குழந்தையும் பெற்ற பின்   குற்றமற்ற இருவரையும் தவிக்க விட்டுப் போனது சரியல்ல. அப்பெண்ணுக்கும் குழந்தைக்கும் நியாயம் கிடைக்க வேண்டும்.அதே நேரம்,சமூகமும்,சட்டமும்  இது போன்றவர்களின் (திருநங்கைகளின்) பிரச்சினையை, அனுதாபத்துடனும்,நியாயமாகவும் அணுக வேண்டும்”

எனக்கு ஒரே ஒரு கேள்வி.திருமணத்துக்கு முன்பே மண வாழ்வில் நாட்டமின்றிப் பெண்மை உனர்வுகள் நிறைந்த ஒருவன்,மணவாழ்வில் ஆண்மையுடனும் செயல் பட்டிருக்கிறான் என்பது குழந்தை பிறந்ததன் மூலம் தெரிகிறது.அவ்வாறாயின்,அவன் முயற்சி செய்து,மருத்துவ, மனோதத்துவ உதவியும் நாடியிருந்தால் சரி செய்து கொண்டிருக்க முடியுமா?

டிஸ்கி:ஒரு மனைவியின் கணவன் பெண்ணாக மாறினால் என்ன சொல்வது?கணவி?!

20 comments:

 1. அவனால் குழந்தை கொடுத்திருக்க முடியாது.

  ReplyDelete
  Replies
  1. இருக்கலாம்!
   நன்றி ஐயா

   Delete
 2. நம்ப முடியாத செய்தியாக இருக்கிறது.சமயங்களில் உண்மைகள் கற்பனைகளை விட விசித்திரமானவை.

  ReplyDelete
 3. இத்தனை விரைவில் மாற்றம் வர சாத்தியமா ?
  புரியவில்லை.வித்தியாசமான நிகழ்வுகளை
  மிக மிக அழகாக சுருக்கமாக பதிவாக்கித் தருவது
  மனம் கவர்ந்தது
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 4. விந்தையான செய்திதான். அவன் மனநல மருத்துவரை நாடியிருந்தால் நலம் என்பதுதான் என் கருத்தும். நானும் இனி டைம்ஸ் ஆஃப் இந்தியா படிக்கலாம்னு இருக்கேன். குட்டனுக்கு நிறையப் பதிவு அதிலருந்து கிடைக்குதே ஹி... ஹி...

  ReplyDelete
  Replies
  1. தினம் ஒண்ணாவது நிச்சயம் கிடைக்கும்!
   நன்றி பாலகணேஷ்

   Delete
 5. உங்கள் கேள்வி நியாயமானது.

  அவன் சிகிச்சை பெறத் தவறியது ஏன் என்று புரியவில்ல.

  ஒரு வேளை............

  அவனுக்கு ஆண்மைக் குறைவு என்பதால், குழந்தை வேறு யாருக்கேனும் பிறந்து, அதனால் மனம் வெறுத்து வெளியேறியிருப்பானோ?

  இம்மாதிரி, புரிந்து கொள்ள முடியாத சம்பவங்கள் நாட்டில் நடக்கவே செய்கின்றன!

  ReplyDelete
 6. குழந்தை அவனுக்குப் பிறந்திருந்தால் அவன் திருநங்கையாக இருந்திருக்க வாய்ப்பில்லை. சந்திரமுகி ஜோதிகா மாதிரி ஏதோ மனவியாதிதான் சரி படுத்தப் பட்டிருக்க வேண்டும். ஆனால், எந்த அளவுக்கு அவருக்கு செய்யப் படும் வைத்தியம் எடுபடும் என்பதுதான் புரியாத புதிராக இருக்கிறது!!

  ReplyDelete
 7. அதுதான் புரியவில்லை.
  நன்றி

  ReplyDelete
 8. கணவி அல்ல!

  கண்றாவி!?

  ReplyDelete
 9. புரியவில்லை ஒரு குழந்தைக்காகவாவது சிந்தித்திருக்கலாம்.

  ReplyDelete
 10. திருமணம் முன்பே பெண்தன்மையை உணர்ந்தவர் என்றால் கண்டிப்பாக ஒரு பெண்ணை திருமணம் செய்துகொள்ள அவர் சம்மதித்து இருக்க கூடாது. அப்படி திருமணம் ஆன பின்பு அவர் பாலியல் மாற்று சிகிச்சை செய்து கொண்டது நியாயமான விஷயம் அல்ல..

  ReplyDelete
  Replies
  1. சரியாகச் சொன்னீர்கள் ஆயிஷா ஃபரூக்
   நன்றி

   Delete