Thursday, August 22, 2013

பதிவர் திருவிழா-2013- முன்னோட்டம்-ரவுண்ட் அப்-ஒன்று



என்ன அக்கா?கடைத்தெருவுக்குப் போறீங்களாக்கும்?

ஆமா!ஒரு புடவை எடுக்கலாம்னு போறேன்.

புதுப் புடவை எடுக்க இப்ப என்ன விசேசம் அக்கா?

செப்டம்பர் 1ஆம் தேதி பதிவர் திருவிழா வருதில்ல!அதுக்குப் போகும்போது கட்டிட்டுப் போகத்தான்!

உங்க கிட்டதான் நெறய பட்டுப் புடவ இருக்கில்ல?அதுல ஒண்ணைக்
 கட்டிக் கிட்டுப் போக வேண்டியதுதானே?

சேச்சே!பட்டெல்லாம் கோவில் திருவிழா ,கல்யாணம் ,காதுகுத்துன்னு எதுனாச் சும்னா கட்டிக்கலாம்.இது சிந்திக்கிறவங்க திருவிழா.அங்கே போகையில, உடை  நல்லா அம்சமா இருக்கணும் ;ஆனா பகட்ட இருக்கக்கூடாது. அதுக்குத் தான் சில்க் காட்டன் புடவை வாங்கப் போறேன்
 
சரி அக்கா நான் பெறவு வந்து பாக்குறேன்.

--------------------------------------------------------------------------

 ஏங்க?1ஆம் தேதிதானே உங்க பதிவர் திருவிழா?

ஆமா.

நீங்கதானே எல்லா வேலையும் இழுத்துப்போட்டுச் செஞ்சிக்கிட்டு இருக்கீங்க!

நான் மட்டும் இல்லடி!இன்னும் நெறய பேர் இருக்காங்க!

என்னையும் கூட்டிட்டுப் போகலாமில்ல?

உன்னையா?நீ அங்கு வந்து என்ன செய்யப்போறே?(உனக்குத் தெரியாம அசைவம் சாப்பிடறதைக் கண்டு பிடிச்சிடுவயே!)

இல்லீங்க!மதியம் பாட்டெல்லாம் பாடப் போறாங்களாமில்ல!நானும் ஒரு 
பாட்டுப் பாடலா மின்னுதான்.

என்னது நீயா?(சந்திப்பைக் கலைக்கச் சதியா!).நீ வேணா ஜனகணமன பாடலாம்.அதுக்கப்புறம் கூட்டம் கலைய வேண்டியதுதானே!
------------------------------------------------------------------------
 என்ன அக்கா,புதுசா ஹாட்பேக் எல்லாம் வாங்கியிருக்கீங்க?

என் பதிவில ஒரு பலகாரம் செய்முறை பத்திச் சொல்லியிருந்தேன்.அதைப் படிச்சிட்டு,நெறயப்பேர் திருவிழாவுக்கு வரும்போது செஞ்சு எடுத்திட்டு  வரச் சொல்லியிருக்காங்க!சகோதர சகோதரிகளோட அன்பு வேண்டு கோளை மறுக்க முடியுமா?அதனால,1 ஆம் தேதி காலையில மூணு மணிக்கே எழுந்தி ருச்சி.பலகாரம் செய்து,ஆறாம இருக்க ஹாட்பேக்கில போட்டு எடுத்திட்டுப் போகப் போறேன்.பத்துப் பதினோரு மணிக்குக் காப்பி/டீ கொடுப்பாங்க.அப்ப இதையும் எல்லாருக்கும் கொடுக்கலாம்னு இருக்கேன்!

------------------------------------------------------

22 comments:

  1. நல்லாச் சொல்லியிருக்கிறீங்க போங்க... :)

    ReplyDelete
  2. //மூணு மணிக்கே எழுந்தி ருச்சி.பலகாரம் செய்து,-------- எல்லாருக்கும் கொடுக்கலாம்னு இருக்கேன்! //

    200 பேருக்கு மேல் பதிவர் சந்திப்பி‌ல் கலந்துகொள்ள இருப்பதால், ஒரு ஹாட் பேக்கில் கொண்டு வரும் இனிப்பை எல்லோருக்கும் கொடுக்கமுடியுமா/

    ReplyDelete
  3. "ஹாட்பேக்கில போட்டு”--பேசும்போது ஹாட் பேக்குகளில என்று சொல்வதில்லை.இதனால் அறிவது என்னவென்றால்,பெரியதாகச் சில ஹாட் பேக்குகள்!
    நன்றி சார்

    ReplyDelete
  4. கார போண்டாவா?!

    ReplyDelete
    Replies
    1. அப்படியா?
      நன்றி காஷ்யபன்

      Delete
  5. 3 மணிக்கு எழுந்தா மட்டும் செஞ்சுட முடியுமா?!

    ReplyDelete
    Replies
    1. செய்யப் போறது யாரு?!!அவங்களாலே எல்லாம் முடியும்!
      நன்றி

      Delete
  6. பதிவர் சந்திப்பில் கலந்துக்க முடியாதோன்னு கவலைப்பட்டிடிருக்கேன்.

    அசைவம், பலகாரம் பச்சடியெல்லாம் கிடைக்கும்னு சொல்றீங்க.

    அதையெல்லாம் இழக்கப் போறமேன்னு நினைச்சதும் கவலை அதிகமாயிடிச்சி.

    //பேசும்போது ஹாட்பேக்குகளில்னு சொல்றதில்லை// சூப்பர் சமாளிப்பு.

    ReplyDelete
    Replies
    1. சூப்பர் சாப்பாடு காத்துக்கிட்டு இருக்கு!
      நன்றி காமக்கிழத்தன்

      Delete
  7. உங்களுக்கு ஒரு திண்டுக்கல் பூட்டு பரிசு...! ஹிஹி...

    ReplyDelete
  8. //அதுக்குத் தான் சில்க் காட்டன் புடவை வாங்கப் போறேன்// குட்டனின் அன்புக் கட்டளையா ...

    //.நீ வேணா ஜனகணமன பாடலாம்.// ஹா ஹா ஹா

    ReplyDelete
  9. அப்போ பதிவர் திருவிழாவுக்கு பலகாரம் வருதுங்கறீங்க?

    ReplyDelete
    Replies
    1. கொண்டு வந்தாகணும்!
      நன்றி

      Delete
  10. கலக்குறீங்க இளைங்கரே..

    ReplyDelete
  11. பதிவர் திருவிழாவுக்கு வித்தியாசமான விளம்ம்பரம். அசத்தறீங்க குடன். பலகாரம் கொண்டுவறது உண்மைதானே! ஏமாத்திடாதீங்க!

    ReplyDelete
    Replies
    1. நானே எமாந்து போனால்!
      நன்றி

      Delete
  12. உங்க பதிவைப் படிச்சதும்
    வந்துதான் ஆகணும் போல தோணுதே

    ReplyDelete
    Replies
    1. நீங்க வரதுதான் உறுதியாச்சே!
      நன்றி ரமணி சார்

      Delete