Friday, October 5, 2012

engliஷ் vingliஷ்!-ஒரு பார்வைஅது என்ன engliஷ்,vingliஷ்?!

நாம் தமிழில் பேசும்போது சில நேரங்களில் பாட்டு-கீட்டு,பேச்சு-கீச்சு என்ற தொடர் சொற்கள் பயன் படுத்துவோம் இல்லையா?

அது போலத்தான் இந்தி பேசுவோர் கானா-வானா,சீனி-வீனி என்ற தொடர்களை உபயோகிக் கிறார்கள்.

அந்த மாதிரிதான் இங்க்லிஷ்-விங்க்லிஷ் ஷும்!

நாம் என்னதான் ஆங்கிலத்தில் தேர்ச்சி பெற்றிருந்தாலும், பெரும்பான்மையானவர், ஆங்கிலத்தில் பேசும்போது,தாய் மொழியில் சிந்தித்துப் பின் அதை ஆங்கிலத்தில் மனத்துக்குள் மொழி பெயர்த்தே பேசுகின்றனர்.எனவேதான் தமிழன் பேசும் ஆங்கிலம் தங்க்லிஷ்ஷாகவும், ஹிந்திக்காரர்கள் பேசும் ஆங்கிலம் ஹிங்லிஷ்ஷாகவும் மாறி விடுகிறது!

என் கேரள நண்பர் ஒருவர் யாரையாவது எதிர்பார்த்தால்”sometimes,he may come today” என்று சொல்வார்,ஹி மே கம் டுடே என்று சொன்னால் போதுமானது; அந்த சம்டைம்ஸ்  ஏன்  வந்தது?மலையாள மொழியில் பேசும்போது,”சிலப்பம் இன்னு காணும்”என்று சொல்கிறார்கள்.  அந்த சிலப்பம் என்பது ஆங்கிலத்தில் sometimes ஆகி விட்டது!

இதுதான் பிரச்சினையே.சிந்திப்பது தாய்மொழியில் எனும்போது,பேசும் ஆங்கிலமும் அந்தப் பாதிப்பிலேயே வெளிவந்து விடுகின்றது.

ஆயினும் இந்த ஆங்கில மோகம் என்பது தமிழனை விட்டபாடில்லை.என் பயணங்களில் நான் பார்த்தவரை,பிறமாநிலத்தவர்கள்  சந்திக்கும்போது அவரவர் தாய் மொழியிலேயே உரையா டுவர்: ஆனால் தமிழர்கள்மட்டும் ஆங்கிலத்தின் துணை நாடுவர்.

எனக்குத் தெரிந்த பெண் ஒருத்தி.அவளைப்பெண்பார்க்க வந்த பையன் அவளுக்குச் சரளமாக ஆங்கிலத்தில் பேசத்தெரியவில்லை எனச் சொல்ல ,அதன் பின் அந்தப் பெண் ஒரு பயிற்சி வகுப்பில் சேர்ந்து ஆங்கிலத்தில் பேச்க கற்றுக் கொண்டாள்----இங்க்லிsh விங்க்லிsh  ஸ்ரீதேவி போல!  

இந்தப்பட்த்தைப் பொறுத்தவரை டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் படத்தை வெகுவாகப் பாராட்டி விமரிசனம் எழுதியிருக்கிறார்கள்.

என்ன இருந்தாலும் ஆங்கிலம் நமக்கு அந்நிய மொழிதானே!  தாய் மொழியின் சரளத்தை அதில் பெற முடியுமா?!

24 comments:

 1. நிஜம்தான் குட்டன். தாய்மொழி என்பதற்காக ஆங்கிலம் கலக்காமல் சுத்தத் தமிழ் பேசினாலும் ‘ஒரு மாதிரி‘ பார்க்கிறார்களே... என் செய்ய...? அதனாற்றானே பிற மொழியும் கலந்து பேச வேண்டியதிருக்கிறது. அருமையான அலசல்.

  ReplyDelete
 2. பொழிகள் நமக்கு தெரியாத வரை மட்டுமே அது அந்நியமாக இருக்கும்...

  படம் எப்படி இருக்கிறது என்று தெரிய வில்லை பார்ப்போம்..

  ReplyDelete
 3. #என் பயணங்களில் நான் பார்த்தவரை,பிறமாநிலத்தவர்கள் சந்திக்கும்போது அவரவர் தாய் மொழியிலேயே உரையா டுவர்: ஆனால் தமிழர்கள்மட்டும் ஆங்கிலத்தின் துணை நாடுவர்.#

  உண்மையோ உண்மை

  ReplyDelete
 4. #என் பயணங்களில் நான் பார்த்தவரை,பிறமாநிலத்தவர்கள் சந்திக்கும்போது அவரவர் தாய் மொழியிலேயே உரையா டுவர்: ஆனால் தமிழர்கள்மட்டும் ஆங்கிலத்தின் துணை நாடுவர்.
  #
  உண்மையோ உண்மை

  ReplyDelete
 5. //என்ன இருந்தாலும் ஆங்கிலம் நமக்கு அந்நிய மொழிதானே! தாய் மொழியின் சரளத்தை அதில் பெற முடியுமா?!//

  சரியா சொன்னீங்க....

  ReplyDelete
 6. என்னதான் ஆயிரம் மொழி இருந்தாலும் தாய் மொழியில் பேசும் போது கிடைக்கும் தெளிவும் சந்தோஷமும் மற்ற மொழிகளில் கிடைப்பதில்லையே
  ( இவருக்கு இங்கிலீசு தெரியாதத்துக்கு போடுற பில்டப்புப்பா இது)

  ReplyDelete
  Replies
  1. நன்றி சிட்டுக்குருவி

   Delete
 7. மிகச்சரியா தான் சொன்னீங்க ஆனாலும் யார் தான் உணர்வார்கள்.

  நேரம் இருப்பின்
  http://veesuthendral.blogspot.com/2012/03/blog-post_09.html
  என் ஆதங்கத்தையும் பாருங்க.

  ReplyDelete
 8. இங்க்லீஷ் மோகம்....:(

  நிறைய பேருக்கு இருக்கு குட்டன்....

  ReplyDelete
 9. அருமையான,தேவையான கட்டுரை ...தாய்மொழியின் மதிப்பரியாதவன் தாயை மதிக்காதவனுக்கு சமம்..

  ReplyDelete
 10. //என் பயணங்களில் நான் பார்த்தவரை,பிறமாநிலத்தவர்கள் சந்திக்கும்போது அவரவர் தாய் மொழியிலேயே உரையா டுவர்: ஆனால் தமிழர்கள்மட்டும் ஆங்கிலத்தின் துணை நாடுவர்.//

  ஹிஹி ! மிகச் சரியே !!! ஆனால் இதில் ஒரு உள் விடயம் உள்ளது. தமிழில் பேசும் போது பொதுத் தமிழில் பேசினால் பரவாயில்லை. வட்டார வழக்குகளுக்குள் புதையும் போது, நீ எந்த சாதி, மதம், ஊர் என்ற பிண்ணாக்கு கேள்விகள் எழுந்துவிடுவதுண்டு, அது தான் நெருடும் பல சந்தர்ப்பங்களில்

  ReplyDelete
  Replies
  1. உண்மைதான்
   நன்றி இக்பால் செல்வன்

   Delete
 11. பயனுள்ள ஆய்வு.

  ’தமிழனுக்குத் தாய்மொழிப் பற்றில்லை’என்று ஆயிரம் முறை சொன்னாலும் அவன் திருந்தப் போவதில்ல!

  ReplyDelete
  Replies
  1. நன்றி அறுவை மருத்துவன்

   Delete
 12. engliஷ் vingliஷ்!-ஒரு பார்வை
  சபாஷ் சொல்லவைக்கிறது..

  ReplyDelete