Wednesday, October 17, 2012

சிறப்புச் செய்திகள்-வாசிப்பது குட்டன்!ராமு:என்ன சோமு ?ரொம்ப கவலையோடு காப்படுறே?

சோமு:எல்லாம் குழந்தையில்லாக்கவலைதான்.கல்யாம் ஆகி 10 வருசம் ஆச்சு இன்னும் குழந்தையில்லை.எல்லா டாக்டரையும் பாத்தாச்சு.ஒரு குறையும் இல்லை ரெண்டு பேர் கிட்டயும்னு சொல்லீட்டாங்க.எல்லாக் கோயிலுக்கும் போயாச்சு;ஒண்ணும் பிரயோசனம் இல்லை. வயசும் எனக்கு 40,அவளுக்கு 35 ஆச்சு.இன்னைக்குப்பாரு,பக்கத்து வீட்டில  குழந்தைக்குத் தொட்டில் விழா.எல்லாப் பெண்களையும் கூப்பிட்டிருக்காங்க;என் மனைவியைக் கூப்பிடலை. அவ அழுதுகிட்டே இருக்கா!அதான் ரொம்ப வருத்தமா இருக்கு.

ராமு:இதுக்கு ஏம்பா இவ்வளவு வருத்தப்படறே?40 வயசெல்லாம் ஒரு வயசா?ஹரியானாவில் ஒருத்தருக்குக் குழந்தை பிறந்திருக்கு;இரண்டாவது குழந்தை .அவர் வயசு என்ன தெரியுமா?96!ரெண்டு வருசத்துக்கு முன்னாலே  முதல் குழந்தை பிறந்ததாம்.குழந்தை வேணும்னு உறுதியோட இருந்தாராம்;ரெண்டு பிறந்தாச்சு.உனக்கும் பிறக்கும்; நம்பிக்கையோடு இரு.எதிர்மறை எண்ணங்களுக்கு ரெண்டு பேருமே இடம் கொடுக்காதீங்க!

சோமு:ரொம்ப நன்றி ராமு.மனசு கொஞ்சம் லேசான மாதிரி இருக்கு. ஆமாம் நீ எப்பவும் போல டி.வி நிறைய பாத்துக்கிட்டுதான் இருக்கயா?

ராமு:ஆமாம்பா.ராத்திரி மூணு மணி நேரமாவது ரெண்டு பேரும் டி.வி. பார்ப்போம். வேறென்ன தான் செய்ய?

சோமு:நான் ஒரு செய்தி படிச்சேன்.ஒரு மணி நேரம் டி.வி பார்த்தா வாழ்நாளில் 22 நிமிடம் குறையுமாம்!ஒரு நாளைக்கு 3 மணி நேரம்னா, 66 நிமிடம்-அதாவது ஒரு மணி நேரமாவது குறையும்.ஒரு வருசத்துல 365 மணி நேரம் அதாவது 15 நாட்களுக்கு மேல்.60 வருசம் வாழ்க்கைன்னால்  30 மாதம் வாழ்நாள் குறைந்து விடும். பார்த்துக்கோப்பா!

ராமு:அய்யோ!இது வேறயா?இனிமே குறைச்சிடறேன்.இன்னொரு  நகைச்சுவையான செய்திஇதுவும் ஹரியானாதான்.ஒரு காப் பஞ்சாயத்தில சொல்லிருக்காங்க.பசங்கல்லாம் இந்தச் சீன உணவான சௌ மீன் –நூடில்ஸ்- அதிகம் சாப்ப்டறதாலதான் அங்கு கற்பழிப்புகளெல்லாம் அதிகமா நடக்குதாம்!எப்படியிருக்கு?காரணம் கண்டு பிடிக்க ரூம் போட்டு யோசிப்பாய்ங்க போல!

 அப்புறம் சொல்ல மறந்துட்டேனே;அந்த ஹரியானா வயசானவர் தினம் 2லிட்டர் பசும்பால் குடிக்கறாராம்! நல்ல பச்சைக் காய்கறி சப்பாத்தி இதெல்லாம் அவர் உணவாம்!குறிச்சு வச்சுக்கோ!
வர்ட்டா!


26 comments:

 1. நாட்டு நடப்பு

  ஆச்சரிய தகவலுடன் நல்லதொரு உரையாடல்...

  இன்னும் நூறு வருஷம் வாழட்டும் அந்த பெரியவர்...

  ReplyDelete
  Replies
  1. ஆமென்!
   நன்றி ஆசிரியரே!

   Delete
 2. உரையாடல் பாணியில் விஷயங்கள் சொன்ன விதம் அருமை. நான் தொலைக்காட்சி பார்க்கிற் வழக்கமில்லை. எதேச்சையாக எதிர் கொள்ளும் போது பழைய திரைப்படப் பாடல்கள் மட்டும் அரை மணி நேர அளவுதான் பார்ப்பேன் என்பதால் தப்பித்தேன். கற்பழிப்புக்கும மீன் நூடுல்ஸக்கும் சம்பந்தம் இருக்கான்றது ஆச்சரியம்னா. அந்த முதியவருக்கு குழந்தை பிறந்தது இன்னொது ஆச்சரியம். தொடர்ந்து செய்திகள் வாசிங்க குட்டன். நல்லாயிருக்கு.

  ReplyDelete
  Replies
  1. வாசிச்சிருவோம்!
   நன்றி பால கணேஷ்

   Delete
 3. அடடா! அலுப்பில்லாமல் நல்ல செய்திகளை அறிந்துகொள்ள முடிந்தது!

  ReplyDelete
 4. டிவி பற்றிய தகவல் சிறப்பு.

  ReplyDelete
 5. சிறப்பான பதிவு.
  உரை நடையுடன் நல்ல தகவல்களைச் சொல்லியிருக்கிறீர்கள் (7)

  ReplyDelete
  Replies
  1. நன்றி சிட்டுக்குருவி

   Delete
 6. நல்ல நல்ல செய்திகள் குட்டன்.

  ReplyDelete
 7. முதல் இரண்டு செய்திகளும் நம் ஊர் செய்தித்தாளில் படித்தேன். இறுதிச்செய்தி புதியது.

  ReplyDelete
 8. நல்ல பகிர்வு. எங்க ஊர் பக்க செய்திகள்! :)

  ReplyDelete
 9. நல்ல நல்ல செய்திகள் குட்டன்/பித்தர்(?)...

  ReplyDelete
 10. எல்லா செய்திகளும் அருமை. சொன்னவிதமும் அருமை. டி.வி. பார்ப்பது இவ்வளவு கேடா? ஓ.கே.

  ReplyDelete
 11. செய்திகள் வாசித்த குட்டனுக்கு பாராட்டுக்கள்..

  ReplyDelete
 12. \\சோமு:நான் ஒரு செய்தி படிச்சேன்.ஒரு மணி நேரம் டி.வி பார்த்தா வாழ்நாளில் 22 நிமிடம் குறையுமாம்!ஒரு நாளைக்கு 3 மணி நேரம்னா, 66 நிமிடம்-அதாவது ஒரு மணி நேரமாவது குறையும்.ஒரு வருசத்துல 365 மணி நேரம் அதாவது 15 நாட்களுக்கு மேல்.60 வருசம் வாழ்க்கைன்னால் 30 மாதம் வாழ்நாள் குறைந்து விடும். பார்த்துக்கோப்பா!\\ நிஜமாவா சொல்றீங்க அப்போ கம்பியூட்டர் முன்னாடி உட்கார்ந்திருந்தா என்னவாகுமாம்?

  ReplyDelete