இராஜ நாகம்
உங்கள் வீட்டிலோ,தோட்டத்திலோ ஒரு
நல்ல பாம்பைப் பார்த்தால் என்ன செய்வீர்கள்!
அடித்துக் கொல்வீர்களா,மாட்டீர்களா?
சமீபத்தில்,ஒரு கிராமத்தில் தன்
வயலில் ஒரு பெரிய நல்ல பாம்பைப் பார்த்த விவசாயி ஒருவர், அதைத் துரத்தி அடித்துக்
கொன்று விட்டார்.
ஆனால் அதற்காக அவர்
தண்டனைக்குள்ளாகியிருக்கிறார்!
கிராமப் பஞ்சாயத்தால் அல்ல!சட்டத்தால்.வனவிலங்குப்
பாதுகாப்புச் சட்டத்தால்!
ஏனெனில் அவர் கொன்றது ஒரு
இராஜநாகம்!
பாதுகாக்கப் பட வேண்டிய உயிரினம்.
அதைக் கொன்றது சட்டப்படி குற்றம்!
இங்குதான் சில கேள்விகள் எழுகின்றன.
வயலில் வேலை செய்ய வந்தவர் பெரிய
பாம்பைப் பார்க்கிறார்,அப்போதில்லா விடினும், பிறகு எப்போதாவது அவருக்கு அந்தப்
பாம்பால் தீங்கு நேரலாம்.
மனிதனின் பாதுகாப்பு உணர்வு என்ன
சொல்கிறது.-கொல்!
கொன்று விடுகிறார்.
அவருக்குத் தெரியாது அது ராஜ நாகம்
என்று.
சாதாரணமாக ராஜ நாகம்,மேற்குத்
தொடர்ச்சி மலைக் காடுகளில்தான் வாழும்;வெளியே வருவதில்லை.
அதைப் பிடித்துப் பாம்புப்
பண்ணையில் வைத்தாலும் அதற்கு ஏ.சி. வசதி தேவையாகிறது.
அப்படிப்பட்ட ஒரு பாம்பு அங்கு வந்தது
வனத்துறைக்கே வியப்பை அளித்தது!
சரணாலயத்தில் இருக்கும்
விலங்கு,பறவைகளைத் திட்டமிட்டு லாபத்துக்காகக் கொல்பவர்கள் தண்டிக்கப் பட
வேண்டியவர்களே.
ஆனால் தன் வயலில்,தனக்கு ஊறு விளைவிக்கக்
கூடிய ஒரு பாம்பை.அது ராஜநாகம் என்று அறியாமலே, எந்த விதமான லாப நோக்கமும்
இல்லாமல் தற்காப்புக்காகக் கொன்ற ஒருவர்,தண்டிக்கப்படுவது சரியா?
மனித உயிர்க் கொலையில் கூட,ஐ.பி.சி.யில்
கொலையில்லாக் கொடுந்துன்பம் என்று ஒன்று இருக்கிறது .(culpable
homicide not amounting to murder—sec-299 of IPC).
அப்படியிருக்கத் தினம் தான் வேலை
செய்ய நேரும் வயலில் பாம்பைப் பார்த்த ஒருவர், தன்னைக் காத்துக் கொள்ள,அதுவும் அது
காக்கப்பட்ட உயிரினம் ஆகிய ராஜ நாகம் என அறியாமல், அதைக் கொன்றது தண்டனைகுரியதா?
கொல்லப்பட்ட சூழ்நிலை என்ன?கொன்ற
நோக்கம் என்ன என்பவை கவனிக்கத்தக்கவை அல்லவா?
என்ன நினைக்கிறீர்கள்?
டிஸ்கி:இந்தச்சம்பவத்தில் பின்னர் என்ன நடந்தது என்பது தெரியவில்லை.
விவசாயிகளின் நண்பன் என்று நல்ல பாம்புகளை சொல்வார்கள்..
ReplyDeleteஒரு விவசாயி அதை கொண்றுவிட்டார் என்றால் ஆச்சரியம்தான்...
விவசாய நிலத்தில் இருக்கும் விளைச்சலுக்கு தீங்கு விளைவிக்கும் எலிகளை அழிக்க கூடிய ஒரு உயிரினம் பாம்புகள் தான்...
அழியக்கூடிய உயிரினங்களை காக்க வேண்டியது நம்கடமை..
சூழ்நிலையைக் கருத்தில் கொள்ள வேண்டாமா?
Deleteநன்றி சௌந்தர்
சட்டங்களும், ஆட்சிகளும் மனிதர்களுக்காத்தான் என்பதை என்று இந்த பிடிவாதக்காரர்கள் உணர்வார்களோ தெரியவில்லை? எல்லாவற்றைப் பார்க்கிலும் மனித உயிரே விலைமதிப்பில்லாதது. ஒரு பாம்புக்கு காட்டுகிற இரக்கத்தை ஒரு பெரியவரிடம் காட்டாத இந்த அமைப்புகளைக் கண்டு எரிச்சல்தான் வருகிறது. இதே போல்தான் பாம்புகடிக்கு மருந்து தயாரிப்பதற்காக குதிரைகளை சித்திவதைப்படுத்தக் கூடாது என்று சட்டம் செய்து மனித உயிர்களை கேலிக்குள்ளாக்கினார்கள். இன்று மருத்துவமனைகளில் கடும் தட்டுப்பாடு. வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்ய வேண்டியிருக்கிறது. என்று திருந்துவார்கள் இவர்கள்? அருமையான பதிவு.
ReplyDeleteநன்றி துரை டேனியல் சார்
Deleteதன்னைக் காத்துக் கொள்ள அந்த சமயம் அது ராஜ நாகம் அல்லது சாதா நாகம் என்று ஆராய முடியுமா...?
ReplyDeleteஅதுதான் கேள்வி!
Deleteநன்றி தனபாலன்
சரியானக் கேள்வி...நல்ல கட்டுரை
ReplyDeleteநன்றி படைப்பாளி
Deleteஉயிரினங்கள் பாதுகாக்கப்பட வேண்டியதுதான்.ஆனால்,மனித உயிரினம் அதை விட மேலானது பாம்பின் மேல் காட்டுகிற இரக்கம் கூட மனிதனின் மேல் இல்லையா?
ReplyDeleteநல்லாக்கேட்டீங்க!
Deleteநன்றி
(தன்)உயிர் காக்க (பாம்பை)கொலை செய்ய துணிந்தவருக்கு தன் செயலை நியாப்படுத்த லஞ்சம் கொடுக்க தெரியாமல் போனது துரதிர்ஷ்டமே. சட்டம் தன் கடமையை செய்து விட்டது.(அதன் பின்) நடந்தது என்ன என தெரிந்தவர்கள் பின்னூட்டமிடுங்கள்.
ReplyDeleteநன்றி சேக்காளி
Deleteஉங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
ReplyDeleteமேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/10/blog-post_6.html) சென்று பார்க்கவும்...
நன்றி…
பார்த்தேன்;மகிழ்ந்தேன்
Deleteநன்றி தனபாலன்
எலியை அஹிக்கிரதுள் கூடவே விவசாயியையும் அழக்கிறது!
ReplyDeleteபட்டினி கிடந்த செத்த விவசாயிகளை விட பாம்பு கடிச்சு செத்த விவசாயி தான் அதிகம்.
சென்னையில் இருக்கும் மருத்தவமனையில் பாம்புகடி மருந்து உண்டு; வயல்கள் சூழ்ந்துள்ள பழனி மருத்தவமனையில் பாம்புகடி மருந்து கிடையாது!
All of these stupid policy decisions are due to idiotic IAS officers!
//கவிதை வீதி... // சௌந்தர் //6 October 2012 12:08 PM
விவசாயிகளின் நண்பன் என்று நல்ல பாம்புகளை சொல்வார்கள்..//
நன்றி நம்பள்கி
Deleteபாம்பை நிறையப் பேர் கொன்றுகொண்டுதான் இருக்கிறார்கள் எல்லோருக்கும் தண்டனை கொடுப்பது இயலாது.பயம் காரணமாகவே கொன்றிருக்கிறார்.இதற்கு தண்டனை கொடுத்தது கொஞ்சம் ஓவர்தான்.
ReplyDeleteநன்றி முரளிதரன்
Deleteநன்றி ஐயா
ReplyDelete// வயலில் வேலை செய்ய வந்தவர் பெரிய பாம்பைப் பார்க்கிறார்,அப்போதில்லா விடினும், பிறகு எப்போதாவது அவருக்கு அந்தப் பாம்பால் தீங்கு நேரலாம். //
ReplyDeleteநீங்கள் சொன்னதுதான் உண்மையான நிலவரம். அந்த நேரத்தில் நமக்கு மத நம்பிக்கையோ மற்றவையோ நம் கண்முன் தோன்றுவதில்லை. பயம். உயிர்ப் பயம் மட்டுமே. ஒருவர் எல்லையை ஒருவர் தாண்டும்போது ஒருவருக்கொருவர் விரோதி ஆகி விடுகிறோம்.
உன்மை அய்யா,
Deleteநன்றி
பொழுது போக்குக்காகவா கொன்றார்? தன் உயிருக்குப் பங்கம் நேராமல் இருக்கத்தானே.
ReplyDeleteஇம்மாதிரி விசித்திரச் சட்டங்கள் திருத்தப்பட வேண்டும்.
நல்ல பதிவு குட்டன்.
நன்றி அறுவை மருத்துவன்
Deleteபாம்பு விவசாயின் நண்பன் என்றாலும்; உயிர் பயத்தில் நடந்துவிட்ட இந்த சம்பவத்திற்கு தண்டனை தருவது ஏற்று கொள்ளக்கூடியதாக இல்லை.!
ReplyDeleteநிச்சயமாக!
Deleteநன்றி காட்டான்
o.k பிறகு என்ன நடந்தது. இதை யாரிடம் கேட்பது...?
ReplyDeleteநல்ல கேள்வி தான்..மேலே என்ன எழுத என்று தெரியவில்லை..
ஆயினும் பதிவுக்கு நன்றி.
வேதா. இலங்காதிலகம்.
நல்லதே நடந்ததென்று நம்புவோம்.
Deleteநன்றி கோவைக்கவி
கடிக்கும் என்ற உயிர் பயத்தில்தானே கொன்றிருக்கிறார்.
ReplyDeleteஆம்!அதற்குத்தண்டனையா?
Deleteநன்றி மாதேவி
அருமை சகோ எங்க பக்கமும் வந்து போங்க நட்பு வளர்துக்குவோம்
ReplyDeleteநன்றி மோகன் .கண்டிப்பாக வருகிறேன்.
Delete